Announcement

Collapse
No announcement yet.

தைதிரேய உபநிடதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தைதிரேய உபநிடதம்

    சிறின் வந்து விஸ்வே அமிர்தளிய புத்திரா"
    உளநலம் தூய்மையானதாக இருந்தால் சிந்தனைகளும் தூய்மையானதாகும். தூய்மை இல்லாமல் போனால் உள்ளத்தில் தெய்வீக தன்மை தென்படாது.
    வேத கால சிந்தனைகளில் மணி மகுடமாக திகழ்வன உபநிடதங்களாகும். அவை பலவாக இருந்தாலும் 108 பிரதானமானவை. யசுர் வேதத்தில் சுக்கில யசுர், கிருஷ்ண யசுர் என இரு வகை உண்டு. கிருஷ்ண யசுர் வேதத்தில் ஆரணியத்தில் 7 ம், 8 ம் பிரிவில் தைத்திரிய உபநிடதத்தில் வாழ்க்கை கல்வி பற்றி கூறப்பட்டுள்ளது. இது உரையாடல் வடிவில் அமைந்துள்ளது. மனிதன், கடவுள், கல்வி என்னும் 3 பகுதிகள் உள்ளது. முதல் பகுதியில் நாம் எவ்வாறு வாழ்வோம்என ஆராய்கின்றது. மனிதன் என்பவன் யார்? என்பதற்கான ஒரு விளக்கம் தருவது 2ம் பகுதி வாழ்கையின் அடிப்படையாக ஆராய்கின்றது. மனிதன் என்பவன் யார்? சமுதாயத்தில் நல்ல அங்கத்தவனாக விளங்குதல் போன்ற நல்ல அம்சங்கள் ஆராயப்படுகின்றது. வாழ்கையை வெறுக்கவோ, வாழ்கையில் இருந்து விலகி ஓடவோ வேண்டாம் என்பதை வலியுறுத்துவதுடன் வளமான இன்பமான வாழ்க்கை வாழ்வதற்கு இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகின்றது. இவ் உபநிடதத்தில் உள்ள ' ரிதம்' என்பது பிரபஞ்ச இயக்கத்தின் ஒழுங்கு முறை, அதற்கு அடிப்படையான உண்மையே சத்தியம் பிரபஞ்சம் இயங்குகின்றது. ஏனெனில் இறைவன் அதனை பின் நின்று இயக்குகின்றான். பிரபஞ்சம் என்பது இயற்கை சக்திகளின் ஒட்டு மொத்தம். இவ்வாறு இயற்கை சக்தியாகவும் அவற்றை பின் நின்று இயக்குபவரான கடவுள் ஆசிரியரையும் மாணவரையும் காப்பற்றட்டும். மன ஒருமைப்பாடே எல்லாவற்றின் சாரமாகும். மனம் குவியாமல் ஒரு செயற்பாட்டையும் செய்ய முடியாது. வாழ்வில் உயர்ந்த எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
    'ரிதம்':- பிரபஞ்சம் மாறாத ஒழுங்கு முறையில் இயங்கிகொண்டுஇருக்கின்றது. இந்த ஒழுங்கு முறையே ரிதம். இதனை புரிந்துகொண்டு வாழும் போது இயற்கை நமக்கு அனுகூலமாக அமைகின்றது.
    உண்மை:- " யாருக்கும் தீமை சொல்லாத சொல்"தவம் :- " புலன்களின் வேகத்தை கட்டுபடுத்தல்"தமம் :- " புலக்கட்டுப்பாடு. புலன்களை அலையவிட்டு அதற்கு பின்னால் செல்பவன் அழிகின்றான்."சமம்:- " மனம் பதபதப்பின்றி அமைதியாக இருத்தல்" வேள்விகள் :- " பிரபஞ்சத்தில் இருந்து நாம் திருப்பி கொடுக்கும் வண்ணம் தமது வாழ்க்கையை அமைத்துகொள்ளல்.
    1 . தேவயக்ஞம் :- தேவர்களுக்கு கொ
    2 . ரிஷியக்ஞம் :- முனிவர்களுக்கு கொடுத்தல்.
    3 . பித்துருயக்ஞம் :- இறந்தவர்களுக்கு கொடுத்தல்
    4 . நரயக்ஞம்:- மனிதர்களுக்கு கொடுத்தல்
    5 . பூதயக்ஞம்:- மிருகங்களுக்கு கொடுத்தல்
    ஸத்யம் வத தர்மம் சர ஸத்யான ப்ரமதி தவ்யம், தர்மான்ன ப்ரமதிதவ்யம், ஸ்வாதய நப்ரமதிதவ்யம் மாத்ருதேவா பவ"
    என்னும் உபநிடத கருத்து வெளிப்படுத்தும் விழுமியக் கருத்துக்களவான,உண்மை பேசுக, ஆறாம் செய்க, சத்தியத்திலிருந்தும், தர்மத்திலிருந்தும் நல்லதிலிருந்தும், நல்ல செயல்களிலிருந்தும் விலகி செல்லற்க. தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் தெய்வமாக கருதுக. குற்றமற்ற செயல்களை செய்வதாக, தகாதவற்றை செய்யற்க. உங்களுக்கான நல்ல செயல்களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும். அல்லாதவற்றை ஒதுக்குதல் வேண்டும்.
    மேலும் பெரியோர்களும், ஆசிரியர்களும் செய்யும் செயல்களில் நன்மையையும், தீமையையும் விமர்சித்து நல்லதே செய்ய வேண்டும். நல்லசிந்தனையாளர்களும், அனுபவசாலிகளும், சுதந்திரமானவர்களும்,அமைதியானவர்களும், அறச்சார்புடையோர்களும் ஆன அந்தணர்கள் செய்வதை முனைப்புடன் செய்வது நல்லது எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசப்பியாசம் செய்து நல்லொழுக்க சீலனாக உருவாகும் நபர் பிரம்ம வித்தையை பெறுவதற்கு தகுதியானவராகிவிடுவார். பிரம்மத்தை அடைகின்றவன் பரமபதத்தை அடைகின்றான். ( ப்ரஹமவிதாப்னோதிபரம் ) " ஸத்யம் ஞான மனர்த்தம் ப்ரஹம்" பிரம்மம் என்பது சத்தியமும் ஞானமும்,முடிவுற்றதும் ஆகும். பிரம்மம் அல்லாதது எதுவுமில்லை என்பதால் அதுதான் வாழ்கையின் அடித்தளம்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X