Announcement

Collapse
No announcement yet.

தெரிஞ்சுக்கோங்க! அணைகளும், மாநிலங்களும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரிஞ்சுக்கோங்க! அணைகளும், மாநிலங்களும்

    .



    1. நாகார்ஜுன சாகர் நீர்த்தேக்கம் ( ஆந்திர மாநிலம் ):
    கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
    2. கக்கார்பார் நீர்த்தேக்கம் ( ஆந்திர மாநிலம் )::
    தபதி நதியின் குறுக்கே விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.
    3. கோஷினீர்த்தேக்கம் ( பீகார் மாநிலம் ):
    கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்திற்கும் இந்த
    நீர்த்தேக்கம் பயன்படுகிறது.
    4. சபரிகிரி நீர்த்தேக்கம் ( கேரள மாநிலம் ):
    பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள து. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
    5. சாராவதி நீர்த்தேக்கம் ( கர்நாடக மாநிலம் ) :
    ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள து. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
    6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் ( ஒரிசா மாநிலம் ):
    மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.
    7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம் ( இமாச்சலப் பிரதேசம் ) :
    சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ள து. விவசாயம் மற்றும் நீர்மின்
    சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
    8. தாமோதர் பள்லத்தாக்கு நீர்த்தேக்கம் ( ஜார்க்கண்ட் மாநிலம் ) :
    தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள து. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்கமும்
    பகிர்ந்துகொள்கிறது வெள்ள நீரை தடுப்பற்காகவும், விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.
    9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் ( குஜராத் மாநிலம் ) :
    நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெருகின்றன. விவசாயம்
    மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
    10. மேட்டூர் ( தமிழ் நாடு ) :
    காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
    --- தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 30, 2013.
Working...
X