அந்த சீன ரெஸ்ட்டாரண்ட்டுக்கு ஒரு நடுத்தர வயது ஆசாமி வந்தார். ரெஸ்ட்டாரண்ட்டின் மானேஜரை சந்தித்து, சார் உங்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் தவளைக் கால் சூப் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தவளைக் கால்களை சப்ளை செய்ய முடியும்.

ரெஸ்ட்டாரண்ட் மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. தினமும் நூற்றுக்கணக்குல தவளைக் கால்களை உங்களால் எப்படி சப்ளை செய்ய முடியும்?
என் வீட்டின் அருகே ஒரு பெரிய குட்டை இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான தவளைகள் வசிக்கின்றன. இரவு முழுதும் அவை எழுப்பும் ஒலிகளால் என்னால் தூங்கமுடியவில்லை. எனவே அவற்றை தினமும் உங்களுக்கு பிடித்து தர திட்டமிட்டுள்ளேன்.
இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒப்பந்தத்தின் படி, உணவகத்துக்கு ஒவ்வொரு ஞாயிறும் 500 தவளைகளை இவர் சப்ளை செய்யவேண்டும்.
முதல், ஞாயிறு வந்தது. தவளை பிடித்து கொண்டுவருவதாக சொன்ன ஆசாமி, கையில் மூன்றே மூன்று தவளைகளை மட்டுமே கொண்டு வந்தார்.
எங்கே நீங்கள் கொண்டுவருவதாக சொன்ன 500 தவளைகள்?
என்னை மன்னிக்கணும். அந்த குட்டையில இருந்தது மொத்தம் இந்த மூணே மூணு தவளை தான். ஆனா இதுங்க தான் என்னை இத்தனை நாளா தூங்க விடாம சத்தம் செஞ்சிருக்கணும்! என்றார்.
ஒரு பிரச்சனையின் உண்மையான பரிமாணத்தை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற பயத்திலேயே பலர் காலம்கழிக்கிறார்கள். அடுத்த முறை உங்களை யாராவது குறைகூறினாலோ, தவறாக விமர்சித்தாலோ, அவமதித்தாலோ அல்லது கேலி செய்தாலோ அவர்கள் இது போன்ற ஒரு சில தவளைகளாக இருக்கலாம். நாம் இருளில் இருந்தால் எந்த பிரச்சனையுமே பெரிதாகத் தான் தெரியும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

இந்த தவளைகளின் சத்தம் போல உங்களை கலவரப்படுத்தும் சில விஷயங்களை நினைத்துக்கொண்டே நீங்கள் எப்போதாவது தூங்கப் போயிருக்கிறீர்களா? காலையில் எழுந்து ஜஸ்ட் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும், இதுக்காகவா நாம் இவ்ளோ கவலைப்பட்டோம்! என்று.
உங்களை பற்றி வதந்திகளுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ ஒரு போதும் செவி சாய்க்காதீர்கள்.
1) அவை பொய்யாக இருந்தால் அதை சட்டை செய்யவேண்டாம்.
2) அவை நியாயமற்றதாகவும், உங்களை காயப்படுத்துவதாகவும் இருந்தால் அது உங்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரோ ஒரு சிலரின் அறியாமை அது என்று ஜஸ்ட் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போய்விடுங்கள்.
3) ஆனால், அதில் நியாயம் இருந்தால் அது விமர்சனமல்ல. பாடம். அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதுவும் கூட ஜெயிப்பதற்கு ஒரு வழிதான்!
- See more at: http://rightmantra.com/?p=12688#sthash.gumHmraT.dpuf