Announcement

Collapse
No announcement yet.

முன்னோர் வழிபாடு முக்கியம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முன்னோர் வழிபாடு முக்கியம் !

    இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று வரையறுக்கிறது. இம்மூன்று வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும், எள்ளளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டுமொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.
    மூன்று முக்கியம்:
    வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழிசெய்பவை மூன்று வழிபாடுகளாகும். அவை: குலகுரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முலமுன்னோர் வழிபாடு.
    தென்புலத்தார்.
    இறந்து போன முன்னோரைப் ' பிதிரர் ' என்பர். இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகம் எனப்படும். இதனை வள்ளுவர் ' தென்புலம் ' என்பார்.
    தர்ப்பண நாட்கள்:
    எள்ளும், நீரும் முன்னோருக்கு அளித்தல் நீர்க்கடன் தருதல் எனப்படும். இதனை தர்ப்பணம் தருதல் என்பர்.
    ' மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள், தான் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்கலாகும்.
    -- தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.
Working...
X