ஸ்ரீவைகாநஸாகமமும் ஸ்வாமி தேசிகனும்.

திருவேங்கடவனும் தூப்புல் திருவேங்கடமுடையானும்

தாஸஸ்ய விஞ்ஞாபநம்.

ஸ்ரீமத்வேதமார்கேத்யாதி விசேஷணவிசிஷ்டராய் ஸகலசாஸ்த்ர பாரங்கதராய் மஹாமஹோபாத்யாயேத்யாதி பிருதாலங்க்ருதராய் அஸ்மத்ஸ்வாமியாய் எழுந்தருளியிருக்கும், திருப்பதி ஸம்ஸ்க்ருத வித்யாபீடத்தில் முதல்குலபதிஸ்தானத்தை அலங்கரித்தவரான தி,ச.ச.நாவல்பாக்கம் சடகோப ராமானுஜதாதாசார்ய ஸ்வாமி ஸம்ஸ்க்ருதத்தில்
அனுக்ரஹித்த விஷயங்களை ஸங்க்ரஹித்து சாஸ்த்ரார்த்தரத்நமாலா என்ற நூலை ஸமீபகாலத்தில் திருப்பதி ஸம்ஸ்க்ருத வித்யாபீடத்தின் அதிகாரிகள் ப்ரகாசநம் செய்துள்ளார்,. ஸ்வாமி அந்த நூலின் ஒரு ப்ரதியை தாஸனுக்கு க்ருபையுடன் அனுக்ரஹித்தார், அதில் மூர்தி பூஜையும் வைகாநஸ ஆகமும் என்ற தலைப்பில் உள்ள கட்டுறையில் சிலவற்றை விஞ்ஞாபிக்கிறேன்.

எம்பெருமானுக்கு பரம் வ்யூஹம் விபவம் அர்சை அந்தர்யாமீ என
ஐந்து நிலைகள் உள்ளன, அவைகளில்,
அர்சிக்கப்படுகிற விக்ரஹத்தை அர்சை என்றும் மூர்தி என்றும் கூறிவருகிறோம், விக்ரஹத்தை பூஜை செய்வதில் வேதமே ப்ரமாணமாகும்
ப்ரவஃ பாந்தமநதஸோ தியாயதே மஹே சூராய விஷ்ணவே சார்சத என ரிக்வேதம் விஷ்ணுவின் விக்ரஹபூஜையை விதிக்கிறது, மேலும் அந்தஃ ப்ரவிஷ்டஸ்ஸாச்தா ஜநாநாம் ஸர்வாத்மா என்று கூறப்பட்ட பரம் ப்ரஹ்மத்தை கர்மயோக ஞாநயோக பக்தியோகங்களால் அடையமுடியும் என்பதாக பவத்கீதாவசனமாகும். கர்மயோகத்தில் யஞ்ஞம் ப்ரதானமாகும், யஞ்ஞம் என்பது ஸமூர்தம்- விக்ரஹத்துடன் கூடியது அமூர்தம் என இரண்டுவிதமாகும், அதில் யஞ்ஞபுருஷனான விஷ்ணுவை அக்நியில் ஆராதிப்பது அமூர்தயஞ்ஞமாகும், பகவதாலயங்களில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்களை அர்க்ய பாத்யாதி உபசாரத்தால் ஆராதிப்பது ஸமூர்தயஜனமாகும், முன்பு கூறப்பட்ட மந்த்ரத்தில் அர்சத என்றுள்ளதால் ஸமூர்தயஞ்ஞம் கூறப்பட்டதாகிறது.

யஜ தேவபூஜாயாம் என்றும், அர்ச் பூஜாயாம் என்றும் உள்ளது, அர்ச தாதுவின் பொருளும் பூஜைதான் , ஆயினும் அது மனுஷ்யதேவதாஸாதாரணமான பூஜையை குறிப்பதாகும், இந்தரம் யஜதே என்பதுபோல் தபோதநம் யஜதே என ப்ரயோகம் இல்லை,ஆதலால் யஜ என்பது தேவபூஜையை மட்டும் குறிக்கும். மேலும் யஜனம் என்பது இந்த்ராய இதம் ந மம என்பதான மாநஸிகமான ஹவிஸ்ஸ கொடுக்கும் க்ரியையாகும், அர்சனமோவெனில் ஸ்வாகதவ்யவஹாரம் முதலான அர்க்ய பாத்யாதி பாஹ்யமாந அநேககார்யமாகும்,
அர்சனம் என்பது நேரில் காணப்படும் புருஷர்களிடத்திலேயே காணப்படுகிறது.
ஆதலால் விஷ்ணுமர்சத என்பதும் காணப்படுவதான விஷ்ணுவை குறித்தே கூறியதாகும், ஸூக்ஷ்மமான தேவரூபம் ப்ரத்யக்ஷமல்லாததால் அத்துடன் கூடிய மூர்தியை அர்ச்சிக்கவேணுமென வேதம் கூறியதாகிறது. ஆக தேவதாராதனம் இரண்டுவிதம், இதில் அர்சநையை பெறுவதால் தேவபிம்பத்துக்கு அர்சை என பெயர் ப்ரஸித்தமானது,

ச்ரௌதஸூத்ரகர்தாக்களான ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் பிம்பபூஜையை குறிப்பிடவில்லை, ஆயினும் முன்பு கூறியபடி வேதத்தில் கூறியபடியால் பிம்பபூஜை செய்வது சாஸ்த்ரஸம்மதமாகும், ஸ்ரீமத்ராமாயணத்தில் ஸ்ரீராமர் ஸீதையுடன் தேவாலயத்தில் இருந்தார் என காண்கிறது
ஸ்ரீமத்யாயதநே விஷ்ணோஃ சிச்யே நரவராத்மஜஃ
வாக்யதஃ ஸஹ வைதேஹ்யா பூத்வா நியதமாநஸஃ என,
மேலும் வேதத்தில் கூறப்பட்ட யாகமார்கத்தை ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் ச்ரௌதஸூத்ரமாக உபதேசித்ததுபோல் வேதத்தில் கூறப்பட்ட தேவபிம்பபூஜையை ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரப்ரவர்தகரான ஸ்ரீவிகனஸ மஹர்ஷியு்ம் அவருடய சிஷ்யர்களான ப்ருகு, அத்ரி, கச்யப, மரீசி மஹரிஷிகள் உபதேசித்தபடியால் இதுவும் ப்ரமாணமாகும், மேலும் ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் அமூர்தமான பூஜாநடைமுறையை மட்டும்
ச்ரௌதஸூத்ரங்களால் விளக்கினார்கள், ஸ்ரீவிகநஸ மஹரிஷியோவெனில் ச்ரௌதத்துடன் நிற்காமல் தர்ம க்ருஹ்யஸூத்ரங்களையும் உபதேசித்து மற்றவர்களால் விடப்பட்ட ஸர்வலோகத்துக்கும் க்ஷேமத்தை பண்ணுகிற மூர்தியுடன் கூடிய பகவதாராதநத்தையும் உபதேசித்து லோகத்ததுக்கு மஹோபகாரத்தை செய்தவராவார், ஆதலால் பிம்பத்தை பூஜிப்பது வேதத்தில் கூறப்பட்டதால் ப்ராமாணிகமாகும்.
ஆயினும் சிலரின் ஆக்ஷேபம் வருமறு,
ப்ரஹ்மஸூத்ரத்தில் ஸ்ரீவ்யாசமஹரிஷி பாஞ்சராத்ராகமம் ப்ரமாணம் என ஸ்தாபித்தார், ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிடவில்லை, அதுவும் ப்ரமாணமாகில் குறிப்பட்டிருப்பார், இது போல் ஸ்ரீயாமுனாசார்யரும் ஸ்ரீபாஞ்சராத்ராகமம் ப்ரமாணமென ஆகமப்ராமாண்யம் என்ற கரந்தத்தால் ஸாதித்தார், அவரும்
ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிவில்லை ப்ரமாணமாகில் அதை உபேக்ஷிக்க காரணமென் என.
இதின் வாஸ்தவமான ஸமாதானம்,
பாஞ்சராத்ராகமம் ப்ரமாணமில்லை என கூறுவதில் அநேக காரணஙகள் இருந்தன ,அவையாவன,நிர்மூலம், அஸத்பரிக்ரஹம், அவைதிகஸம்ஸ்காரவிதானம் . வித்யாஸ்தானத்தில் உள்படுத்தாதது , வைதிகஸம்ஸ்காரத்தை விட்டது, என,ஆதலால் மந்தபுத்தியை உடையவர்கள் அதை ப்ரமாணமில்லை என கூற அவைகளுக்கு ஸமாதானம் கூறி அதை ப்ரமாணம் என ஸாதிக்கவேண்டியிருந்தது, அதுபோல் ஸ்ரீவைகைநஸம் ப்ரமாணமில்லை என ஆக்ஷேபம் எழவில்லை ஆதலால் ஸமாதானம் கூற ஆவச்யகமி்ல்லை , ஆதலால் அவர் அதை குறிப்பிடவில்லை,
ஆயினும் ஸ்ரீயாமுனமுனியானவர் ஸ்ரீபாஞ்சராத்ராகமத்துக்கு ப்ராமாண்யம் கூறியதுபோல் ஸ்ரீவைகாநஸத்துக்கு ப்ராமாண்யம் கூறாததால் இது ப்ரமாணமில்லை என கூறுவர் என்று நினைத்தே ஸ்வாமி தேசிகன் ந்யாயபரிசுத்தி எனும் நூலில் ஸ்ரீவைகாநஸ சாஸ்த்ரத்தை குறித்து
1,வேதாவிருத்தத்வாத், 2.வைதிகமந்த்ரைரேவ ஸகலகர்மவிதாநாத், 3,ஸூத்ராந்தராணாமபி குண்டஸம்நிவேசலகேஷணாதிஷு க்வசித் க்வசித் ததுபஜீவநாத், 4.வர்ணாச்ரமதர்மாணாமனுகூலம் நாராயாணபரத்வப்ரதிபாதநாதேரபி 5.ஸத்வமூலத்வேன 6..ப்ராமாண்யைகஹேதுத்வாத்.
இந்த பகவத்சாஸ்த்ரம் வேதவிருத்தமல்லாததால், வைதிகமந்த்ரங்களாலேயே எல்லா கர்மாக்களையும் அனுஷ்டிப்பதால் ,மற்றஸூத்ரங்களிலும்,
குண்டங்களை நிர்மாணம் செய்வதில் சிலவிடங்களில் ஸ்ரீவைகாநஸத்தை அனுஸரிப்பதால், வர்ணாச்ரமதர்மங்களுக்கனுகுணமாக நாராயணனே பரதேவதை என உரைப்பதால் ஸத்வமூலமுமானபடியால் ப்ரமாணமென்பதில் மாத்ரம் இது காரணமானபடியால் இது ப்ரமாணமாகும் என,
மேலும் ஸ்ரீவைகாநஸானுஸாரிகளை குறித்து
த்ருச்யந்தே ஹி ஏதே வம்சபரம்பரயா வேதமதீயாநாஃ , வைகாநஸஸூத்ரோக்தவைதிகஸகலஸம்ஸ்காரசாலிநஃ,
,வர்ணாச்ரமதர்மகர்மடாஃ , பகவதேகாந்தா, ப்ராஹ்மணாஃ..
ஸ்ரீவைகாநஸர்கள் வம்சபரம்பரையாக வேதாத்யயனம் செய்தவர்களாய், வைகாநஸஸூத்ரத்தில் கூறியபடி எல்லா வைதிகஸமஸ்காரங்களை உடையவர்களாய் வர்ணாச்ரமதர்மகர்மாக்களை அனுஷ்டிப்பவர்களாய் பகவானிடத்தில் மாத்ரம் பக்தியை உடைய ப்ராஹ்மணர்களாக காணப்படுகிறார்களல்லவா என ஸாதிக்கிறார்,
ஸ்ரீபாஷயகாரருக்கு பின்பு ஸ்ரீவைகாநஸம் ப்ரமாணமில்லை என எழுந்த ஆக்ஷேபத்தை பரிஹரித்து ஸ்ரீவைகானஸாகமத்தை ஸம்ரக்ஷித்தவர் ஸ்வாமி தேசிகனானபடியாலேயே ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரானுயாயிகளான ஸ்ரீவைகாநஸ பட்டாசார்யர்கள் அனைவரும், க்ருதக்நே நிஷ்க்ருதிர் நாஸ்தி என சாஸ்த்ரம் கூறினவழியில், ஸ்வாமி தேசிகனின் அவதாலஸ்தலமான ஸ்ரீதூப்புலில் கைங்கர்யம் செய்துவரும் பட்டாசார்யர்களைப்போல், ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்தி ச்ரத்தையுடன் க்ருதஞதையுடன் இருக்க ப்ராப்தம் என்பதாகிறது.
ஸ்ரீவைகாநஸாகமமானது சதுர்தசவித்யாஸ்தானத்தி்ல் ஒன்றான தர்மசாஸ்த்ரத்தி்ல் சேர்ந்ததாகும்,ஸ்வாமிதேசிகன் ந்யாயபரிசுத்தியில் மன்வத்ரிபார்கவாதிவத், மனு, அத்ரி, ப்ருகு முதலானவைகள் கூறியதும்
தர்மசாஸ்த்ரமாகும் என ஸாதித்தார்,
ஸ்ரீமத்பாகவதத்தில்
வைதிகஸ்தாந்த்ரிகோ மிச்ர இதி மே த்ரிவிதோ மகஃ என்பதால் ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரத்தில் கூறியபடி செய்யும் ஆராதனமே வைதிகமாகும்,,பாஞ்சராத்ரோக்தாராதனம் தாந்த்ரிகமாகும்,மற்றது மிச்ரமாகும்,

மூர்தயஜனம் ஆமூர்தயஜனம் என்று இரண்டுவிதமான பகவதாராதனத்தில் ஸமூர்தமான ஆராதனத்தை குறிப்பிடும் வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தில் உள்ள ஸாம்யம் வருமாறு,
எல்லா வைதிககர்மாக்களுக்கும் மூலம் அக்ந்யாதாநமாகும், அதாவது,ஓரிடத்தி்ல் அக்னியை ப்ரதிஷ்டை செய்வது, 1,அக்ந்யாயதனங்களில் ஹிரண்.த்தை வைக்கவேணும், அதுபோல் பிம்பத்தி்ன் பீடத்தில் ரத்னாதிகளை வைக்கிறார்கள்,,
2,யாகத்தில் அக்னி, கார்ஹபத்யம், ஆஹவனீயம், அன்வாஹார்யம்,ஸப்யம், ஆவஸத்யம் என ஐந்துவிதமாகும், ஆகமத்தில் த்ருவபேரம், கௌதுகபேரம், உத்ஸவபேரம்,ஸ்நபநபேரம், பலிபேரமென ஐந்துவகை உள்ளது,
3.ச்ரௌதத்தில் கார்ஹபத்யத்தில் நின்றும் ஆஹவநீயத்தை எடுப்பதுபோல் த்ருவபேரத்தில் நின்ரும் மற்றபேரங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு ஆராதநம் செய்யப்படுகிறது,
4, ச்ரௌதத்தில் சில இடங்களில் த்ரேதாக்னி ப்ரஸித்தம், அதுபோல் ஆலயத்திலும் சிலவிடங்களில் மூன்று பேரத்தை மாத்ரம் ஸேவிக்கலாம், 5.ச்ரௌதத்ததில் நித்யாக்நிஹோத்ரம் போல் ஆலயத்தில் நித்யாராதனமாகும், தர்சபூர்ணமாஸ இஷ்டியைப்போல் ஸ்நபநம் , பஞ்சபர்வோத்ஸவங்களாகும்.
6.. நித்யாக்நிஹோத்ரமும் நித்யாராதனமும் வைதீகமந்த்ரத்தால் நடைபெறுகிறதுகள், மற்றுமுள்ள ப்ரதானஸாம்யம்
7..அமூர்தயாகத்தின் துல்யமான பலனும் வைதீகமந்த்ரவத்தான விக்ரஹாராதனத்தால் கிடைக்கும்,
மரீசிமஹரிஷி ஸாதிப்பது- க்ருஹே தேவாயதனேவா பக்த்யா நாராயணமர்சயேத்,
கச்யபர் ஸாதிப்பது,
தஸ்மாதலயே நித்யம் விதிநா விஷ்ணோரர்சனம், அநாஹிதாக்நீநாமக்நிஹோத்ரஸமம் யஸ்மாதேதச்சாக்நிஹோத்ரபலம் ததாதி,
ஆனபடியால் ஆலயத்தில் நித்யம் விதியுடன் கூடிய பகவதாராதனம் என்பது ஆஹிதாக்னியல்லாதவர்களுக்கு அக்னிஹோத்ரஸமமாகும், காரணம் கூறுகிறார் ஆராதனமானது அக்நிஹோத்ரபலத்தை கொடுக்கும் என,
காம்யபலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள்
பலஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன் மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவதுபோல், .உதாஹரணமாக மழையை வேண்டி காரீரி இஷ்டி செய்வதால் நடத்தியவர்களுக்கும் பயனை காண்கிறோம் அதுபோல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள் ஸ்ரீவைகாநஸஅர்சகர்கள் மூலமாக
ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனாக அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வேதப்ரதிபாதிதமான யாகத்ததை செய்வதில்லை, யாகனுஷ்டான பரம்மபரை மிகவும் குறைவு என சிலர் குறை கூறுகிறார்கள். ஸ்ரீபாஷ்யகாரரின் பிதா கேசவஸோமயாஜீ , ஆயினும் ஸ்ரீபாஷ்யகாரர் ஸம்ஸாரத்தில் விரக்தராய் ஸந்யாஸம் ஸ்வீகரித்தபடியால் அவருக்கு யாகானுஷ்டானத்தில் அவகாசமில்லை,ஸ்வாமி தேசிகன் காலத்தில், தற்சமயம் பாரததேசத்துக்கு சீனா ,பாகிஸ்தான் முதலிய அண்டை நாடுகளின் உபத்ரவம் போல் நமது ஸம்ப்தாயத்துக்கு அத்வைதிகளாலும் ஏகதேசிகளாலும் அபாயம் ஏற்பட அதை ஸம்ரக்ஷிக்கவேண்டிய நிர்பந்தம் ..வாதம் செய்வதும் பரமதநிரஸநார்தமாக க்ரந்தம் அனுக்ரஹிக்கவேண்டிவந்ததாலும் பரமதநிரஸநபூர்வகமாக ஆலயங்களில் யாகரூபமான திருவாராதனத்தை நடத்திவைத்தபடியால், பிதாமஹன் புண்டரீகாக்ஷயஜ்வாவானபடியாலும் யாகம் செய்யாவிடினும் தோஷமில்லை என்பதாலும் யாகானுஷ்டானம் செய்ததாக ப்ரமாணம் காணவில்லை எனலாம்,ஆயினும் சிலர் ஸ்வாமி யாகமனுஷ்டித்ததாக கூறுகிறார்கள்.சிலர் ஸ்ரீதேசிகனுக்குப்போல் விரக்தியில்லாதபோதும் யாகம் செய்யாததில் தேசிகனே யாகம் செய்யவில்லை என்பார்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவைகாநஸர்கள், வைஷ்ணவர்களே அல்ல,பஞ்சஸம்ஸ்காரத்தில் சேர்ந்த தப்தசங்கசக்ரதாரணத்தை- ஸமாச்ரயணம் செய்தவர்களே வைஷ்ணவர்கள், வைகாநஸர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணரூபமான கர்மா கிடையாதே என கேள்விக்கு ஸ்வாமிதேசிகன் சரணாகதிதீபிகையில் ஸாதிக்கும் ஸமாதானம்,
த்வாம் பாஞ்சராத்ரகநயேந ப்ருதக்விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாராஃ
ஸம்ஞாவிசேஷநியமேந ஸமர்சயந்தஃப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தந்யாஃ.
ப்ருதக்விதேந, நியத என்கிற பதப்ரயோகத்தால் தப்தசங்கசக்ரதாரணம் இல்லாமலே வைகாநஸர்களுக்கு பகவதாராதனத்தில் அதிகாரம் உள்ளது
என்பதை குறிப்பிட்டதாகும்,நியதாதிகாரமென்பது அவரவர்களின் சாஸ்த்ரத்தில் கூறியப்ரகாரம் அதிகாரமுள்ளவர்கள், ஆகையால் அவர்களுக்கு பகவாதாராதனம் செய்ய யோக்யதையை பெற தீக்ஷை தேவை இல்லை. அதில் தீக்ஷையில்லாததே பாஞ்சராத்ரத்தை விட வேறுபட்டது என்பதில் ப்ரமாணமாகும் , தீக்ஷயிலேயே பஞ்சஸம்ஸ்காரமும் சேருவதால் தீக்ஷையில்லாதவர்களுக்கு பஞ்சஸம்ஸ்காரமும் தேவையில்லை என்பதாம். அவர்களின் சாஸ்த்ரத்தில்
கர்பே மாஸி அஷ்டமே விஷ்ணுபலிம் குர்யாத்யதாவிதி
தஸ்மின் திநே ப்ரவிஷ்டோஹம் கர்பே தஸ்யாஃ சிசும் ப்ரதி,
மத்கரேஷுஸ்திதம் சக்ரம் சங்கம் சைவ ததைவ ச
மத்கரேணைவ குர்வந்தி கர்பே தஸ்யாஃ சிசோர்புஜே.
வைகாநஸாதிசாஸ்த்ரேண ஸய்தயம் கர்பவைஷ்ணவஃ
கர்பத்தின் எட்டாவது மாதத்தில் விஷ்ணுபலி என்கிற கர்மாவை அனுஷ்டிப்பதால் அந்த தினத்தில் நான் கர்பத்தில் ப்ரவேசிப்பதால், என்கையிலுள்ள சங்க சக்ரத்தாலேயே சங்கசக்ரதாரணத்தை செய்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணம் தேவையில்லை,
இதனால் சில வைகாநஸமுறைப்படி திருவாராதனம் நடைபெறும் ஆலயங்களில், தப்தசங்கசக்ரதாரணம் செய்தவைகாநஸர்களே ஆராதனம் செய்யவேணுமென்பது அவர்களின் சாஸ்தரத்துக்கு விருத்தமாம்.

வைகாநஸரிஷி முதலாக இதுநாள்வரையில் அவர்களின் வம்சத்தில் ஜனித்தவர்களான வைஷ்ணவர்களே ஆலயத்தில் வைகாநஸாகமப்ரகாரம் ஆராதனம் செய்யத்தகுந்தவர்கள், போதாயனஸூத்ரகாரர்கள் ஆபஸ்தம்பஸூத்ரப்ரகாரம் வைதீககர்மாவை அனுஷ்டிக்க முடியாதது போல் வைகாநஸரல்லாதவர்கள் வைகாநஸமுறைப்படி வைகானஸஸூத்ரப்ரகாரம் ஆராதநம் செய்ய அதிகாரிகளல்ல.
ஸ்ரீவைகாநஸ ஆகமப்ரகாரம் திருவாராதனம் நடைபெறுவதில் திருவேங்கடமாகிற திவ்யதேசம் ப்ரதானமாகும், பிற்காலத்தில் ஸ்ரீவைகாநஸத்தை ப்ரமாணமாக்கி ஸம்ரக்ஷித்தபடியாலேயே ஸ்வாமி தேசிகனின் அவதாரஸ்தலமான ஸ்ரீதூப்புலிலும், மற்றும் ஸ்வாமி உகந்தருளின திருவஹீந்திரபுரம், திருவிண்ணகர் முதலிய திவ்யதேசங்களிலும் ஸ்வாமிக்கு ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரோக்தப்ரகாரம் நித்யபடி திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளும் நடைபெறுகிறது எனலாம்.

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தின் ஸாம்யம் உள்ளதுபோல் திருமலைக்கும் ஸ்வாமிதேசிகனின் அவதாரஸ்தலத்துக்கும் பல ஸாம்யங்கள் உள்ளன,

1.திருமங்கையாழ்வார் ,பொன்னை மாமனியை ,,,,,,,,,,,வேங்கடத்து உச்சியில்,,,,,,,,,காணும் தண்காவிலே என மங்களாசாஸநம் செய்கிறார்,இதனால் இங்கு ஸ்வாமிதேசிகனின் அவதாரம் ஸூசிதம்,

2..இருவருக்கும் ஸ்ரீவேங்கடேசன் என திருநாமம்

3.இரண்டு ஸ்தலத்திலும் வைகாநஸபகவத்சாஸ்த்ரோக்தப்ரகாரம்
திருவாரதனம் நடைபெறுகிறது,

4.இரண்டு இடத்திலும் ஒரேகாலத்தில் வார்ஷீக உத்ஸவம் நடைபெறுகிறது,

5.இரண்டு ஸ்தலத்திலும் திருவாராதனத்துக்கு த்ரவ்யம் அடியார்களால் ஸமர்ப்பிக்கப்படுகிறது,ஸம்யகாசாரயுக்தாம் என ஸ்வாமிதேசிகனால் கொண்டாடப்பட்ட திருமலையில் திருவாராதனத்தில் வைகல்யமில்லாததால் ஸம்வத்ஸரப்ராயச்சித்தரூபமான பவித்ரரோத்ஸவம் ஸமீபகாலம் வரையில் நடைபெறவில்லை.,

6.இரண்டு ஸ்தலத்திலும் திருமலை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்கள் திருவாராதனத்தில் ப்ரதானமான பாராயணத்தையும் மந்த்ரபுஷ்பகைங்கர்யத்தையும் செய்து வருகிறார்கள்,

காம்யபலனை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள்
பலஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன் மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவதுபோல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள் ஸ்ரீவைகாநஸஅர்சகர்கள் மூலமாக
ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனாக அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள் என்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறபடியால் இந்த திருத்தண்கா திவ்யதேசத்தில் நடைபெறும் கைங்கர்யத்திலும் இதுநாள்வரை அன்வயிக்காதவர்கள் ஸ்ரீதேசிகனடியார்கள் யதாசக்தி அன்வயித்தாலும் எம்பெருமான் மற்றும் ஆசார்யச்ரேஷ்டரின் அனுக்ரஹத்தால் அவரவர்களின் இஷ்டங்களை பெறலாம் என்பது திண்ணம்,
srithooppul@yahoo.com yennappan@computer.net
(4 photos)