Announcement

Collapse
No announcement yet.

கீதை – நான்காவது அத்தியாயம் -4 [1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – நான்காவது அத்தியாயம் -4 [1]

    கீதை – நான்காவது அத்தியாயம்
    ஞான கர்ம சந்யாச யோகம்



    ‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன்.
    பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.

    श्रीभगवानुवाच
    इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्।
    विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत्॥१॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    இமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்|
    விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்³ரவீத் ||4-1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    இமம் அவ்யயம் யோக³ம் = இந்த அழிவற்ற யோகத்தை
    அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந் = நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
    விவஸ்வாந் மநவே ப்ராஹ = விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்
    மநு: இக்ஷ்வாகவே அப்³ரவீத் = மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
    ________________________________________
    एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः।
    स कालेनेह महता योगो नष्टः परन्तप॥२॥
    ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது³:|
    ஸ காலேநேஹ மஹதா யோகோ³ நஷ்ட: பரந்தப ||4-2||
    பரந்தப = எதிரிகளை எரிப்பவனே !
    ஏவம் பரம்பராப்ராப்தம் = இவ்விதம் வழிவழியாக வந்த
    இமம் ராஜர்ஷய: விது³: = இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்
    ஸ: யோக³ மஹதா காலேந = அந்த யோகம் வெகுகாலமாக
    இஹ நஷ்ட: = இவ்வுலகில் இழக்கப் பட்டது
    இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.
    ________________________________________
    स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः।
    भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्॥३॥
    ஸ ஏவாயம் மயா தேऽத்³ய யோக³: ப்ரோக்த: புராதந:|
    ப⁴க்தோऽஸி மே ஸகா² சேதி ரஹஸ்யம் ஹ்யேதது³த்தமம் ||4-3||
    மே ப⁴க்த: ஸகா² ச அஸி = என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்
    இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக³: = ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை
    அத்³ய மயா தே ப்ரோக்த: = இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது
    ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம் = ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது
    அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.
    ________________________________________
    अर्जुन उवाच
    अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः।
    कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति॥४॥
    அர்ஜுந உவாச
    அபரம் ப⁴வதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:|
    கத²மேதத்³விஜாநீயாம் த்வமாதௌ³ ப்ரோக்தவாநிதி ||4-4||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ப⁴வத: ஜந்ம அபரம் = உன் பிறப்பு பிந்தியது
    விவஸ்வத: ஜந்ம பரம் = விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது
    த்வம் ஆதௌ³ ப்ரோக்தவாந் இதி = நீ இதை ஆதியில் சொன்னவனென்று
    ஏதத் கத²ம் விஜாநீயாம் = நான் தெரிந்துகொள்வதெப்படி?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?
    ________________________________________
    श्रीभगवानुवाच
    बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन।
    तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप॥५॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    ப³ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந|
    தாந்யஹம் வேத³ ஸர்வாணி ந த்வம் வேத்த² பரந்தப ||4-5||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    பரந்தப அர்ஜுந = அர்ஜுனா
    மே தவ ச = எனக்கும் உனக்கும்
    ப³ஹூநி ஜந்மாநி வ்யதீதாநி = பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன
    தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த² = அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்
    அஹம் வேத³ = நான் அறிவேன்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
    ________________________________________
    अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
    प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया॥६॥
    அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|
    ப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||
    அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி = பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்
    பூ⁴தாநாம் ஈஸ்²வர: அபி ஸந் = உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்
    ஸ்வாம் ப்ரக்ருதிம் அதி⁴ஷ்டா²ய = யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று
    ஆத்ம மாயயா ஸம்ப⁴வாமி = என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்
    ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
    ________________________________________
    यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
    अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥७॥
    யதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர்ப⁴வதி பா⁴ரத|
    அப்⁴யுத்தா²நமத⁴ர்மஸ்ய ததா³த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||
    பா⁴ரத யதா³ யதா³ = பாரதா, எப்போதெப்போது
    த⁴ர்மஸ்ய க்³லாநி = தர்மம் அழிந்துபோய்
    அத⁴ர்மஸ்ய அப்⁴யுத்தா²நம் ப⁴வதி = அதர்மம் எழுச்சி பெறுமோ
    ததா³ ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம் = அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்
    பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
    ________________________________________
    परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
    धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे॥८॥
    பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
    த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||
    ஸாதூ⁴நாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்
    து³ஷ்க்ருதாம் விநாஸா²ய ச = தீயன செய்வோரை அழிக்கவும்
    த⁴ர்ம ஸம்ஸ்தா²பநார்தா²ய = அறத்தை நிலை நிறுத்தவும்
    யுகே³ யுகே³ ஸம்ப⁴வாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்
    நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
    ________________________________________
    जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
    त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन॥९॥
    ஜந்ம கர்ம ச மே தி³வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:|
    த்யக்த்வா தே³ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந ||4-9||
    அர்ஜுந! = அர்ஜுனா!
    மே ஜந்ம கர்ம ச தி³வ்யம் = எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது
    ஏவம் ய: தத்த்வத: வேத்தி = இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
    ஸ: தே³ஹம் த்யக்த்வா = உடலைத் துறந்த பின்னர்
    புநர்ஜந்ம ந ஏதி = மறுபிறப்பு எய்துவதில்லை
    மாம் ஏதி = என்னை எய்துகிறான்
    எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
    ________________________________________
    वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः।
    बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः॥१०॥
    வீதராக³ப⁴யக்ரோதா⁴ மந்மயா மாமுபாஸ்²ரிதா:|
    ப³ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்³பா⁴வமாக³தா: ||4-10||
    வீத ராக³ ப⁴ய க்ரோதா⁴= விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்
    மந்மயா: = என் மயமாய்
    மாம் உபாஸ்²ரிதா: = என்னை அடைக்கலம் புகுந்து
    ப³ஹவ: ஜ்ஞாநதபஸா பூதா = ஞானத்தவத்தால் தூய்மை பெற்று
    மத்³பா⁴வம் ஆக³தா: ப³ஹவ: = என்னியல்பு எய்தினோர் பலர்
    விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.
    ________________________________________
    ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
    मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः॥११॥
    யே யதா² மாம் ப்ரபத்³யந்தே தாம்ஸ்ததை²வ ப⁴ஜாம்யஹம்|
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||4-11||
    பார்த² யே மாம் யதா² ப்ரபத்³யந்தே = பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
    தாந் அஹம் ததா² ஏவ ப⁴ஜாமி = அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்
    மநுஷ்யா: ஸர்வஸ²: = மனிதர் யாங்கணும்
    மம வர்த்ம அநுவர்தந்தே = என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
    யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
    ________________________________________
    काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः।
    क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा॥१२॥
    காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்³தி⁴ம் யஜந்த இஹ தே³வதா:|
    க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்³தி⁴ர்ப⁴வதி கர்மஜா ||4-12||
    இஹ மாநுஷே லோகே = இந்த மனிதவுலகத்தில்
    கர்மணாம் ஸித்³தி⁴ம் காங்க்ஷந்த: = தொழில்களில் வெற்றியை விரும்புவோர்
    தே³வதா: யஜந்தே = தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்
    ஹி கர்மஜா ஸித்³தி⁴: = தொழிலினின்றும் வெற்றி
    க்ஷிப்ரம் ப⁴வதி = விரைவில் விளைவதன்றோ!
    தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
    ________________________________________
    चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
    तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्॥१३॥
    சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
    தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||
    கு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
    சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது
    தஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும்
    அவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை
    அகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்
    குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
    ________________________________________
    न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा।
    इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते॥१४॥
    ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப²லே ஸ்ப்ருஹா|
    இதி மாம் யோऽபி⁴ஜாநாதி கர்மபி⁴ர்ந ஸ ப³த்⁴யதே ||4-14||
    மே கர்மப²லே ந ஸ்ப்ருஹா = எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை
    மாம் கர்மாணி ந லிம்பந்தி = என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை
    ய: இதி மாம் அபி⁴ஜாநாதி = இங்ஙனம் என்னை யறிவோன்
    ஸ: கர்மபி⁴: ந ப³த்⁴யதே = கர்மங்களால் கட்டப்பட மாட்டான்
    என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
    ________________________________________
    एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः।
    कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम्॥१५॥
    ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி⁴:|
    குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ||4-15||
    பூர்வை: முமுக்ஷுபி⁴: அபி = முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்
    ஏவம் ஜ்ஞாத்வா = இதையுணர்ந்து
    கர்ம க்ருதம் = தொழிலே செய்தனர்
    தஸ்மாத் த்வம் = அதனால் நீயும்
    பூர்வை: பூர்வதரம் க்ருதம் = முன்னோர்கள் முன்பு செய்தபடி
    கர்ம ஏவ குரு = தொழிலையே செய்யக் கடவாய்.
    முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.
    ________________________________________
    किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः।
    तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्॥१६॥
    கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:|
    தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் ||4-16||
    கிம் கர்ம கிம அகர்ம இதி = எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்
    கவய: அபி அத்ர மோஹிதா: = ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்
    யத் ஜ்ஞாத்வா = எதை தெரிந்து கொள்வதால்
    அஸு²பா⁴த் மோக்ஷ்யஸே = தீங்கினின்றும் விடுபடுவாய்
    தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி = அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்
    ‘எது தொழில்; எது தொழிலல்லாதது’ என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.
    ________________________________________
    कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः।
    अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः॥१७॥
    கர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம் போ³த்³த⁴வ்யம் ச விகர்மண:|
    அகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ||4-17||
    கர்மண: அபி = தொழிலின் இயல்பும்
    போ³த்³த⁴வ்யம் = தெரிய வேண்டும்
    அகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்
    விகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்
    ஹி கர்மண: க³தி: க³ஹநா = ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது
    தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

    Continued

    Source:Sangatham.com
Working...
X