Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஏழாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஏழாவது அத்தியாயம்

    ஞான விஞ்ஞான யோகம்
    பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம்.
    ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தையுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு, அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர்.


    அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.

    श्रीभगवानुवाच
    मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः।
    असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु॥१॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    மய்யாஸக்தமநா: பார்த² யோக³ம் யுஞ்ஜந்மதா³ஸ்²ரய:|
    அஸம்ஸ²யம் ஸமக்³ரம் மாம் யதா² ஜ்ஞாஸ்யஸி தச்ச்²ருணு ||7-1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச, பார்த² = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா
    மயி ஆஸக்தமநா: = என்பால் இசைந்த மனத்தினனாய்
    மத் ஆஸ்²ரய: = என்னைச் சார்ந்து
    யோக³ம் யுஞ்ஜந் = யோகத்திலே அமர்ந்தவனாய்
    ஸமக்³ரம் மாம் = எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை
    யதா² அஸம்ஸ²யம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்²ருணு = எந்தவித ஐயமும் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்!
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.
    ________________________________________
    ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः।
    यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते॥२॥
    ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமித³ம் வக்ஷ்யாம்யஸே²ஷத:|
    யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ⁴யோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸி²ஷ்யதே ||7-2||
    யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்தால்
    இஹ பூ⁴ய: ஜ்ஞாதவ்யம் = இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய
    அந்யத் ந அவஸி²ஷ்யதே = வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ
    ஸவிஜ்ஞாநம் இத³ம் ஜ்ஞாநம் = விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை
    அஸே²ஷத: அஹம் தே வக்ஷ்யாமி = முழுமையாக நான் உனக்கு சொல்வேன்
    ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.
    ________________________________________
    मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये।
    यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः॥३॥
    மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்²சித்³யததி ஸித்³த⁴யே|
    யததாமபி ஸித்³தா⁴நாம் கஸ்²சிந்மாம் வேத்தி தத்த்வத: ||7-3||
    ஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம் = பல்லாயிர மனிதரில்
    கஸ்²சித் ஸித்³த⁴யே யததி = ஒருவன் சித்திபெற முயல்கிறான்
    யததாம் ஸித்³தா⁴நாம் அபி = (அவ்விதம்) முயற்சி செய்கிற யோகிகளிலும் கூட
    கஸ்²சித் மாம் தத்த்வத: வேத்தி = யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்
    பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.
    ________________________________________
    भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च।
    अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा॥४॥
    பூ⁴மிராபோऽநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ரேவ ச|
    அஹங்கார இதீயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||7-4||
    பூ⁴மி: ஆப: அநல: வாயு: க²ம் = மண், நீர், தீ, காற்று, ஆகாயம்
    மந: பு³த்³தி⁴ அஹங்காரம் ச ஏவ = மனம், மதி, அகங்காரமும்
    மே இயம் ப்ரக்ருதி = என் இந்த இயற்கை
    இதி அஷ்டதா⁴ பி⁴ந்நா = இவ்வாறு எட்டு விதமாக பிரிந்து தோன்றுகிறது
    மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.
    ________________________________________
    अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम्।
    जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्॥५॥
    அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்³தி⁴ மே பராம்|
    ஜீவபூ⁴தாம் மஹாபா³ஹோ யயேத³ம் தா⁴ர்யதே ஜக³த் ||7-5||
    மஹாபா³ஹோ! = பெருந்தோளாய்!
    அபரா = இது என் (அபரா என்னும்) கீழியற்கை
    இத: அந்யாம் = இதனின்றும் வேறுபட்டதாகிய
    யயா இத³ம் ஜக³த் தா⁴ர்யதே = எந்தப் பிரக்ருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ
    மே ஜீவபூ⁴தாம் பராம் ப்ரக்ருதிம் = எனது உயிர் வடிவான (பரா என்னும்) மேலியற்கையை
    வித்³தி⁴ = தெரிந்து கொள்
    இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.
    ________________________________________
    एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय।
    अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा॥६॥
    ஏதத்³யோநீநி பூ⁴தாநி ஸர்வாணீத்யுபதா⁴ரய|
    அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: ப்ரலயஸ்ததா² ||7-6||
    ஸர்வாணி பூ⁴தாநி = எல்லா உயிர்களும்
    ஏதத் யோநீநி = இந்த இரண்டு பிரக்ருதிகளிலிருந்து உண்டானவை (என்றும்)
    அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: = நானே முழுமையாக உலகிற்கும் உற்பத்தியாகும் இடம்
    ததா² ப்ரலய = அவ்வாறே ஒடுங்குகின்ற (அழிவு) இடம்
    இதி உபதா⁴ரய = என்று உணர்ந்து கொள்
    எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.
    ________________________________________
    मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।
    मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव॥७॥
    மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
    மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||
    த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
    மத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்
    பரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை
    இத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்
    ஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்
    மயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது
    தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.
    ________________________________________
    रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः।
    प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु॥८॥
    ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபா⁴ஸ்மி ஸ²ஸி²ஸூர்யயோ:|
    ப்ரணவ: ஸர்வவேதே³ஷு ஸ²ப்³த³: கே² பௌருஷம் ந்ருஷு ||7-8||
    கௌந்தேய = குந்தி மகனே!
    அஹம் அப்ஸு ரஸ: = நான் நீரில் சுவையாகவும்
    ஸ²ஸி² ஸூர்யயோ: ப்ரபா⁴ = ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும்
    ஸர்வவேதே³ஷு ப்ரணவ: = எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும்
    கே² ஸ²ப்³த³: = வானில் ஒலியாகவும்
    ந்ருஷு பௌருஷம் அஸ்மி = ஆண்களிடத்து நான் ஆண்மை
    நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.
    ________________________________________
    पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ।
    जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु॥९॥
    புண்யோ க³ந்த⁴: ப்ருதி²வ்யாம் ச தேஜஸ்²சாஸ்மி விபா⁴வஸௌ|
    ஜீவநம் ஸர்வபூ⁴தேஷு தபஸ்²சாஸ்மி தபஸ்விஷு ||7-9||
    ப்ருதி²வ்யாம் புண்ய: க³ந்த⁴: ச = மண்ணில் தூய நறுமணமாகவும்
    விபா⁴வஸௌ தேஜ: அஸ்மி = நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன்
    ச ஸர்வபூ⁴தேஷு ஜீவநம் = அவ்வாறே எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும்
    தபஸ்விஷு தபஸ்² அஸ்மி = தவம செய்வோரின் தவமாகவும் இருக்கிறேன்.
    மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.
    ________________________________________
    बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्।
    बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्॥१०॥
    பீ³ஜம் மாம் ஸர்வபூ⁴தாநாம் வித்³தி⁴ பார்த² ஸநாதநம்|
    பு³த்³தி⁴ர்பு³த்³தி⁴மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ||7-10||
    பார்த² ஸர்வபூ⁴தாநாம் = பார்த்தா, எல்லா உயிர்களுக்கும்
    ஸநாதநம் பீ³ஜம் = சநாதனமாகிய விதை என்று
    மாம் வித்³தி⁴ = என்னை அறிவாய்
    அஹம் பு³த்³தி⁴மதாம் பு³த்³தி⁴ = புத்தியுடையோரின் புத்தி நான்
    தேஜஸ்விநாம் தேஜ: அஸ்மி = ஒளியுடையோரின் ஒளியாக இருக்கிறேன்
    எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.
    ________________________________________
    बलं बलवतां चाहं कामरागविवर्जितम्।
    धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ॥११॥
    ப³லம் ப³லவதாம் சாஹம் காமராக³விவர்ஜிதம்|
    த⁴ர்மாவிருத்³தோ⁴ பூ⁴தேஷு காமோऽஸ்மி ப⁴ரதர்ஷப⁴ ||7-11||
    ப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே
    ப³லவதாம் = வல்லோரிடத்தே
    காமராக³விவர்ஜிதம் ப³லம் அஹம் = விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான்
    ச த⁴ர்ம அவிருத்³த⁴: = மேலும் அறத்திற்கு மாறுபடாத
    காம: அஸ்மி = விருப்பமாவேன்
    வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.
    ________________________________________
    ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये।
    मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि॥१२॥
    யே சைவ ஸாத்த்விகா பா⁴வா ராஜஸாஸ்தாமஸாஸ்²ச யே|
    மத்த ஏவேதி தாந்வித்³தி⁴ ந த்வஹம் தேஷு தே மயி ||7-12||
    ச ஏவ = மேலும் கூட
    யே பா⁴வா: = எந்த உணர்வுகள்
    ஸாத்த்விகா: ராஜஸா: தாமஸா: = சத்வ ரஜஸ் தமோ குணங்களில் தோன்றியவையோ
    தாந் மத்த: ஏவ = என்னிடத்தே பிறந்தன
    இதி வித்³தி⁴ = என்று அறிந்து கொள்
    து தேஷு மயி = ஆனால் அவை என்னுள் இருக்கின்றன
    அஹம் ந = நான் அவற்றுள் இல்லை
    சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.
    ________________________________________
    त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत्।
    मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्॥१३॥
    த்ரிபி⁴ர்கு³ணமயைர்பா⁴வைரேபி⁴: ஸர்வமித³ம் ஜக³த்|
    மோஹிதம் நாபி⁴ஜாநாதி மாமேப்⁴ய: பரமவ்யயம் ||7-13||
    ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணமயை: பா⁴வை: = இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால்
    இத³ம் ஸர்வம் ஜக³த் மோஹிதம் = இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய்
    ஏப்⁴ய: பரம் = இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட
    மாம் அபி⁴ஜாநாதி = என்னை உணராதிருக்கிறது
    இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.
    ________________________________________
    Continued
Working...
X