Announcement

Collapse
No announcement yet.

சக்தி பீடங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சக்தி பீடங்கள்

    சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
    ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
    பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன .
    --- தினமலர் பெண்கள் மலர் . செப்டம்பர் 11 , 2004 .

  • #2
    Re: சக்தி பீடங்கள்

    ஹிங்லாஜ் சக்திபீடம்:

    ஹிங்லாஜ் சக்தி பீடம் இன்றைய பாக்கிஸ்தானத்தில் உள்ளது . இது பலூசிஸ்தான் மாநிலத்தில் லியாரி தாஹ்சிலில் உள்ள "கனராஜ்" மலைத்தொடரில் உள்ள ஓர் திறந்த குஹையில் உள்ளது. அருகிலேயே "ஹிங்கோல் " நதி ஓடுகிறது. இது சதி தேவியின் நெற்றி தெறித்த இடம் (ஹிங்குல் - கும்குமம்) என கொண்டாடப்படுகிறது. இந்த சக்தி பீடம் ஒரு காலத்தில் மேற்கு, வடமேற்கு இClick image for larger version

Name:	images.jpg
Views:	1
Size:	13.7 KB
ID:	33965ந்தியாவில் உள்ள ஹிந்துக்களால் விசேஷமாக கொண்டாடப்பட்டு வந்தது . அன்றைய கால கட்டத்தில் பலுச்சிஸ்தானத்தில் அரசு வகித்த "பானுசாலி" ( பன்சாலி ) என்ற சூரிய வம்சத்து ஹிந்து அரசர்களின் குல தெய்வமாக ஆராதிக்கப்பட்டு வந்தது. இன்றும் ப்ரஹ்ம க்ஷத்ரியர், பவசர் க்ஷத்ரியர், பன்சாலி என்ற பல க்ஷத்ரிய வம்சத்தினருக்கு குலதெய்வமாக போற்றப்படுகிறது. இந்த இடம் ஒரு மணல் பாங்கான பாலைவனத்தின் மத்தியில் உள்ளது. மலைத்தொடரில் ஆசிய கண்டத்தின் மிகபெரிய வறண்ட மணல் எரிமலை இருக்கிறது . இப்போது வறண்டு மணலும் சேரும் தான் சேர்ந்திருக்கிறது.
    ஹிங்லாஜ் சக்திபீடம் கராச்சியிலிருந்து 250 கி மீ தொலைவில் உள்ளது. இங்கு செல்ல யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு எல்லா சௌகரியங்களையும் செய்து இருக்கிறது. தவிர ஹிங்க்லாஜ் சேவா மண்டலி என்ற அமைப்பு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வருடம் இருமுறை கொண்டாடப்படும் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.இத்திருத்தலத்தை அங்கு இருக்கும் மக்கள் (முஸ்லிம் மதத்ததை சேர்ந்தவர்கள்) நானி கா மந்திர் (பாட்டியின் கோயில்) என அன்புடம் கூறுகிறார்கள். இத்தலம் அவர்கள் பாதுகாப்பில் தான் உள்ளது.

    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு
    Last edited by Brahmanyan; 08-08-14, 09:10.

    Comment


    • #3
      Re: சக்தி பீடங்கள்

      Very interesting,new,useful and astonishing information.

      Comment


      • #4
        Re: சக்தி பீடங்கள்

        Click image for larger version

Name:	Sharada devi Temple in POK.JPG
Views:	1
Size:	219.8 KB
ID:	33966சாரதா பீடம் மற்றொரு சக்தி பீடம் ஆதி சங்கரரால் விவரிக்கப்பட்டுள்ள 18 மகா சக்தி பீடங்களில் உள்ளது. இது இப்போது பாகிஸ்தானால் கையக ப்படுத்தப்பட்டுள்ள (POK ) காஷ்மீரப் பகுதியில் உள்ளது . இத் திருக்கோயில் உள்ள இடம் தேவியின் வலது கை விழுந்த இடம் என வர்ணிக்கப்படுகிறது. இன்று மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. அனால் ஒரு காலத்தில் இங்குதான் ஒரு பெரிய சமஸ்க்ருத நூலகம் இருந்திருக்கிறது.. இன்று "பாரமுல்லா" விலிருந்து 96 கி மீ தொலைவில் "நீலம்" பள்ளத்தாக்கில் 11000 அடி உயரத்தில் உள்ள இந்த பீடம் உள்ள இடமே சாரதா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சீன யாத்ரிகர் "யூவன் சாங்" சி.632ல் இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார் . மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் "அல் பருனி " மற்றும் அக்பரின் அமைச்சர் "அபுல் பாசல்" அவர்கள் சாரதா பீடத்தை தங்கள் எழுத்துக்களில் குறித்திருக்கிறார்கள். ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் இங்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. சமீப காலம் வரை இந்த இடம் கஷ்மிர பண்டிதர்களின் முக்கிய இருப்பிடமாக இருந்தது. இவ்வளவு பிரபலமான சக்திபீடத்தில் இன்று ஓரிரு ஹிந்துக்களே உள்ளனர் என்பது வருத்தப்படகூடிய செய்தியாகும். ஆனால் சமீப காலத்தில் தங்கள் கலாசாரத்தில் பற்றுள்ள சில கஷ்மீர இஸ்லாமிய சகோதரர்கள் இத்தலத்தை புதிப்பிக்க அரசாங்கத்துடன் கலந்து முயற்சி எடுத்துள்ளனர்.

        ப்ரஹ்மண்யன்,
        பெங்களூர்
        Last edited by Brahmanyan; 08-08-14, 10:05.

        Comment


        • #5
          Re: சக்தி பீடங்கள்

          Your this post has created an interest in me to know about all 18 sakthi peedams Thank you very much Sir let me go to google search at once

          Comment


          • #6
            Re: சக்தி பீடங்கள்

            Good attempt to know about Sakthi Peetas. There are plenty of materials on the subject available in the internet.

            Though the number of places claim to be Sakthi peetas varies, 51 (52) are accepted as the locations where the body parts of Sati Devi had fallen while Siva in grief wandered with the body of Sati devi throughout Arya Varta.

            Adi Sankaracharya has composed a sloka called the Ashta Dasa Shakthi Peetha Stotram. which contains 18 locations which are often referred to as Maha Shakthi Peeths.

            Sloka written by Adi Shankaracharya on 18 Maha sakthi peetas.

            Lankayam shankaridevi , kamakshi kanchikapure /
            Pradyumne shrinkhaladevi , chamunda kraunchapattane //

            Alampure jogulamba , shrishaile bhramarambika /
            Kolhapure mahalakshmi , mahurye ekavirika //

            Ujjayinyam mahakali , pithikayam puruhutika /
            Odhyane girijadevi , manikya dakshavatike //

            Harikshetre kamarupi , prayage madhaveshvari /
            Jvalayam vaishnavidevi , gaya mangalyagaurika //

            Varanashyam vishalakshi , kashmire tu sarasvati /
            Ashtadasha shaktipithani , yoginamapi durlabham //

            Sayankale pathennityam , sarvashatrivinashanam /
            Sarvarogaharam divyam , sarvasampatkaram shubham //


            English translation is given here under:

            Shankari in Sri Lanka, Kamakshi in Kanchipuram Shrinkhala in Pradymna and Chamunda in Mysore

            Jogulamba in Alampur, Brhamarambika in Sri Shailam, Maha lakshmi in Kolhapur and Eka Veera in Mahurya

            Maha Kali in Ujjain, Purhuthika in Peethika Girija in Odhyana and Manikya in the house of Daksha

            kama rupi in the temple of Vishnu, Madhaveshwari in Prayag, Goddess of flame in Jwala Mukhi and Mangala Gowri in Gaya

            Vishalakshi in Varanasi, Saraswati in Kashmir .

            These are the 18 houses of Shakti, which are rare even to the Yogis.


            When Chanted every evening, all the enemies would get destroyed all the diseases would vanish, and prosperity would be showered.

            Brahmanyan,
            Bangalore.

            Last edited by Brahmanyan; 05-08-14, 10:26.

            Comment


            • #7
              Re: சக்தி பீடங்கள்

              Thank you very much Sir for having uploaded the very useful slokham

              Comment

              Working...
              X