Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஏழாவது அத்தியாயம் 7[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஏழாவது அத்தியாயம் 7[3]

    ஞான விஞ்ஞான யோகம் continued

    अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
    परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्॥२४॥
    அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு³த்³த⁴ய:|
    பரம் பா⁴வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ||7-24||
    அபு³த்³த⁴ய: மம அநுத்தமம் = அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்
    அவ்யயம் பரம் பா⁴வம் = அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை
    அஜாநந்த: = அறிந்து கொள்ளாமல்
    அவ்யக்தம் மாம் = புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை
    வ்யக்திம் ஆபந்நம் = கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக)
    மந்யந்தே = கருதுகின்றனர்
    மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.
    ________________________________________
    नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
    मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्॥२५॥
    நாஹம் ப்ரகாஸ²: ஸர்வஸ்ய யோக³மாயாஸமாவ்ருத:|
    மூடோ⁴ऽயம் நாபி⁴ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ||7-25||
    அஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ²: = எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை
    யோக³மாயா ந ஸமாவ்ருத: = யோக மாயை சூழ்வதில்லை
    அஜம் அவ்யயம் மாம் = பிறப்பும், கேடுமற்ற என்னை
    அயம் மூட⁴ லோக: = இந்த மூடவுலகம்
    ந அபி⁴ஜாநாதி = அறியவில்லை
    எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.
    ________________________________________
    वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन।
    भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन॥२६॥
    வேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|
    ப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||
    அர்ஜுந! = அர்ஜுனா
    ஸமதீதாநி வர்தமாநாநி ப⁴விஷ்யாணி ச = சென்ற, நிகழ்வன, வருவன
    பூ⁴தாநி = ஆகிய உயிர்களையெல்லாம்
    அஹம் வேத³ = நானறிவேன்
    து கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை
    சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.
    ________________________________________
    इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत।
    सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप॥२७॥
    இச்சா²த்³வேஷஸமுத்தே²ந த்³வந்த்³வமோஹேந பா⁴ரத|
    ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் ஸர்கே³ யாந்தி பரந்தப ||7-27||
    பரந்தப பா⁴ரத = பகைவரைச் சுடுவோய்! பாரதா!
    ஸர்கே³ இச்சா² த்³வேஷ ஸமுத்தே²ந = உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த
    த்³வந்த்³வ மோஹேந = இருமைகளின் மயக்கத்தால்
    ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் யாந்தி = எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன
    விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.
    ________________________________________
    येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम्।
    ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः॥२८॥
    யேஷாம் த்வந்தக³தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்|
    தே த்³வந்த்³வமோஹநிர்முக்தா ப⁴ஜந்தே மாம் த்³ருட⁴வ்ரதா: ||7-28||
    து யேஷாம் ஜநாநாம் = எந்த ஜனங்கள்
    பாபம் அந்தக³தம் = பாவந் தீர்ந்து
    புண்யகர்மணாம் = புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ
    தே த்³வந்த்³வ மோஹ நிர்முக்தா: = அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து
    த்³ருட⁴வ்ரதா: மாம் ப⁴ஜந்தே = திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்
    எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.
    ________________________________________
    जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये।
    ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम्॥२९॥
    ஜராமரணமோக்ஷாய மாமாஸ்²ரித்ய யதந்தி யே|
    தே ப்³ரஹ்ம தத்³விது³: க்ருத்ஸ்நமத்⁴யாத்மம் கர்ம சாகி²லம் ||7-29||
    யே மாம் ஆஸ்²ரித்ய = என்னை வழிபட்டு
    ஜரா மரண மோக்ஷாய யதந்தி = மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர்
    தே தத் ப்³ரஹ்ம = அவர்கள் ‘அது’ என்ற பிரம்மத்தையும்
    க்ருத்ஸ்நம் அத்⁴யாத்மம் = ஆத்மஞான முழுதையும்
    அகி²லம் கர்ம ச விது³: = செய்கையனைத்தையும் உணர்வார்
    மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.
    ________________________________________
    साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः।
    प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः॥३०॥
    ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³:|
    ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ: ||7-30||
    ஸாதி⁴ பூ⁴தாதி⁴தை³வம் ஸாதி⁴யஜ்ஞம் ச = பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக
    யே மாம் = யாவர் என்னை
    ப்ரயாணகாலே அபி விது³: = இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ
    யுக்த சேதஸ: = யோகத்திற் பொருந்திய சித்தமுடைய
    தே மாம் ச விது³: = அவர்கள் என்னையே அறிகிறார்கள்
    பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.
    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे ज्ञानविज्ञानयोगो नाम सप्तमोऽध्याय: || 7 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘ஞான விஞ்ஞான யோகம்’ எனப் பெயர் படைத்த
    ஏழாம் அத்தியாயம் நிறைவுற்றது.

    Source:Sangatham.com
Working...
X