வெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளையர்களின் அடாவடி ஆட்டத்தை அடக்க முடியுமா..?
முடியும் என நிரூபித்திருக்கிறார் தினேகா என்ற இந்த மாணவி.......
நேற்றைய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் மாணவி பற்றிய அந்த அதிரடி செய்தி வந்தது.......
கரூரில் P.A.vidya Bhavan என்ற பள்ளியில் படிக்கும் மாணவி தினேகா. பீஸ் கட்ட தந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். பள்ளி நிர்வாகமோ கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை.
இறுதியில் கல்வி கொள்ளையர்களுக்கு எதிராக பெற்றோர்கள் கையில் எடுக்க தயங்கும் விசயத்தை ஒரு மாணவியான இவர் செய்திருக்கிறார்......
வெறும் பத்து ரூபாய் காசை கையில் வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று தன் பள்ளியில் நடக்கும் கல்விக் கொள்ளையை அம்பலப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்..........
கலெக்டர் அலுவலகம் உடனடி நடவடிக்கையில் இறங்க பள்ளி நிர்வாகம் பதறிப்போய் வந்திருக்கிறது. இறுதியில் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்ய ஒரு ஆஃபரை வீசியிருக்கிறது......
அதை புறங்கையால் தள்ளிவிட்டு அந்த பெண் வந்ததை படித்தபோது நிஜமாகவே பெருமையாக இருந்தது..
இன்று அரசுப்பள்ளியில் படிக்கும் இந்த மாணவி எதிர்காலத்தில் ஒரு முக்கியமான ஆளுமையாக வருவார் என உறுதியாக என்னலாம்....
வாருங்கள் நாமும் தினேகாவை வாழ்த்துவோம்..!
வாழத்துக்கள் தினேகா

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsPattabiraman Narasimachari