ஸ்ரீனிவாச கவி, இன்றைக்குப் பொங்கல் அபார மணமும், ருசியுமாயிருந்தது. நாளைக்கு இளவரசனுக்குப் பிறந்த நாள். அபிஷேகம், ஆராதனையெல்லாம் அமர்க்களமாயிருக்கும். உங்க கைவரிசையில் நைவேத்தியமும் பிரமாதமாயிருக்க வேண்டும் என்றார் சிற்றரசர். பக்த ஸ்ரீனிவாசன், எல்லாம் அம்பாள் தயவு என்றார் பணிவுடன், இரவு நெடுநேரம் தியானத்தில் இருந்தார். அவர் படுக்கும்போது மணி இரண்டரை. காலை சூரியன் சுளீரென்று முகத்தில் தாக்க, பதறியபடி எழுந்தவர், ஐயோ! இப்படித் தூங்கிவிட்டேனே! எப்போ குளிச்சு தளிகை தயார் பண்ணி... அடடா! பெரிய மணி அடிக்கிற சத்தம் கேட்கிறதே! அபிஷேகம் ஆரம்பிச்சுட்டாளா? பரக்கப் பரக்க கோயிலுக்குள் நுழைந்தால், சாமி, நைவேத்தியத்தை முடிச்சுட்டு எங்க போயிட்டு வர்றீங்க! வாசனை மூக்கைத் தொளைக்குது என்றபடி எதிர்வந்தான் மாலைகட்டி. நிவேதனம் ஆகிறதுக்கு முன்னே வாசனை பிடிக்கிறது அபசாரம். அண்ணா! நான் நாலு மணிக்கே வந்துட்டேன். ஆனா என் ஒத்தாசை இல்லாமலே விதவிதமா ஜமாய்ச்சிருக்கேள் என்று புகழ்ந்தபடி வந்தான் உதவியாள் அப்புடு.
ஸ்ரீனிவாசருக்கு ஒரே குழப்பம். சமையல் முடிந்ததாகச் சொல்கிறார்களே? யார் சமைத்திருப்பார்கள்? ஸ்ரீனிவாசா! அப்புடு! நைவேத்தியங்களை எடுத்து வாருங்கள் அர்ச்சகர் குரல் கணீரென்று ஒலித்தது. நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல், நாவில் நீர் ஊற வைக்கும் புளியோதரை, மொறு மொறு உளுந்து வடை, மணக்கும் தயிர் சாதம். சேவார்த்திகள் பெருமையோடு ஸ்ரீனிவாசரைப் பார்த்தனர். ஸ்ரீனிவாசர் அடக்கமாய் நின்றிருந்தார். அம்பாளோட வைர மூக்குத்தியைக் காணலியே? அர்ச்சகர் பரபரப்பாகத் தேடினார். சிறிய நகையல்லவா? மற்ற ஆபரணங்களோடு சிக்கியிருக்கும். நிதானமாகப் பாருங்கள் என்றார் சிற்றரசர். வைர அட்டிகையும், காசு மாலையும், கங்கணமும் பத்திரமாக இருக்கும்போது, இதைத் திருட எந்தக் களவாணி வரப்போகிறான்? என்று அமைச்சர் கேட்க, பதில் தெரியாமல் மனம் கலங்கினார் பட்டர். 55 ஆண்டுகளாக உன்னைத் தொட்டுப் பூஜை செய்யும் என்னை சோதிப்பது நியாயமா? என்று அவரது மனம் புலம்பியது.
அமைச்சரின் ஒன்பது வயது மகள் திடீரென ஆவேசமாகி, என் மூக்குத்தி மடைப்பள்ளி மாடத்திலிருக்கிறது. ஸ்ரீனிவாசன் நடு ஜாமம்வரை என்னை உபாஸித்துக் களைப்பில் உறங்கிவிட்டான். எனக்கான நிவேதனத்தை நானே தயாரித்துக் கொண்டேன். வெளிச்சத்துக்காக மூக்குத்தியைக் கழற்றி வைத்தேன் எனக்கூற அர்ச்சகரும், ஸ்ரீனிவாசரும் மடைப்பள்ளிக்கு ஓட, மேடையில் மூக்குத்தி ஒளி வீசியது. தாயே! ஒரு பக்தனைக் காப்பாற்ற இன்னொரு பக்தனைத் தவிக்க விட்டாயே! என்று உருகினார் பட்டர்.
பாகம் செய்து என் நாவைப் பாடவும் செய்தாய், தாயே!
ஊகம் இலார்க்கு இன்னும் உதவினாய்- சோகந்தீர்
நாதநலம் காட்டுகின்ற நான்மறையாம் தண்டைசேர்
பாதநிழல் யான் தங்க அருள்வாயே!
என்று ஸ்ரீனிவாசர் பாமாலை பொழிய, அவருக்கு அங்கேயே கனகாபிஷேகம் செய்து பொன்னாடை போர்த்தினார் சிற்றரசர்

சுடுகாட்டு சித்தன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends