கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்

கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த ஆண்டை தேசியக் கல்வி ஆண்டாக அறிவித்ததன் மூலம் பலரது எதிர்பார்ப்பை மைய அரசு பூர்த்தி செய்துள்ளது. இப்படி ஒரு ஆண்டை ஏதாவது ஒரு குறிக்கோளுக்காக அறிவிக்க வேண்டுமேயானால் குறைந்த பட்சம் இரண்டு வருடகாலமாக பல்வேறு திட்டங்கள் நிகழ்வுகளுக்கு திட்ட வரையறைகளை விவாதித்து பட்ஜெட்டில் குறிப்பிட்டு, தனியாக பணம் ஒதுக்கி விரிவாகச் செய்வதுதான் வழக்கம்.

"கணித ஆண்டு" அப்படி வரவில்லை. கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது ஆண்டு எனக் குறிப்பிட்டு, ஜெர்மனி மற்றும் சுவீடன் நாடுகளில் ஆண்டு முழுவதும் "ஆய்வு சமர்ப்பித்தல் கணித மாநாடு" என அறிவித்தபோது நம் அரசு
விழித்துக்கொண்டு நம்ம லோக்கல் அறிவு ஜீவிகளின் கூக்குரலுக்கு அவசரமாக செவிசாய்த்து அதிரடியாக அறிவித்துள்ளது.

எது எப்படியோ ......... கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து "கொடிது கொடிது வறுமை கொடிது" என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும். கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதற்கிடையே கணிதமேதை குறித்த வாழ்வாதாரங்களைத்தான் காப்பாற்றவில்லை ..........
கணிதத்தையாவது காப்பாற்றினோமா என்றால் நாலும் மூணும் எத்தனை என்பதற்கே கால்குலேட்டரைத் தேடும் ஒரு புதிய தலைமுறை அதிர்ச்சிதரும் நிஜமாய் நம் கண் முன்னே நடமாடும் கொடுமை. கணிதக் கல்வியகங்கள் எல்லாம் 'division center" ஆகிவிட்ட வியாபார யுகத்தில் கணித ஆண்டு! என்ன செய்யப் போகிறோம். வழக்கம்போல ராமானுஜம் படத்திறப்பு. குத்துவிளக்கு ஏற்றும் மந்திரி மனைவி, பரிசு வழங்கும் அதிகாரி, பன், டீ சாப்பிட்டு G.O. கிராக்கிப்படி கணக்கை கச்சிதமாய் நினைவுகூர்ந்து, பின் கலையும் ஒரு அரசு விழா. குழந்தைகள் வெயிலில் பூத்தூவ....கலை நிகழ்ச்சிகளுடன் விழா முடிந்தது என தினசரிகளின் செய்தியாகப்போகிறதா ...... அல்லது மனக்கணக்குகள், கணிதவியலார் சிந்தனைகள், குழந்தைகள் அறிய ஆர்வம் மேம்படுத்தும் கணிதநூல்கள்.... ஆரோக்கியமான அறிவியல் விவாதங்கள் என குட்டி ராமானுஜன்களைப் படைக்கும் புதிய வழியை தரப்போகிறதா..... தமிழில் கணிதம் தொடர்பான புத்தகங்களின் கணித ஆண்டை எப்படி பயன்படுத்தப் போகிறோம் ...... சிந்திப்போம்.