Announcement

Collapse
No announcement yet.

திருப்பதி 40 கோடி வெளிநாட்டு நாணயங்களுக்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதி 40 கோடி வெளிநாட்டு நாணயங்களுக்க

    திருப்பதி : திருமலை ஏழுமலையான் உண்டியலில், வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாகச்
    செலுத்திய, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 டன் வெளிநாட்டு நாணயங்களை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம் மாற்ற, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஏழுமலையான் கணக்கில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் வெளிநாட்டினர், உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம், கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் என, தனியாகப் பிரித்து, வங்கியில், இந்திய ரூபாயாக மாற்றி, ஏழுமலையான் கணக்கில் வரவு வைக்கும். ஆனால், வெளிநாட்டு நாணயங்களை, இதுவரை மாற்றவில்லை. பல ஆண்டுகளாக, ஏழுமலையான் உண்டியல் மூலம் கிடைத்த வெளிநாட்டு நாணயங்களை, திருமலை - திருப்பதி தேவஸ்தானம், தன் கஜானாவில் பத்திரமாக பாதுகாத்து வருகிறது.தற்போது கஜானாவில், 40 டன் வெளிநாட்டு நாணயங்கள் உள்ளன; இவற்றின் தற்போதைய மதிப்பு, 40 கோடி ரூபாய். இந்த நாணயங்களை மாற்ற, தேவஸ்தானம் தற்போது முன் வந்துள்ளது. அதனால், நாடுகள் வாரியாக, நாணயங்களை பிரித்துக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது. 20 டன் நாணயங்களை கணக்கிடும் பணி தற்போது முடிவடைந்துஉள்ளது. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காவைச் சேர்ந்த நாணயங்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றின் எடை அதிகம் என்பதால், அதை அந்நாட்டிற்கு எடுத்துச் சென்று மாற்ற, ஏஜன்ட்கள் யாரும் முன் வரவில்லை. இணையதள ஏலத்திற்கு இந்த நாணயங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மூன்று முறை, இணையதள ஏலத்திற்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது. இது பலன் தரவில்லை. நாணயங்களை மாற்ற முன் வந்தவர்கள், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுக்கு, 15 கோடி ரூபாய் மட்டுமே தருவதாகக் கூறியதால், இந்த முயற்சிகைவிடப்பட்டது. இந்நிலையில், மறு ஏலம் முறையில், தற்போதைய சந்தை மதிப்பில், 95 சதவீத தொகையை அளிப்பவர்களுக்கு நாணயங்களை விற்க முடிவு செய்தனர்; இதற்கும் யாரும் முன் வரவில்லை. இறுதியாக, தேவஸ்தான அதிகாரிகள் , ரிசர்வ் வங்கியின் உதவியை நாடினர். வெளிநாட்டு நாணயங்களை மாற்ற, ஒரு வர்த்தக வங்கியை ஏற்பாடு செய்து தர, தேவஸ்தானம் தரப்பில் கோரப்பட்டது. இந்த பணியை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிடம், ரிசர்வ்
    வங்கி ஒப்படைத்துள்ளது.
Working...
X