உங்களுக்குள்ளேயே தேடுங்கள்

ஒரு செல்வந்தர் அவருக்கு ஏராளமான தோட்டங்கள் சொந்தமாக இருந்தன. ஆனால் தனக்குச் சொந்தமாக ஒரு வைரச் சுரங்கம் வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆசை. ஒரு நாள் புத்தத் துறவி செல்வந்தரைக் காண வந்தார். துறவி எல்லாம் தெரிந்த ஞானி. துறவியிடம் தன் வைர ஆசையைத் தெரிவித்து, தனக்கு உதவுமாறு வேண்டினார் செல்வந்தர். நான் சொல்வதைக் கவனமாகக் கேள், உயரமான மலைகளுக்கு இடையில் வெள்ளை மணற்பரப்பில் ஓடும் நதி எங்கே இருக்கிறது என்பதை முதலில் நீ கண்டுபிடி. அந்த வெள்ளை மணலில் தான் வைரங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்றார்.

என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? நிச்சயமாக முடியும். முயற்சி இருந்தால் வெற்றி கிட்டாமல் போகாது என்றார். அதைக் கேட்ட செல்வந்தர் தன் தோட்டங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு கிடைத்த ஏராளமான பணத்துடன் நாடு முழுக்கச் சுற்றினார். வைரத்தைத் தேடி அலைந்தார். எவ்வளவு அலைந்தும் வெள்ளை மணலைக் காண அவரால் இயலவில்லை. உலகம் முழுக்கச்சுற்றினார். கடைசியில் கையில் உள்ள காசெல்லாம் கரைந்து போய் ஸ்பெயின் நாட்டு பார்ஸிலோனா கடற்கரையில் ஒரு வாய் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் செத்துப் போனார். அந்தப் பரிதாபமான செல்வந்தரின் தோட்டங்களையெல்லாம் வாங்கினாரே ஒருவர், அவர் ஒரு நாள் தன் ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு தோட்டத்தை வலம் வந்தார். காடு போல் பராமரிப்பில்லாமல் கிடந்த தோட்டத்தின் கடைசிப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்த நதியின் மறுகரையில் எதுவோ பளபளவென்று மின்னியது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒட்டகத்துடன் அங்கே சென்றார். அது ஒரு கல், மின்னும் கல். அட நன்றாக இருக்கிறதே என்று அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு தன் வீட்டு வரவேற்பறையில் வைத்தார். சில நாள் கழித்து ஒரு புத்தத் துறவி அங்கே வந்தார். பழைய செல்வந்தர் பார்த்த அதே துறவிதான். வரவேற்பறையில் இருந்த பளபள கல்லை எடுத்துப் பார்த்தார். சுத்தமான வைரம். பல கோடி மிதிப்புள்ள இந்த வைரத்தை யாராவது வரவேற்பறையில் வைப்பார்களா? ஒரு வேளை பழைய செல்வந்தர் தான் ஏராளமான வைரங்களுடன் திரும்பி வந்துவிட்டான் போலிருக்கிறது என்று முணுமுணுத்தார் துறவி. ஆனால் வந்ததோ புது முதலாளி ஐயா, இது வைரமா? என்று வியந்தான் புது முதலாளி.

ஆமாம் மிக விலை உயர்ந்த வைரம்... ! என்ற தகவலைச் சொன்ன துறவி. அவனை அழைத்துக் கொண்டு, அந்த வைரம் கிடைத்த இடத்தைக் காட்டச் சொன்னார். அங்கே மணலுக்குள் அதே போல் வைரங்கள். ஆயிரக்கணக்கான வைரங்கள். அந்த இடம்தான் இப்போது கோல்கொண்டா வைரச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதன் உரிமையாளனாக இருந்த பழைய செல்வந்தன் பரிதாபமாக செத்துப் போக, அதை வாங்கியவன் பெரும் செல்வந்தன் ஆனான். தேடுங்கள். எல்லாவற்றையும் உங்களுக்குள்ளேயே தேடுங்கள். வெற்றி நிச்சயம்!

சுடுகாட்டு சித்தன்