மதுரை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாடே கோலாகலமாக கொண்டிடாடி வருகிறது. வித்தியாசமான விநாயகர் சிலைகள் தெருக்களிலும், மக்கள் இதயத்திலும் அமர்க்களமாக இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாடக்குளம் சபரிநகரில் அமைந்துள்ள பதஞ்சலி யோக கேந்திர குருவான டி.எஸ்.கிருஷ்ணன் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழைமரம் விநாயகர் உருவில் குலை தள்ளியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக வாழை தலைப்பகுதியில்தான் குலைதள்ளும் இடையில் குலை தள்ளுவது என்பது ஆச்சர்யமான விஷயமாகும் அதுவும் தும்பிக்கை தாங்கிய விநாயகர் உருவம் போல குலைதள்ளியதை பார்த்து வீட்டாரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் நம் வாழை மரத்தில் முந்தி வந்துள்ளார் என்று எடுத்துக்கொண்ட கிருஷ்ணன் குடும்பத்தார் இவருக்கே கொழுக்கட்டை,மோதகம் போன்றவைகளை படைத்து சதுர்த்தி கொண்டாட உள்ளனர்.


தினமலர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends