Announcement

Collapse
No announcement yet.

குபேரன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குபேரன் !

    குபேரன் !
    1,00,00, 000,000,00,00,000 இந்த எண்ணுக்கு என்ன பெயர் தெரியுமா?
    தமிழில் சொல்ல வேண்டுமானால் ' சதாமரை ' , வட மொழியில் ' பத்மம் '. அளவிட முடியாத பேரெண்களாக மூன்று எண்களைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர். ' தாமரை, வெள்ளம், ஆம்பல் ' எனவரும் மாபெரும் தானையர் என்பது தொல்காப்பியம். குபேரனிடமுள்ள செல்வத்தை ' தாமரை ' மூலம் அளக்க முடியும். இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான செல்வங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறான் குபேரன். அவனுக்கு அவற்றை வழங்கியவர் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமான்.
    குபேரனின் பயோடேட்டா :
    குபேரன் திசை -- வடக்கு. ( வடக்கு திசையில்தான் குபேர மலை இருக்கிறது. இமயமலையில் ஒரு பகுதியில் இருக்கும் குபேர பட்டணத்தின் பெயர் அழகாபுரி ).
    மனைவி - சித்ரரேகை.
    வாகனம் - குதிரை, கிளி, நரன்.
    ஆயுதம் - வாள் ( கட்கம் ).
    விமானம் - புஷ்பக விமானம்.
    புதல்வன் - நளகூபன், மணிக்ரீவன்.
    ஒற்றைக்கண் கொண்டவன். வேதங்களால் போற்றப்பட்டவன். பிரம்மதேவனின் நிழலுருவில் இருந்து அவதரித்தவர்கள், தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள் கின்னர்கள், இவர்கள் மனித உடலும், குதிரை முகமும் உடையவர்கள்.
    -- புலவர். வெ.மகாதேவன்.
    -- தினமலர். பக்திமலர். அக்டோபர் 31, 2013.
Working...
X