Announcement

Collapse
No announcement yet.

ரகசியம் அறிந்த ரிஷி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரகசியம் அறிந்த ரிஷி

    ஆனந்த நாட்டிலே வேதவிரதன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். அவரது புத்திரி சாரதை மகா ரூபவதி. அதே ஊரில் அறுபது வயதை எட்டிய பத்மநாபர் என்ற பணக்காரக் கிழவர், தடாகத்துக்கு நீரெடுக்க வரும் சாரதையை கேலி செய்து வம்புக்கிழுப்பார்.
    ஒருநாள் வேதவிரதரிடம் சாரதையைப் பெண் கேட்டு அனுப்பினார் அவர். வந்தவர்கள்,

    பத்மநாபர் வயதில் பெரியவர் என யோசிக்காதீர்கள். சாரதைøயின் மேல் பழி சுமத்தி அவளுக்குத் திருமணமே நடக்க விடாமல் செய்துவிடுவார். மேற்குத் தெரு மைதிலி, கீழண்டை வீதி கிரிஜா போன்றோரெல்லாம் முதிர்கன்னிகளாய் போனதை அறிவீரல்லவா? என அச்சுறுத்தினர். வேறு வழியின்றி சம்மதித்தார் வேத விரதர்.
    பத்மநாபர் சாரதை விவாகம் சிறப்பாக நடந்தது. கல்யாணத்தன்று அந்தி சாயும் நேரம், குளத்துக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து திரும்புகையில் பத்மநாபரை ஒரு கருநாகம் தீண்ட, அந்த இடத்திலேயே வாயில் நுரை கக்கி மடிந்தார். சாரதை, மணமான அன்றே விதவையானாள்!

    நைத்துரு ரிஷியின் ஒரு சீடருக்குப் பார்வையில்லை. சாரதையின் இல்லத்துக்கு வந்தார். அந்த சீடர். சாரதை அவரை வரவேற்று நமஸ்கரித்தாள்.
    பெண்ணே! நீடூழி காலம் புத்திரனோடும், பர்த்தாவோடும் சௌபாக்கியத்தோடு வாழ்வாயாக! என ஆசீர்வதித்தார் சீடர். சாரதை பதற்றத்தோடு, சுவாமி! நான் கைம்பெண். தங்கள் ஆசி பாறையில்

    கொட்டியபாலாகிவிட்டதே என வருந்தினாள்.
    அம்மணி! என் வாக்கிலிருந்து பேசியவள் சாட்சாத் பரமேஸ்வரி. உனக்கு நான் உமா-மகேஸ்வர விரதத்தைச் சொல்லித் தருகிறேன். தொடர்ந்து அதைக் கடைப்பிடி. நன்மையே நடக்கும் என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேத விரதன் தம்பதியர் உள்ளே நுழைந்தனர். நடந்தவற்றை சாரதை கூற, அவரிடமே உமா மகேஸ்வர விரதத்தை நடத்திக் கொடுக்க வேண்டினார் வேதவிரதர். அவ்வண்ணமே விரதமிருந்து

    அன்னதானம் முடித்து சிவபுராண பாராயணமும் நடத்தினார் ரிஷி சீடர். அப்போது ஒரு மின்னல் தோன்ற, அதில் அம்பிகை வெளிப்பட்டாள். சீடருக்கும் பார்வை தெரிந்தது. அம்பாளை நமஸ்கரித்து, தாயே! சதா பஞ்சாட்சரியை ஜபிக்கும் என் நாவிலிருந்து வரும் வாக்கு ஏன் பிசகானது? எனக் கேட்டார் சீடர்.

    குழந்தாய்! இந்தப்பெண் சென்ற பிறவியில் ஒரு வேதியரக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். மூத்தாள் புத்தி சரியில்லாதவள். அவளைப் பேண இவள் தடை விதித்தாள். அதனாலேயே இவளுக்கு இந்த நிலை. அவளின் முன்ஜென்மக் கணவனே பத்மநாபன். உமா-மகேஸ்வர விரதத்தால் இவள் பாபம் தொலைந்தது.

    விரைவில் இவள் மோட்சமடைவாள். மறு பிறப்பு உடனே வாய்க்கும். உன்வாக்கு மெய்யாகும். உன்னைக் குடும்பத்தோடு வந்து காண்பாள் என்று அருளி மறைந்தாள்.
    அதுபோன்றே, மறு ஜென்மததில் சாரதை தன் கணவரோடும், சாரநாதன் என்ற புத்திரனோடும் ஸ்ரீசைலம் சென்றபோது முனிவரைத் தரிசித்து ஆசி பெற்றாள். ரகசியம் அறிந்த ரிஷி புன்னகைத்தார்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X