ஆலய வரலாறு : தென்னாப்பிரிக்காவின் ஸ்டான்கர் குவா-ஜூலு நடல் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம். இவ்வாலயம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் 4வது அவதாரமான நரசிம்ம மூர்த்தி, இவ்வாலத்தில் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு சாந்தம், அமைதி மற்றும் மனத்தூய்மையை வழங்குவதாக திகழ்கிறார். சாந்த ஸ்வரூபமாக அமர்ந்த கோலத்தில் நரசிம்மரும், அவருக்கு அருகே வணங்கியபடி நின்ற கோலத்தில் பக்த பிரகலாதனும் காட்சி தருகின்றனர். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராதா-கிருஷ்ண கோவிந்த தேவ்ஜியின் சிலைகள் இவ்வாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் மகாஅவதார் பாபாஜியின் போதனைகளை பரப்பும் வகையில் ஆத்ம கிரிய வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆலய முகவரி : Shanta-NarashimaTemple,
13 Centenary Road
Stanger Kwa-Zulu Natal,
4450 ,South Africa


தொலைப்பேசி : +27 7417 33395 / +27 3255 11777


இமெயில் : reddyj@mweb.co.za