Announcement

Collapse
No announcement yet.

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தத

    ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது ஆராதனை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவன பிரவேசம் செய்து 343 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனங்களில் இந்த நான்கைந்து நாட்கள் மிகவும் விசேஷம். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி துவங்கி தற்போது வெகு விமரிசையாக ஆராதனை நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 13, 2014 புதன்கிழமை அன்று உத்தர ஆராதனை மற்றும் மஹா ரதோத்சவம்.

    இந்த இனிய தருணத்தில், ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி அவசியம் நமது தளத்தில் பதிவளிக்கவேண்டும் என்று விரும்பினோம். போரூரைச் சேர்ந்த திரு.சுகுமாரனின் வாழ்வில் ஸ்ரீ ராயர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான அடுத்த பாகம் இனிமேல் தான் தட்டச்சு செய்யவேண்டும். அது எப்படியும் இந்த வியாழனோ அல்லது அடுத்த வியாழனோ இடம்பெறும். ஆனால், ஸ்ரீ ராகவேந்திரரின் ஆராதனையை முன்னிட்டு, அவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்வதற்கு முன்பு நிகழ்த்திய அற்புதம் ஏதேனும் ஒன்றை உங்களிடையே பகிர்ந்து கொள்ள ஆசை நமக்கு.
    அப்போது சட்டென்று நினைவுக்கு வந்தது அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ நூலின் முதல் பாகத்தில் வரும் இந்த சம்பவம் தான்.
    சமஸ்கிருதத்திற்கு அர்த்தமற்ற எதிர்ப்பு கிளம்பியுள்ள இந்த தருணத்தில் நிச்சயம் இந்த பதிவு மிகவும் பொருத்தமானது. பலரின் சந்தேகத்தை தீர்க்கக் கூடியது. நமக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க கூடியது. படித்து முடித்தவுடன் பேசாமல் ஸ்ரீ ராகவேந்திரர் வாழ்ந்த அந்த காலகட்டதிற்கே சென்றுவிடமாட்டோமா என்று நம் அனைவரையும் ஏங்க வைக்கக்கூடியது!
    வேதத்தின் சக்தியை உணர்த்திய ஸ்ரீ ராகவேந்திரர்!
    ஸ்ரீ ராகவேந்திரர் பட்டமேற்ற பிறகு தேச சஞ்சாரம் சென்றுகொண்டிருந்தார். அவரது பாதம் பட்டு பல இடங்கள் பவித்திரமடைந்தன.
    ஷீரஸங்கி என்ற ஊரிலே அவர் தங்கியிருந்த காலத்தில் அவ்வூரிலிருந்த பிராம்மணர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஸ்ரீ ராகவேந்திரரிடம் தாம் அனுபவித்து வரும் துன்பங்களை எல்லாம் அடுக்கடுக்காய் சொல்லி அழுதனர்.
    அதாவது ஷீரஸங்கியிலே ஒரு பாளையக்காரர் இருந்தார். அந்த ஊரிலே அவர் மிகவும் செல்வாக்கானவர். தான தருமங்கள் செய்து நல்ல பெயரோடு செல்வாக்காக இருப்பது ஒரு வகை; மற்றோரை அதட்டி மிரட்டி ஏய்த்து ஏமாற்றி தனக்கு மற்றவர்கள் எல்லாம் அடங்கியிருக்குமாறு செய்து செல்வாக்கோடு இருப்பது மற்றொரு வகை. இதில் ஷீரஸங்கி பாளையக்காரர் இரண்டாவது வகை.
    அவர் செய்து வரும் கொடுமைகள் ஏராளம். அந்த கொடுமைகளுக்கு காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த பிடிவாதமான எதிர்ப்பு வாதமான கொள்கையே ஆகும். ரைட்மந்த்ரா

    வேதங்களும் மந்திரங்களும் உபயோகமில்லாதவை. அதற்காக செலவிடும் நேரமும், யாகம் என்ற பெயரில் ஹோமம் வளர்த்து அதிலே திரவியங்களை கொட்டுவதும் வீணானவை, உபயோகமில்லாதவை, யாருக்கும் பலன் தராதவை என்பது அவர் கொள்கை.
    மந்திரங்களையும் வேத சாஸ்திரங்களையும் மட்டும் அவர் வெறுக்கவில்லை. அவற்றையெல்லாம் அனுஷ்டானம் செய்யும் பிராமணர்களை கண்டால் அவருக்கு துச்சம். அதனால் அவர்களையும் அடியோடு வெறுத்தார்.
    வேத மந்திரங்களை எல்லாம் கைவிடுமாறு அவ்வூர் பிராம்மணர்களை அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் கேட்காது போகவே அதட்டிப் பார்த்தார். அப்படியும் அவர்கள் அடிபணியாததால் அராஜகத்தில் இறங்கிவிட்டார்.
    பிராமணர்களின் நிலங்களை எல்லாம் தாமே உழுது பயிரிட்டார். அதில் விளைவதையெல்லாம் தாமே அனுபவித்தார். எவ்வளவோ தடுத்தும் தனது அராஜகத்தினால் அவர்களை ஒடுக்கிவிட்டார்.
    அதாவது பெயரளவில் பிராமணர்களின் பெயரில் நிலங்கள் இருந்தனவே தவிர அந்நிலங்களின் ஏகபோக உரிமையாளராக விளங்கியது என்னவோ பாளையக்காரர் தான். இதுமட்டுமால்லாமல் அவர்களுக்கு எந்தெந்த விதங்களில் எல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அந்தந்த விதங்களில் எல்லாம் தொல்லை கொடுத்து வந்தார். ஹிம்சித்து வந்தார்.
    தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த அவ்வூர் பிராமணர்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரரின் விஜயம் வரப்பிரசாதமாக அமைந்தது. ரைட்மந்த்ரா
    தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் துயரமான அனுபவங்களை ஸ்ரீ ராகவேந்திரரிடம் சொல்லி அழுத வண்ணம் நின்றிருந்தபோது, ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களை நோக்கி திருக்கரத்தை அசைத்து ஆசி வழங்கி புன்னகை பூத்தார்.
    “உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பம் எனக்கு தெரியாதா? அதற்காகத் தானே இந்த ஊரில் சில நாட்கள் தங்க திட்டமிட்டிருக்கிறேன்!” என்று சொல்வதை போல இருந்தது அவரது அருள் வீசும் பார்வை. அந்த பார்வையின் வசீகரத்தில் தங்களது துன்பமெல்லாம் மறந்தவர்களாய் அங்கிருந்து சென்றனர் அந்த பிராமணர்கள்.
    அடுத்த நாள்…
    ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அந்த ஷீரஸங்கியிலே யாகம் வளர்க்கப் போவதாக அறிவித்தார். அந்த செய்தி ஊரெங்கும் பரவி பாளையக்காரரின் காதுகளுக்கு எட்டியது.
    உடனே அவர் வெகுண்டெழுந்தார். இது நாள் வரை யாகம் நடத்த விடாமல் தடுத்து வந்த பாளையக்காரருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் அந்த ஊரிலே யாகம் செய்யப்போவதாக அறிவித்ததில் அளவில்லா கோபம் கனன்று எரிந்தது.
    அந்த வேகத்தோடே ஸ்ரீ ராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றார்.
    “நீங்கள் இந்த ஊரிலே யாகம் செய்வது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை”
    “அப்படியா!”
    “என்னுடைய சொல்லின்படி தான் இந்த ஊரே நடந்து வருகிறது. அப்படியிருக்கும்போது என்னைக் கேட்காமல் நீங்கள் யாகம் செய்வதாய் அறிவித்தது பெரும் தவறு!”
    “சரி.. விஷயம் தான் தெரிந்துவிட்டதே… இனி சம்மதம் தானே?”
    “எனக்கு இந்த மந்திரங்களை கண்டாலே பிடிக்காது. வேதம் வேதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் நேரத்தை வீனாக்க்குவதோடு மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மந்திரங்களுக்கு என்று தனியாக எந்தவொரு சக்தியும் கிடையாது. அதை மூலதனமாக வைத்து உங்கள் பிராம்மண ஜாதி மற்ற சமூகத்தினரை ஏமாற்றி தமது வயிற்றை நிரப்பி வருகிறது. உங்களை பெரிய மகன் என்று ஊரில் எல்லாரும் கூறிக்கொண்டு திரிகிறார்கள். மகானைப் போல நடந்துகொண்டு நான் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள்” என்று சற்று ஆக்ரோஷமாகவே பாளையக்காரர் கேட்டதும் ஸ்ரீ ராகவேந்திரர் அவர் மீது பார்வையை செலுத்தினார். சிறிது நேரம் மௌனம் சாதித்தார். ரைட்மந்த்ரா.

    “நான் கேட்டதற்கு பதிலே இல்லையே… அப்படியென்றால் வேதங்கள் எல்லாம் பொய் என்பதை தாங்களும் ஒப்புகொள்கிறீர்களா?”
    ஸ்ரீ ராகவேந்திரர் வேதங்களை பற்றி சாதாரணமாக விளக்கத் தலைப்பட்டார். ஆனால் ஆரம்பித்திலேயே பாளையக்காரர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து “இந்த விளக்கமெல்லாம் நான் எத்தனையோ கேட்டு கேட்டு புளித்துவிட்டது. உங்களால் வேதங்களுக்கு சக்தி உண்டு என்பதை நிரூபித்து காட்டமுடியுமா?” என்றதும்…. “ஓ.. அதற்கு நான் எப்போதும் தயார். அதை எந்தவிதத்தில் நிரூபித்துக் காட்ட வேண்டும என்பதை மட்டும் சொன்னால் போதும்” ஸ்ரீ ராகவேந்திரர் சொன்னதும் பாளையக்காரர் சிறிது நேரம் யோசித்தார்.
    பின் சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தவராய், “என்னிடத்தில் பட்டுப் போன மரம் இருக்கிறது. பார்ப்பதற்கு காய்ந்து போன உலக்கை போன்று இருக்கும். பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்த்ததாக வரலாறே கிடையாது. அப்படிப்பட்ட மரத்தை தங்களால் உங்கள் வேத மந்திரத்தால் துளிர்க்கச் செய்து காட்ட முடியுமா?”
    “யாராலும் முடியாது, எப்போதுமே முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டதை முடியும் என்று வேதத்தால் நிரூபிக்கவேண்டும்…அவ்வளவு தானே??”
    “ஆம்! அவ்வளவு தான்!”
    “அப்படியானால் அந்த உலக்கையை (மரத்தை) இங்கே கொண்டு வாருங்கள். வேத மந்திரங்களின் சக்தியால் துளிர் விடச் செய்யலாம்!”
    “அப்படி நீங்கள் செய்து காண்பித்துவிட்டால் உங்கள் சொல்படி நான் நடந்துகொள்கிறேன். எனது கொள்கையையும் அடியோடு நான் மாற்றிக்கொள்கிறேன்…” என்றவாறு பாளையக்காரர் அங்கிருந்து சென்றார்.
    தன்னிடமிருந்த உலக்கையை போன்றதொரு மரக்கட்டையை எடுத்துக்கொண்டு வந்து ஸ்ரீ ராயரிடம் கொடுத்தார் பாளையக்காரர்.
    அதை பெற்றுக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை அவரின் கண்ணெதிரிலேயே அங்கிருந்த முற்றத்தில் நட்டு வைத்தார். ரைட்மந்த்ரா.
    பின்னர் அனுதினமும் வேதம் மந்திரங்களை ஜெபித்து கமண்டலத்திலிருந்து நீரை ஊற்றினார். ஸ்ரீமூல ராமர் அபிஷேக ஜலத்தையும் அந்த மரக்கட்டைக்கு வார்த்து வரலானார்.
    இப்படியாக சில நாட்கள் ஸ்ரீ ராகவேந்திரர் செய்து வந்தபோது, நட்டு வைக்கப்பட்டிருந்த அந்த பட்டுப்போன மரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை வரத் துவங்கியது.
    இன்னும் சில நாட்கள் கழித்து அந்த மரத்துண்டு அழகாக துளிர் விட ஆரம்பித்தது.
    அவ்வளவு தான்.
    பாளையக்காரர் ஊரையே கூட்டிக்கொண்டு ஸ்ரீ ராகவேந்திரரிடம் வந்தார். சுவாமிகளை வணங்கினார். “சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்! நான் எவ்வளவோ கொடுமைகள் இழைத்துவிட்டேன். வேதங்களுக்கு இருக்கும் மகத்துவத்தை அறியாமல் மடத்தனமாக நடந்துகொண்டுவிட்டேன். இன்று சவாலில் தோல்வியுற்று மனம் திருந்தி உங்கள் தண்டனைக்காக நின்று கொண்டிருக்கிறேன். நீங்கள் தரும் தண்டனையை மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்!” என்று கண்ணீர் வடித்தார். ரைட்மந்த்ரா
    “எல்லோரிடமும் அன்பாக T பழகவேண்டும். மற்றவர்களின் பொருட்களையோ சொத்தையோ அபகரித்திருந்தலா திருப்பி தந்துவிடவேண்டும். இது தான் தண்டனை!” ஸ்ரீ ராகவேந்திரர் சொன்னதும் “அப்படியே செய்கிறேன் சுவாமி” என்று சொன்னதோடல்லாமல் பிராமணர்களின் நிலம் மட்டுமல்லாது அவற்றின் விலை பொருட்களையும் திருப்பித் தந்தார்.
    பின்னர் அனைவரின் வேண்டுகொளுக்கினங்கள் அங்கு ஒரு யாகத்தை செய்துவிட்டு ஹூப்ளி புறப்பட்டார் சுவாமி.
    ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேதசிந்யாதரோ குரு:
    ஸர்வவித்யா ப்ரவீணோந்யோ ராகவேந்த்ராந் ந வித்யதே
    (நன்றி : அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை – பாகம் 1′ | தட்டச்சு : www.rightmantra.com)
    ராகவேந்திரர் நினைத்திருந்தால் அந்த கணமே அந்த பாளையக்காரரை சபித்து அவரை உடனடியாக வழிக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் ராகவேந்திர சுவாமிகளும் சரி, மகா பெரியவாவும் சரி தங்கள் வாழ்நாளிலோ பிருந்தாவன பிரவேசம் செய்த பின்னரோ எவரையும் சபித்ததில்லை. தங்களை இகழ்ந்தவர்களுக்கு கூட அருள் செய்து வருகின்றனர். இது கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம்.
    இந்த பட்ட மரம் துளிர்த்தது போல மஹா குருவின் மகிமையை படிக்கும் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பொங்கி, வாழ்வில் பசுமை துளிர்க்கட்டும். சுபிக்ஷம் பெருகட்டும்.
    - See more at: http://rightmantra.com/?p=12975#sthash.9iLrA119.dpuf
Working...
X