Announcement

Collapse
No announcement yet.

நீராட்ட நுணுக்கங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நீராட்ட நுணுக்கங்கள்

    காலையில் சூரிய உதயதிற்கு முன்னால் எழுந்து குளித்து விட வேண்டும். சூரிய உதயமாகி விட்டால், நீரில் உள்ள பல சக்திகள் ஆவியாகிப் போய்விடும்.
    குளத்திலோ, நதியிலோ நீராடும் போது, அதில் இருந்து மூன்று கைப்பிடிகள் மண்ணை எடுத்து கரையில் போட்டுவிட்டு அதன்பிறகே நீராட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தூர் வாரல், கரையைப் பலப்படுத்துவது ஆகியவற்றிற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
    குளிக்கும் போது, இறைவனின் நாமங்களை ஒரு சில முறையாவது சொல்லிக் குளிக்க வேண்டும். அதன் மூலம் உடலும், உள்ளமும் தூய்மையாகும்.
    அடுத்து...
    ஆறு, நதிகளில் குளித்தாலும், அறைக்குள் நீராடினாலும் சரி, ஆடையில்ல்லாமல் குளிக்கக்கூடாது.
    குள்ளித்தபின், துடைத்துக் கொள்ளும் போது ' கரகர'வென்று பாத்திரம் தேய்ப்பதைப் போல இழுத்து தேய்த்து துடைத்துக் கொள்ளக் கூடாது. அதிவிரைவில் சுருக்கம் வந்துவிடும். மென்மையாக ஒத்தி எடுக்க வேண்டும்.
    --- ஸாந்த்ரானந்தா.
    --- தினமலர் வாரமலர். ஆகஸ்ட் 25, 2013.
Working...
X