Announcement

Collapse
No announcement yet.

' சூப்பர் பூமிகள் '!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ' சூப்பர் பூமிகள் '!

    சூப்பர் பூமிகள் '!
    வாஷிங்டன் : உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 ' சூப்பர் பூமிகள் ' கண்டறியப்பட்டுள்ளன.
    பூமியில் இருந்து 22 ஒளி ஆண்டுகள் தொலவில், ஸ்கார்பியோ நட்சத்திர மண்டலம் ( விருச்சிக ராசி மண்டலம் ) அமைந்துள்ளது. ( ஒளியின் வேகம், ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் . ஒரு ஒளி ஆண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடந்து செல்லும் தூரம் ).
    ஸ்கார்பியோ. மண்டலத்தில் உள்ள கிரகங்களைப் பற்றி இஎஸ்ஓ ஆய்வு நடத்தி வருகிறது.
    ஸ்கார்பியோ நட்சத்திர மண்டலத்தில் உள்ள க்ளீஸ் 667சி என்ற நட்சத்திரத்தை 7 கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை பற்றி நடத்திய ஆய்வுகளில், 3 கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்லது.
    ஒரு கிரகத்தில், திரவநிலையில் தண்ணீர் இருந்தால், அந்த கிரகத்தில் உயிரினங்கள் ஆழும் சூழல் இருக்கும். தண்ணீர் திரவநிலையில் இருக்க, அந்த கிரகத்தில் வெப்ப நிலை மிதமான அளவில் இருக்க வேண்டும்.
    ஒரு கிரகத்தின் வெப்ப நிலை, அதற்கும் அது சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் அமையும். தூர இடைவெளி மிக அதிகமாக இருந்தால், வெப்ப நிலை மிகவும் குறைந்து, தண்ணீர் பனிமலை போல் நிரந்தரமாக உறைந்திருக்கும். தூர இடைவெளி மிகக் குறைவாக இருந்தால், வெப்ப நிலை மிகவும் அதிகரித்து, தண்ணீர் ஆவியாகி விடும்.
    க்ளீஸ் 667சி நட்சத்திரத்திற்கும் அதைச் சுற்றிவரும் 3 கிரகங்களுக்கும் இடையிலான தூரம், அந்த கிரகங்களில் மிதமான வெப்பநிலையை ஏற்படுத்தும் அளவில் உள்ளது. எனவே, அந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் தண்ணீர் இருக்கும். தண்ணீர் உள்ள கிரகங்களில், பூமியைப் போன்ற பாறைகள் கொண்ட நிலப்பகுதியும் சாதகமான காற்று மண்டலமும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த அடிப்படையில்தான், அந்த 3 கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதர்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்கள், பொதுவாக பெரிய அளவில் இருக்கும். ஒரு சில கிரகங்கள் சிறிய அளவில் இருக்கும். அப்படிப்பட்ட கிரகங்களுக்கு ' சூப்பர் பூமி ' என்று பெயர். இப்போது இஎஸ்ஓ கண்டறிந்துள்ள 3 கிரகங்களும் ' சூப்பர் பூமிகள் '.
    -- தினமலர். 27-6-2013.
Working...
X