Announcement

Collapse
No announcement yet.

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

    சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை. கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?
    ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது. எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.
    ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.



    பகவான் ரமணர் அவரை பார்த்து, “நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய். ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு. சாணத்தை அள்ளிப்போடு. கோ-சாலையை சுத்தம் செய்!” என்றார்.
    செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு, ஆஸ்ரமத்தின் கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.
    பசுவின் சாணம், கோமியம் ஆகியவை நம் மேல்படுவது, பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும் சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன? தீராத தோல் நோய் உள்ளவர்கள், உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.
    அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே. ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும், பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

    * காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.
    * பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.
    * வீடுகளில் கிரகப் பிரவேசத்தின் போது பசுக்களை உள்ளே அழைத்து வருவது ஏன் தெரியுமா?
    பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.
    மேலும் பசுவானது அந்த கிரகத்தில் நுழையும்போது, அந்த கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியடைகின்றன. பசுவின் மூச்சுக் காற்று, அந்த இல்லத்தில் உள்ள துர்தேவதைகளை விரட்டிவிடும்.
    * நம் வாசகி ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் அவரது உடன்பிறந்த ஒருவர் வீட்டில் அவரது மகன் அகால மரணம் அடைந்தையையொட்டி மனமாற்றத்துக்கு ஏதேனும் பரிகார பூஜை செய்ய விரும்புகிறார்கள் என்றும் என்ன செய்யலாம் என்றும் நம்மிடம் கேட்டார். நாம் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட் இல்லையென்றாலும் நமக்கு தெரிந்த ஒரு தகவலை சொன்னோம்.
    “பரிகாரம், மாந்த்ரீகம், அது இது என்று பணத்தை வீணாக செலவு செய்யவேண்டாம். கணபதி ஹோமமும் நவக்கிரக ஹோமமும் வீட்டில் செய்யச் சொல்லுங்கள். பசுவை கன்றோடு வீட்டுக்கள் அழைத்து வந்து அனைத்து அறைகளுக்கும் அது சென்று அதன் மூச்சு காற்று அந்த கிரகத்தில் தாராளமாக படும்படி செய்யுங்கள். அது போதும். அந்த இல்லத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் போய்விடும்!” என்றோம். (வீடு தரைத் தளத்தில் இல்லாமல் மாடியில் இருப்பவர்கள், கோமியத்தை வாங்கி வந்து, மாவிலை கொண்டு வீடு முழுவதும் தெளிக்கவேண்டும்!)

    மஹா பெரியவா கூறிய அமுத மொழி
    தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். ‘கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம்.
    ‘கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்று பெயர் வந்திருக்கிறது. திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.
    யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
    யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
    யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
    யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.
    மேற்கூறிய மந்திரம் வேதத்திற்கு நிகரான மந்திரம் ஆகும்.
    - See more at: http://rightmantra.com/?p=12694#sthash.WqXIVXYy.dpuf
Working...
X