Announcement

Collapse
No announcement yet.

சீரடி சாய்பாபா விரத முறைகள் - 9 வியாழக்கிழ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சீரடி சாய்பாபா விரத முறைகள் - 9 வியாழக்கிழ

    1) இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    2) விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

    3) எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும்

    4) காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.இந்த விரதத்தை பழ,திரவிய ஆகாரங்கள் (பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும்.அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    5) ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்

    6)மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம்.(பழங்கள், இனிப்புகள்,கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.

    7. முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

    8) வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    9) விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்

    விரத நிறைவு விதிமுறைகள்

    1) ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.

    2) சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).

    3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்

    4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

    இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

    Posted by S. Satheesh Kumaar
Working...
X