Announcement

Collapse
No announcement yet.

Jagrat avastha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jagrat avastha

    அவஸ்தா த்ரயம் சோம்பியாய்ச் சும்மா சுகமுண்டு றங்கிடிற் சொல்வே றென்கதி யருணாசலா மௌனமாக நீ இருந்துவிட்டால் நானும் சுகமாக உண்டும் உறங்கியும் இருந்து விட்டால் முக்தி கிடைப்பதற்கு என்ன வழி? உறக்கத்தில் ஒருவிதமான அமைதியுள்ளது. ஆனால் அது நிஜமான அமைதியல்ல.. உறக்கத்திலிருந்து எழும்பொழுது நமது இஹலோக வாழ்க்கையின் இன்ப துன்பங்களெல்லாம் நம்மைப் பற்றிக்கொள்ளும். உறக்கத்தில்க் கூட நாம் காணும் சொப்னங்கள் நம்மை இன்ப துன்பங்களுக்கு ஆளாக்குகின்றன. மௌனம் துவைத சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு மார்க்கம் தான். .தூக்கம் மௌனத்திற்கான முதல் படிதான். ஏனென்றால் ஆழ்ந்த நித்திரையில் துவிதம் மறந்து மறைந்து நாம் தனியனாகிறோம். நாம் தூக்கத்திலிருந்து விழித்து எழும் பொழுது,"நேற்று நல்ல தூக்கம்;என்னை மறந்து தூங்கினேன்" என்று கூறுகிறோம் ".என்னை மறந்து தூங்கினேன்" கூறுவதலாயே தூங்கும்பொழுதும் நான் விழித்துக் கொண்டிருந்திருக்கிறது என்பது புலனாகிறது. இல்லையென்றால் 'என்னை மறந்து தூங்கினேன்" என்பது எப்படி தெரியும். ஆகவே தான் பகவான் ரமணர் ஜாக்ரத்,சொப்ன,சுஷுப்தி என்ற மூன்று நிலைகளிலும் "நான்" இருந்துகொண்டு தானிருக்கிறது. இவைகளுக்கு மேலும் ஒரு அவஸ்தை இருக்க வேண்டும் என்கிறார். அந்த நிலையில் நான் ஏறக்குறைய மறைந்து விடுகிறது..அதை பகவான் 'துரிய' நிலை என்கிறார். அவஸ்தா த்ரயம் என்று குறிப்பிடப்படும் 'ஜாக்ரத், சொப்ன' சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளிலும் துவித எண்ணங்கள் நம்முள்ளே இருந்து கொண்டு தானிருக்கிறது.. ஒருவிதமான அமைதியின்மை இருந்து கொண்டே தானிருக்கும் சுஷுப்தி கூட நமக்கு அமைதியை தராது . நமது இலட்சியம் அதையும் தாண்டிய ஒரு அவஸ்தையாக இருக்க வேண்டும்.அதைத் தான் பகவான் துரியாவஸ்தை என்கிறார் துரியா அவஸ்தையைக் குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் அவஸ்தா த்ரயத்தை குறித்து ஒரு சிறிய விளக்கம் இந்த இடத்தில் தவறாகாது. ஆதி சங்கரர் அவஸ்த த்ரயத்தைக் குறித்து கீழ்க் கண்டவாறு விளக்கியுள்ளார். ஜாக்ரத்:. மாயையால் ஆவரணம் செய்யப்பட்டுள்ள நாம் சாதாரணமாக இருக்கும் நிலை இது. இந்த நிலையில் ' நான்" நம்மில் மிகவும் வலுவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும். இன்பம்-துன்பம்,விருப்பு-வெறுப்பு, நான்- நீ; உயர்ந்தவன்- தாழ்ந்தவன், மேலானது-கீழானது என்கின்ற துவித மன உளைச்சல்களுக்கு ஆட்ப்பட்டிருப்போம். இந்த அவஸ்தை நமது ஸ்தூல சரீரத்தோடு மிகவும் சம்பந்தப் பட்டுள்ள அவஸ்தை. மாண்டூக்யோபனிஷத் இந்த அவஸ்தயைக் குறித்து கீழ்க் கண்டவாறு கூற்ப்பட்டுள்ளது: ஜாக்ரைத-ஸ்தானோ பஹிஷ்-ப்ரஜ்னாய: சப்தாங்க ஏகோனவிம்சதி முக: ஸ்தூல-புக் வைஷ்வானர ப்ரதமா பாதாஹ் ஜாக்ரத் அவஸ்தயில், நமக்கு நம்மிலிருந்து வேறுபட்ட வெளி உலகம் தெரியும் இந்த அவஸ்தயில்,ஏழு அவயவங்களும்,பத்தொன்பது வாய்களும் உளன.அவைகள் மூலம் நாம் புற உலகத்தைக் காண்கிறோம்;அறிகிறோம். முதல் குணம் நாம் உடலால்-கர்மேந்திரியங்களல் உலகை அறிகிறோம்.நாம் சப்தாங்கங்கள் ஏழு உறுப்புக்களை உடையவர்களாகவும் இருக்கிறோம். அந்த ஏழு உறுப்புக்கள் என்ன,என்ன? இது சம்பந்தமாக முண்டகோபனிஷத் கூறுகிறது: அக்னிர்மூர்தா சக்ஷுஸீ சன்ற=ஸூர்யா,திசா ஸ்ரோத்ரே,வாக் விவ்ரிடாஸ்ச வேதாஹ; வாயுஹ் ப்ரானாஹ ஹிருதயம் விஸ்வம்சய,பாதாப்யம் ப்ரித்வி.ஈசா சர்வ-பூதாந்தராத்மா இந்த பரமாத்மன்-ஈசா சர்வ பூதராத்மா எல்லா சராசரங்களிலும் அமர்ந்திருக்கிறான். சுயம் பிராகாசிகின்ற ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற சிரசும் (அக்னி மூர்தா) சூரிய சந்திரர்களை கண்களாகக் கொண்டவனும், திசைகலை காதுகளாகக்,வேதங்களாகப்பட்ட வாக்குகளையுடையவனும், உலகம் முழுவதும் நிறந்திருக்கின்ற வாயுவை பிராணனாக கொனண்டவனுமான அவனிற்கு உலகமே அவனது இதயம்,புவி தான் அவனது பாதங்கள்.அவனே அந்தர்யாமி எனப்படுகிறான் இவன்த்தான் விராட் புருஷன் என்ற வேதங்களில் வருணிக்கப்பட்டிருக்கிறான். இந்த விராட் புருஷனைத்தான் குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனன் கண்டான்;கௌரவ சபையில் சமாதானப் பேச்சுக்கு சென்ற கிருஷ்ணர் காண்பித்தார்.;இந்த மஹா புருஷனைத்தான் குழந்தையாக இருந்த கண்ணனின் வாயில் யசோதை கண்டாள். இந்த மஹாபுருஷனை வைஸ்வா நரன்-விஸ்வபுருஷன் என்று வேதங்களும் உபனிஷத்துக்களும் கூறுகிறது. இந்த அந்தர்யாமி உயிரினங்களில் மட்டுமல்ல,உயிரில்லா கற்கள் போன்ற எல்லா வஸ்துக்களிலும் காணப்படுகிறது., ஒரே ஒரு வித்தியாசம்-பிரகிருதியின் குணங்களான சத்துவம்,ராஜசம்,தாமசம் வெவ்வேறு வஸ்துக்களில் வெவ்வேறு நிலைகளில் காணப்படுகிறது. அசேதனங்களான உயிரற்ற வஸ்துக்களில் தாமச குணம் மேலோங்கி நிற்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரஜொ-சத்துவ குணங்கள் விரிவடையும் பொழுது சேதனம் வெளிப்படுகிறது. இம்மாதிரியான மாற்றத்தின் முதல் படி தான் பிராணனின் வெளிப்பாடு. செடி-கொடிகளிலும் மரங்களிலும் நாம் அசைவை காண்கிறோம்.ஆனால் அவைகளுக்கு சிந்தனா சக்தி இல்லை.பசிக்கும் பொழுது கத்துவதற்கோ,ஆபத்து வரும்பொழுது தப்பித்து ஓடுவதற்கோ அவைகளால் முடிவதில்லை பக்ஷி மிருகங்களில் தாவர இனங்களிலிருந்து மேலான சத்துவ குண வெளிப்பாடைக் காண்கிறோம். மனித வர்க்கத்தில் சத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. இதன் அடுத்த நிலை தான் ஆனந்த நிலை.அதை அடைவது தான் நமது இலட்சியம்.நமது மானவ நிலையில் சத்துவ குணங்கள் மேலோங்கி நின்றாலும் கூட ரஜொ-தமஸ் குணங்களின் தாக்கத்திலிருந்து பூரணமாக விடுபட முடிவதில்லை.அது அந்த விராட் புருஷன் ஒருவனுக்கே இயலும்.அவனில் துவைத மனப்பான்மை கிடையாது.எல்லாம் ஒன்றே;எல்லாம் "நான்".அங்கு நீயில்லை,அவனில்லை. அஹம் மட்டும்தான்.அஹம் அஸ்மி.. பஹிஷ் ப்ரஜ்னா என்பது மூலம் நாம் நமக்கு புறம்பாக ஒரு உலகத்தை காண்கிறோம் என்பதை குறிக்கிறார்கள் நமது ரிஷி வரியர்கள்.அதே நேரத்தில் நமக்குள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரியாதவர்களாகவும் இருக்கிறோம் வைஸ்வா நரனுக்குள்ளது போல் நமக்கும் பத்தொன்பது வாய்கள் உள்ளன.னாம் எதன் வாயிலாக பிற பொருள்க்களை உள் வாங்கி ஜீரணித்து நம்முள் லயிக்க வைக்கின்றோமோ அவையெல்லாம் வாய்கள் தான்.கண்களும் வாய்கள் தான்.ஏனென்றால் அவை காணுகின்ற காட்சிகளையும் பொருள்களையும் அதன் குணங்களையும் உள் வாங்கி நமது உலகத்தின் பாகமாக,சிந்தனையின் பாகமாக செயல்களின் காரணிகளாக மாற்றுகின்றன அதே போல் காதுகள் நாம் கேட்கின்ற ஒலிகள்.சொற்கள் இவைகளை உள்வாங்கி நமது செயல்களின் மீது தாக்கம் செலுத்துகின்றன. சத்துவ குணங்களுடைய ஆகாரம் என்றால் பால் காய்கனிகள் போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமல்ல. ஆகவே தான் சுத்த ஆஹாரம் சத்துவ குணப் பிரதானம் என்று சொல்லும்பொழுது காணுகின்ற காட்சிகள்,கேட்கின்ற செய்திகள், ஸ்பரிசதினால் உணர்கின்ற சுகங்கள் எல்லாமே சாத்வீகமாக இருக்க வேண்டும். ஐந்து ஞானேந்திரியங்கள்,ஐந்து கர்மேந்திரியங்கள்,ஐந்து காரணிகள் ஐந்து-ப்ராண,அபான,வ்யான,உதான,சமான,இவ்வாரு பதினைந்து வாய்கள்.மேலும், நான்கு அந்தக்கரண உபாதிகள்.-மனஸ்,புத்தி,அஹம்கார,சித்தம். இப்படி பத்தொன்பது வாய்கள் மூலம் உட்கொள்ளப்படுகின்ற ஆஹாரங்கள் நமது தனித்தன்மையை உருவாக்குகின்றன. வெளி உலகை-இந்த பிரபஞ்ச்த்தை சிருஷ்டிக்கின்றதே இந்த பத்தொன்பது புலன்களினால் தான் நமக்கும் ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் இந்த புலன்களினால் பாதிக்கப்படுவதில்லை என்பது தான். வெளி பிரபஞ்சத்தை முழுவதையும் சிருஷ்டித்து பார்த்து அனுபவிக்கின்ற நம்மால் நம் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஜாக்ரத் அவஸ்தயில் நாம் நமது ஸ்தூல சரீரம் சம்பந்தப்பட்ட அறிவைத்தான் பெறுகிறோம், பயன் படுத்துகிறோம்.ஸ்தூல சரீரத்தை லிங்க சரீரம் என்றும் கூறுவார்கள் லிங்கம் எனறால் ஓரு குறியீடு-அவ்வளவு தான்.நமது ஸ்தூல சரீரம் ஒரு அடையாள சின்னம் மட்டும் தான்.அவை நிஜமல்ல.ஆகவே ஜாக்ரத அவஸ்தையில் நாம் உணருகின்ற எதுவும் உண்மையல்ல. Courtesy:Sri.Harihara Sarma
Working...
X