புதுடில்லி: உலகையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் மோசடியின் தொடர்ச்சியாக, மேலும் ஒரு மோசடியை மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் (சி.ஏ.ஜி.,) அம்பலப்படுத்தி உள்ளது. இந்த வகையில், முன்னதாக 600 கோடி ரூபாய் என விதிக்கப்பட்ட அபராத தொகை, பின்னர் சத்தமில்லாமல் 5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்ததை மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் கண்டுபிடித்தது. இதையடுத்து, இந்த ஊழல் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. குறுக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்பிரச்னை கடந்த வௌ்ளிக்கிழமை லோக்சபாவில் எதிரொலித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2007ம் ஆண்டு, தொலை தூரத்தில் உள்ள, 27 மாநிலங்களைச் சேர்ந்த, 500 மாவட்டங்களுக்கு இணைப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள், தொலைதூர மாவட்டங்களுக்கு இணைப்பு தரும் விஷயத்தில் விதிமீறல் செய்திருந்தன. இது குறித்த புகாரின் பேரில், அந்த நிறுவனங்களுக்கு 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெக்டரம் ஊழல் காரணமாக அப்போதைய அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, சத்தமி்ல்லாமல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோண்ட தோண்ட ஸ்பெக்டரம் விஷயத்தில் பல்வேறு மோசடிகள் ஒவ்வொன்றாக வௌிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends