சேது ச*முத்திர* திட்ட*ம் என்றால் என்ன*?

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ*ர*ம், பாம்ப*ன் ப*குதிக*ளுக்கும் நாக*ப*ட்டின*த்திற்கும் இடைப்ப*ட்ட கடல் ப*குதி பாக் நீரிணை என்றும், பாம்ப*னுக்கு பிறகான க*ன்னியாகும*ரி வ*ரையிலான* க*டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திர திட்டமாகும்(பார்க்க-படம்). 300 மீட்ட*ர் அக*ல*மும், 12.8 மீட்ட*ர் ஆழ**மும் கொண்ட*து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த* கால்வாய் ஏற்ப*டுத்தும் ப*ணி தான் சேது ச*முத்திர* திட்ட*ம் என்ற*ழைக்க*ப்ப*டுகின்ற*து. இந்தியாவின் மேற்கு, கிழ*க்கு ப*குதிக*ள் இந்த* திட்ட*த்தின் மூல*ம் ஒருங்கிணைக்க*ப்ப*டும். இதுவ*ரை மும்பை(மேற்கு), கொச்சின்(தென் மேற்கு) ப*குதியிலிருந்து ஒரு க*ப்ப*ல் சென்னை வ*ர* வேண்டுமெனில் அவை இல*ங்கை சுற்றிக்கொண்டு தான் வ*ரும், இனி அது த*விர்க்க*ப்ப*ட்டு இந்த* கால்வாயின் மூல*ம் அவை இந்திய* க*டல் ப*குதி வ*ழியாக*வே சென்று சென்னை, விசாக*ப்ப*ட்டின*ம், பார*தீப் போன்ற* கிழ*க்கு ப*குதியில் உள்ள* துறைமுக*ங்க*ளை சென்ற*டையும். உச்ச*நீதிம*ன்ற*ம் இராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவ*தற்கு த*டை விதித்த*தின் மூல*ம் 17-09-2007ல் இந்த ப*குதியில் கால்வாய் தோண்டும் ப*ணி நிறுத்த*ப்ப*ட்ட*து. பாக் நீரிணையில் கால்வாய் தோண்டும் ப*ணி இந்த* திட்ட*த்தை செய*ல்ப*டுத்தி வ*ரும் இந்திய* அக*ழ்வாய்வு நிறுவ*னத்தினால் (Dredging Company of India) 16-07-2009 அன்று நிறுத்த*ப்ப*ட்ட*து.

தோண்ட வேண்டிய மணலின் அளவு = 82.5 Million Cubic Meter(82.5 இலட்சம் மீட்டர்)

இதுவரை தோண்டியுள்ள மணலின் அளவு = 33.99 Million Cubic Meter (33.99 இலட்சம் மீட்டர்)

இதை முழுமையாக* முப்ப*து விழுக்காடு ப*ணிக*ள் முடிந்துவிட்ட*தாக* க*ருத*முடியாது. தொட*ர் க*ட*ல்நீரோட்ட*த்தின் கார*ண*மாக* இந்த* ப*குதியில் 12.8 மீட்ட*ரில்(தோண்ட*ப்ப*ட்ட* ஆழ*ம்) ஒரு குறிப்பிட்ட* அள*வு ம*ண*ல் மூடியிருக்கும். 2004ல் இந்த* கால்வாய் தோண்டுவ*த*ற்கான* திட்ட* ம*திப்பு 2,400 கோடிக*ளாகும், 2010லேயே இது இர*ண்டு ம*ட*ங்காகி விட்டது. இன்றைய நிலையில் இந்த திட்டத்தை முடிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇப்பொழுது நாம் சேது சமுத்திர திட்டத்தில் உள்ள சில கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.

சேது ச*முத்திர* திட்ட*த்தினால் இந்தியாவிற்கு என்ன* ப*ய*ன்?

இந்தியாவிற்கு ஒரு புதிய* க*ட*ல்வ*ழி கிடைக்கும். இந்திய* க*ட*ற்ப*டை க*ப்ப*ல்க*ள் இனி இலங்கையை சுற்றி செல்லும் நிலை மாறி மேற்கு ப*குதிக்கும், கிழ*க்கு ப*குதிக்கும் இந்திய* க*ட*ற்ப*டை க*ப்ப*ல்க*ள் நேராக*வே செல்லும்.

சேது சமுத்திர திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சியடையுமா?

இந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ*க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம*ற்றும் கிழ*க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க*ல்க*த்தாவிலிருந்து மும்பைக்கு) ந*டைபெறும் க*ட*ல் வ*ழி வர்த்தகம் கொழும்பு மூல*மாக*வே ந*டைபெற்று வ*ருகின்ற*து. இந்நிலை மாறி இனி இந்த* க*ட*ல்வ*ழி வர்த்தக**ம் தூத்துக்குடி துறைமுக*ம் மூல*மாக* ந*டைபெறும், அத*ற்காக* தூத்துக்குடி துறைமுக*த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க* வேண்டும். அவ்வாறான* ஒரு புதிய* இடைநிற் மையம் உருவாக்க*வில்லையெனில் சேது ச*முத்திர* திட்ட*ம் எவ்வித வர்த்தக ப*ய*னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த*ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய* இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க*வேண்டும் என்ற* கோரிக்கைக்கு இன்னும் ஒப்புத*ல் கொடுக்க*ப்ப*ட*வில்லை, அத*னால் தூத்துக்குடி துறைமுக*ம் பெரிய வ*ள*ர்ச்சிய*டையாது என்பதே உண்மை. இல்லை இது பொய் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கவும். ஒரு தெளிவான* க*ட*ல்வ*ர்த்த*க*ம் அற்ற* இந்தியாவில் உள்ள*, வ*ரவி*ருக்கும் க*ப்ப*ற்துறைமுக*ங்க*ள். உங்க*ள் வீட்டுக்கு பின்னால் க*ட*ல் இருந்து உங்க*ளுக்கு ஒரு துறைமுக*ம் வேண்டுமென்றால், அதை உங்க*ளால் க*ட்ட*முடியும் என்றால், நீங்க*ள் கேட்டாலும் அனும*தி கொடுக்கும*ள*விற்கு தான் உள்ள*து இந்தியா. அதே நேர*த்தில் இல*ங்கையை க*வ*னியுங்க*ள் ஏற்க*ன*வே கொழும்பு துறைமுக*ம் 5 மில்லிய*ன் சரக்கு பெட்டகங்க*ளை (Container)கையாளும் வ*கையில் இருக்கும் பொழுது அவ*ர்க*ள் அடுத்து ஹ*ம்ப*ன்தோட்டாவில் 20 மில்லிய*ன் சரக்கு பெட்டகங்க*ளை(Container) கையாளும் வ*கையில் க*ட்டி முடிக்கும் நிலையில் உள்ள*து துறைமுக*ம். அப்ப*டியே இந்தியாவில் க*ட்ட*ப்ப*டும் துறைமுக*ங்க*ளையும், அவ*ற்றின் சரக்கு பெட்டகங்க*ளை கையாளும் திற*னையும் பாருங்க*ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.

மேலும் சேது கால்வாயில் அதிக*ப*ட்ச*மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க*ட*ல் வ*ழி போக்குவ*ர*த்து செல*வை குறைக்க* எல்லா க*ப்ப*ல், க*ட*ல் வ*ழி வ*ர்த்த*க* நிறுவ*ன*ங்க*ளும் செலவை குறைக்க பெரிய* க*ப்ப*ல்க*ளையே ப*ய*ன்ப*டுத்துகின்ற*ன*. 30,000 DWT அதிக*மான* எடை கொண்ட* க*ப்ப*ல்க*ளில் வ*ர்த்த*க*ம் ந*டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக*ம் வ*ழியாக* ந*டைபெறும்.

இதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம்,கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப*ன்னாட்டு க*ட*ல் வ*ழி வ*ர்த்த*க*ம் கொழும்பு மூல*ம் ந*டைபெற்ற*து, இது மாறுமா?

முதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத*ற்கு முன்னால் சில* வார்த்தைக*ளை ப*ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள*க்க*த்தை தெரிந்து கொள்ள* வேண்டியது அவ*சிய*ம்.

சிறிய கப்பல் (Feeder Vessal ) அதிக*ப*ட்ச*ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க*ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த* க*ப்ப*ல்க*ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற* குறிப்பிட்ட* இட*ம் வ*ரை ம*ட்டுமே செல்லும்.

பெரிய கப்பல் (Mother Vessal) ஆயிரத்திற்கும் அதிகமான* சரக்கு பெட்டகங்க*ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.

இடைநிற் மையம் (Trans-shipment Hub) தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க*ள் இங்கு நிறுத்த*ப்ப*ட்டு அந்த* க*ப்ப*ல்க*ளிலுள்ள* சரக்கு பெட்டகங்க*ள் அங்குள்ள துறைமுகத்தில் இற*க்க*ப்ப*ட்டு பெரிய க*ப்ப*ல்க*ளுக்கு மாற்ற*ப்ப*டும். மேற்கூறிய* நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க*ள் உள்ள*ன*. ஒன்று சிங்க*ப்பூர், ம*ற்றொன்று கொழும்பு. சிங்க*ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க*ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக*ளுக்கு செல்லும் பொருட்க*ளுக்கான* இடைநிற் மையங்க*ளாக*வும் உள்ள*து.

இந்தியா, இலங்கை,வ*ங்க* தேச*ம், சீனா, ஜ*ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட* நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க*ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க*ப்ப*ல்க*ளுக்கு மாற்ற*ப்ப*டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும். இதுவே ஐரோப்பிய* நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க*ப்ப*ல்க*ளுக்கு மாற்ற*ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.

இதில் இந்தியாவில் உள்ள* மும்பை துறைமுக*ம் போன்ற* பன்னாட்டு துறைமுக*ங்க*ளுக்கு வில*க்கு இந்த* பன்னாட்டு துறைமுக*ங்க*ளுக்கு பெரிய க*ப்ப*ல்க*ளே வ*ந்து செல்லும். ச*ரி ஒரு துறைமுக*ம் பன்னாட்டு துறைமுக*மாக* மாற என்ன* வேண்டும்? ஒன்று பெரிய க*ப்ப*ல்க*ள் வ*ரும*ள*விற்கு க*டலின் த*ரைத்த*ள*ம் ஆழ*மாக* இருக்க* வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக*ள*வு சரக்கு பெட்டகங்கள் அந்த* துறைமுக*த்திற்கு வ*ர* வேண்டும்.

இந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த*விர்த்து கிழ*க்கிலும், தெற்கிலும் எந்த* ஒரு பன்னாட்டு துறைமுக*மும் இல்லாத*தால் இந்த* ப*குதிக*ளில் உள்ள* துறைமுக*ங்க*ளிலுருந்து சிறிய* க*ப்ப*ல்க*ள் ம*ட்டுமே வ*ந்து செல்கின்ற*ன*. சென்னையிலும், கொச்சினில் புதிதாக* க*ட்ட*ப்ப*ட்டுள்ள* வள்ளார்படம் துறைமுக*த்திலும் ஒரு பெரிய கப்பல் ம*ட்டுமே வ*ந்து போகின்ற*து.

சேது கால்வாய் பணி முடிந்தாலும் மேற்சொன்ன*வையே ந*ட*க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற*ம் ம*ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ*க்கு க*ட*ற்க*ரைக*ளிலிருந்தும், வ*ங்க*தேச* க*ட*ற்க*ரையிலிருந்தும் கிள*ம்பும் க*ப்ப*ல்கள் இல*ங்கையின் கிழ*க்கு ப*குதியை சுற்றி கொழும்பு செல்லாம*ல் தூத்துக்குடி க*ட*ல் வ*ழியாக* கொழும்பு செல்லும், இதனால் பயண* தூரம் குறையும். அதே ச*ம*ய*ம் மூன்று முக்கிய* கார*ணிக*ளையும் நாம் க*ண*க்கில் கொள்ள* வேண்டும்.

1. அதிகபட்சமாக 30,000 DWT (Dead Weight in Tons) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். ஏனென்றால் சேது சமுத்திர கால்வாயின் ஆழ*ம் 12.8 மீட்ட*ரே. மேலும் க*ப்ப*ல்க*ள் இந்த* கால்வாய் வ*ழியாக* செல்வ*த*ற்கு இந்திய* அர*சிற்கு ஒரு குறிப்பிட்ட* தொகையை செலுத்த* வேண்டும் (தேசிய* நெடுஞ்சாலையில் சுங்க* வ*சூல் மைய*ம் போல)

2.இந்த* கால்வாய் ப*குதியில் அந்த* க*ப்ப*லின் மாலுமி க*ப்ப*லை இய*க்க* கூடாது, இந்த* கால்வாய் ப*குதியின் நீரோட்ட*ங்க*ளை அறிந்த* ஒரு உள்ளூர் மாலுமி தான் க*ப்ப*லை ஓட்ட* வேண்டும். இந்த* உள்ளூர் மாலுமி ந*டைமுறைதான் எல்லா துறைமுக*ங்க*ளிலும் நடைமுறையில் உள்ளது. ஆக*வே இந்த* உள்ளூர் மாலுமிக்கும் ஒரு குறிப்பிட்ட* தொகையை இந்த* கால்வாய் வ*ழி செல்லும் க*ப்ப*ல்க*ள் கொடுக்க* வேண்டும்.

3.இந்த* கால்வாயின் வ*ழியே ஒரு குறிப்பிட்ட* வேக*த்தில் தான் செல்ல* வேண்டும். இலங்கையை சுற்றி கொண்டு செல்லும் போது செல்லும் வேகத்தை விட 30 விழுக்காடு குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.

மேற்கூறிய* மூன்றில் முத*ல் இர*ண்டு கார*ண*ங்க*ளினால் இல*ங்கையை சுற்றி செல்வ*த*ற்கும், சேது கால்வாய் வ*ழியாக* செல்வ*த*ற்கும் பெரிய* அள*வில் பொருட் செலவில் வித்தியாச*ம் இருக்காது என* முன்னால் க*ப்ப*ற் ப*டை மாலுமியான* பால*கிருஷ்ண*ன் கூறியுள்ளர். மேலும் இவர்* பொருட் செலவிற்கான கணக்கீட்டிற்காக* சேது கால்வாய் திட்டத்தின் தொடக்க மதிப்பை வைத்திருந்தார். இன்று சேது கால்வாய்* திட்ட* செல*வு ப*ல* ம*ட*ங்கு கூடியுள்ள*து, அந்த* செல*வை எல்லாம், இந்த* கால்வாயில் செல்லும் க*ப்ப*ல்க*ள் செலுத்தும் ப*ண*த்தின் மூல*மாக*வே அடைய* வேண்டியிருப்ப*தால் ஒரு க*ப்ப*ல் இந்த* கால்வாயில் செல்லுவ*த*ற்காக* இந்திய* அர*சிற்கு செலுத்த* வேண்டிய* தொகை அவ*ர் க*ண*க்கிட்ட*தை விட* ப*ல* ம*ட*ங்கு அதிகமாக* இருக்கும். மேலும் சேது கால்வாய் வழியாக செல்வதால் பயண நேரத்திலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது, குறைந்த* வேகமும், உள்ளூர் மாலுமியை ஏற்றி, இற*க்குவ*த*ற்கான* நேர*மும் ப*ய*ண* நேரத்தை வெகுவாக* பாதிக்கின்ற*ன*.

இதை க*ப்ப*ல், க*ட*ல் வ*ழி வ*ர்த்த*க* நிறுவ*ன*ங்க*ள் க*ண*க்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவ*ர்க*ள் இல*ங்கையை சுற்றிக் கொண்டு கொழும்பு செல்வார்க*ளே த*விர* சேது கால்வாய் வ*ழியாக* அல்ல* என்றே அறிய* முடிகின்ற*து. மேலும் தொட*ர்ச்சியான* க*ட*ல் நீரோட்ட*த்தினால் கொண்டு வ*ந்த* கொட்ட*ப்ப*டும் ம*ண*லை வெளியேற்ற* தொடர்ந்து பராமரிப்பு தேவையும் இந்த கால்வாய்க்கு உள்ளது (பொதுவாக எல்லா கடல் கால்வாய்களுக்கும் இந்த பராமரிப்பு தேவை உண்டு) இந்த பராமரிப்புக்குக்காக தூரெடுப்பு(De-Silting) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய வேண்டும். பெரிய* அள*வு வ*ருவாயே இல்லாம*ல் ந*ட்ட*த்தில் இய*ங்க*ப்போகும் ஒரு கால்வாய்க்கு இது மேலும் பொருள் ந*ட்ட*த்தையே ஏற்ப*டுத்தும். இத*னால் சேது சமுத்திர* திட்ட*ம் பொருளாதார* ரீதியாக* இழ*ப்பை ஏற்ப*டுத்தும் ஒரு திட்ட*மே.

தூத்துக்குடி உள்ளிட்ட* தென் மாவ*ட்ட*ங்க*ளுக்கு இந்த* திட்ட*த்தின் மூல*ம் வ*ள*ம் பெருகுமா ? சூழிய*லுக்கு என்ன* பாதிப்பு ?

சேது சமுத்திரம் திட்டம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளரும், இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் கூறினாலும், உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. நாம் முன்னரே பார்த்தது போல தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது அதிகபட்சமாக 10 விழுக்காடு அளவிற்கு சரக்கு பெட்டகப் போக்குவ*ர*த்து அதிக*ரிக்கும். அதே நேர*த்தில் தூத்துக்குடி உள்ளிட்ட* தென் மாவ*ட்ட*ங்க*ளின் பெரும் ப*குதி வருவாய் மீன*வ*ர்க*ள் மூலமாக* வ*ருப*வையே. சேது ச*முத்திர*ம் திட்ட*ம் செய*ல்ப*டுத்த*ப்ப*ட்டு க*ப்ப*ல்க*ள் அவ்வ*ழியாக* செல்ல*த் தொட*ங்கினால் முத*லில் அந்த* ப*குதியில் மீன்பிடிப்ப*து சில* வ*ரைமுறைக*ளுக்கு உட்ப*டுத்த*ப்ப*டும். அதாவ*து க*ப்ப*ல்க*ள் போக்குவ*ர*த்தினால் மீன*வ*ர்க*ள் சில* குறிப்பிட்ட* தூர*ம் வ*ரை ம*ட்டுமே சென்று மீன் பிடிக்க* நிர்ப்ப*ந்திக்க*ப்ப*டுவார்கள்.

சேது கால்வாய் தோண்ட*ப்ப*டும் பாக் நீரிணை ப*குதியில் 54 கிலோ மீட்ட*ர் தூர*த்திற்கு 12.8 மீட்டர் ஆழத்திற்கு ம*ண*ல் தோண்ட* வேண்டும். இவ்வாறு தோண்ட*ப்ப*டும் ம*ண*ல் மீத*முள்ள* க*ட*ல் ப*ர*ப்பில் கொட்ட*ப்ப*டுகின்ற*து. இத*னால் நாக*ப்ப*ட்டின*த்தில் இருந்து இராமேஸ்வ*ர*ம் வ*ரையிலான* ப*குதிக*ளில் உள்ள* நுண்ணுயிரிக*ள் முத*லில் இற*க்கும், உணவு ச*ங்கிலியில் முத*ல் க*ண்ணியாக இருக்கும் நுண்ணுயிரிக*ளின் இற*ப்பு க*ட*லின் உண*வு ச*ங்கிலி ச*ம*த்துவ*த்தை கெடுத்து கொஞ்ச*ம், கொஞ்ச*மாக* ம*ற்ற* க*ட*ல் வாழ் உயிரினங்கள் இற*ப்ப*த*ற்கு வ*ழி ச*மைக்கும். அடுத்து இராமேஸ்வ*ர*த்தில் இருந்து த*லைம*ன்னார் வ*ரையுள்ள* ம*ண*ல் திட்டுக*ளை ஒட்டியே ம*ன்னார் வளைகுடா ப*குதி உள்ள*து. இந்த* ம*ன்னார் வ*ளைகுடா ப*குதியான*து அரிய* வ*கை க*ட*ல் வாழ் உயிரின*ங்க*ளும், ப*வ*ள*ப்பாறைகளும்(இது ஒரு* க*ட*ல் தாவ*ரம்) இருக்க*க்கூடிய* ஒரு ப*குதி.இந்த* ப*வ*ள*ப்பாறைக*ளே அரிய* வ*கை க*ட*ல் வாழ் உயிரின*ங்க*ளும், மீன்க*ளும் இந்த* ப*குதியில் இருக்க*க்கார*ண*ம். இந்த* ப*வ*ள*ப்பாறைக*ள் சூரிய* ஒளியின் மூல*ம் வாழ்ப*வை. சேது கால்வாய் திட்ட*த்தில் வ*ரும் இந்த* ம*ண*ல் திட்டுக்க*ளுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைக*ள் உள்ள*ன*. இந்த* சுண்ணாம்பு பாறைக*ளை வெடி வைத்து அக*ற்றுவ*த*ன் மூல*மாக*வே கால்வாய்க்கான* வ*ழிய*மைக்க* முடியும். இந்த* திட்ட*த்தின் அக*ல*ம் 300 மீட்ட*ர்க*ளே என்றாலும் இந்த* ம*ண*ல் திட்டுக*ளுக்கு கீழே வ*லுவாக* அமைந்துள்ள* சுண்ணாம்பு பாறைக*ளை வெடி வைத்து அக*ற்றுவ*த*ன் மூல*ம் ஏற்ப*டும் க*ல*ங்கள் த*ன்மை (Turbidity)என்பது அருகிலுள்ள* ம*ன்னார் வ*ளைகுடாவையும், அங்குள்ள* ப*வ*ள*ப்பாறைக*ளையும் வெகுவாக*ப் பாதிக்கும். இத*னால் அத*னை சார்ந்து வாழும் எல்லா அரிய வ*கை உயிரின*ங்க*ளையும், மீன்வ*ள*த்தையும் பாதிக்கும். அதும*ட்டுமின்றி வெடி வைத்து ப*ல நூற்றாண்டு கால*மாக* இருக்கும் சுண்ணாம்பு பாறைக*ளை அக*ற்றுவ*து என்ப*து ம*ன்னார் வ*ளைகுடாவின் அடித்த*ள*த்தை வெகுவாக* பாதிக்கும்.

கால்வாய் தோண்டுவ*தினால் ஏற்ப*டும் சூழ*ல் பாதிப்பினாலும், தொட*ர் க*ப்ப*ல் போக்குவ*ர*த்தினாலும் (மேற்கு கிழ*க்கு , கிழ*க்கு- மேற்கு க*ட*ல் வ*ழி வ*ர்த்த*க*ம்) நாக*ப்ப*ட்டின*ம் முத*ற்கொண்டு தூத்துக்குடி வ*ரையிலான* மீன்வ*ள*ம் அழிவ*தால், இத*ன் மூல*ம் மீன*வ*ர்க*ள், மீன*வ*ர்க*ள் சார்ந்துள்ள* தொழில்க*ள் எல்லாம் கொஞ்ச*ம், கொஞ்ச*மாக* அழியும் நிலை ஏற்ப*டும். இதை மன்மோகன் சிங் அமைத்த அறிவியலாளர் பச்சூரி தலைமையிலான குழு தெளிவாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளது. வழமை போலவே இந்த அறிக்கையை அரசு பரணில் எறித்து விட்டது. தென் மாவ*ட்ட*ம் வ*ள*மாவ*த*ற்கு ப*திலாக* அழியும் நிலைதான் ஏற்ப*டும், த*மிழ*க*த்தில் க*ட*ந்த* இர*ண்டு ஆண்டுக*ளாக* இருக்கும் க*டும் மின்வெட்டால் தென்மாவ*ட்ட*ங்க*ளில் க*ட்ட*ப்ப*ட்ட* தொழிற்வ*ளைய*ங்க*ளில் உள்ள* தொழிற்சாலைக*ள் மூடும் நிலையில் உள்ள*ன*. இந்த* நிலையில் மீன*வ*ர்க*ள், மீன*வ*ர்க*ள் சார்ந்துள்ள* தொழில்க*ள் எல்லாம் அழிவ*தால் ஒட்டுமொத்த*மாக* தென் மாவ*ட்ட*ம் பாதிக்க*ப்ப*டும்.

இந்த* திட்ட*த்தின் இப்போதைய* நிலை என்ன*? த*மிழ*க* க*ட்சிக*ளின் இந்த* திட்ட*த்தை ப*ற்றிய* நிலை என்ன*?

இந்த* திட்டத்திற்கு 2007ல் உச்ச*நீதிம*ன்றம் இடைக்கால* த*டை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த* ஆண்டு ஜெ தலைமையிலான த*மிழ*க* அர*சு சேது ச*முத்திர* திட்ட*த்தை நிறுத்த*க்கோரி ம*னு தாக்க*ல் செய்துள்ள*து. மதமாற்ற தடை சட்டம் போன்ற*வை மூலம் ஜெய*ல*லிதாவின் இந்துத்துவ* பாச*ம் எல்லோருக்குமே வெளிப்ப*டையாக* தெரிந்த*து தான். அதே போல* இங்கும் இராமேஸ்வ*ர*த்தில் இருந்து த*லைம*ன்னார் வ*ரை உள்ள* ம*ண*ல் திட்டை இந்துக*ள் இராம*ர் பால*ம் என்று புராண கதைகளை ஆதாரமாகக் கொண்டு மூடநம்பிக்கை (இதை ஆதாம் பாலம் என்றும் சிலர் நம்புகின்றனர்) கொண்டிருப்பதே இந்த* திட்ட*த்தை இப்பொழுது ஜெ கைவிட* சொல்ல*க்காரணம், அதை வெளிப்ப*டையாக* சொல்லாம*ல் மீன*வ*ர்க*ளின் வாழ்வாதார*த்தையும், சூழ*லையும் கார*ணமாக* காட்டியுள்ளார். கூட*ங்குள*த்தில் சூழ*லையும், மீன*வ*ர்க*ளையும் எப்ப*டி ஜெய*ல*லிதா காத்துவ*ருகின்றார் என்ப*து நாம் அறியாத*த*ல்ல* தி.மு.க* இந்த* திட்ட*த்தை ஆத*ரிப்ப*த*ற்கான* கார*ண*ம் இது த*மிழ*னின் 150 ஆண்டு கால* க*ன*வு என்று கூறி வந்தாலும், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சேது கால்வாய் வழி செல்லக்கூடிய சிறிய க*ப்ப*ல்க*ளுக்கு முத*லாளிகளாக* இருப்பதும் ஒரு காரணம்.

மீன*வ*ர்க*ளின் வாழ்வாதார*த்திற்கும், சூழ*லுக்கும் பேர*ழிவையும், பொருளாதார* அள*வில் எந்த* ஒரு ப*ய*னும் அற்ற* சேது கால்வாய்த்* திட்டத்தை ஒட்டுமொத்த*மாக* கைவிட* வேண்டும் என்பதே இதுவே சனநாயக சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

Posted by S. Satheesh Kumaar