Announcement

Collapse
No announcement yet.

அறிவோம் ! தெளிவோம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அறிவோம் ! தெளிவோம் !

    நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?
    பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூக்குமம் என்று இரண்டு வகைப்படும். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம்.
    ஆரம்ப நிலை ( சமயதீட்சை ) தீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை ( விசேஷ தீட்சை முதலியன ) தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டு,. எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகல நன்மைகளையும் தரவல்லவை.
    தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?
    தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல. ஒரு சிலர் தவறாகப் பிரசாரம் செய்ததால் வந்த வினை இது. சப்தமி வரை உத்தமம் - முதல் நிலை. தசமி வரை மத்திமம் - இரண்டாம் நிலை. சதுர்தசி வரை அதமம் - மூன்றாம் நிலை. தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
    -- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
    -- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 25, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X