ஒரு நாள் ஒன்பது பெருமாள் தரிசன சுற்றுலா: இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை, அதைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள், திருமழிசை ஜெகநாத பெருமாள், பொன்விளைந்த களத்தூர் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ பெருமந்தூர் ஆதிகேசவ பெருமாள், பழைய சீவரம் லட்சுமி நரசிம்மசுவாமி, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், பொன்பதர்கோட்டம் சதுர்புஜ ராமர், மாமல்லபுரம் ஸ்தல சையன பெருமாள், திருவிடந்தை ஆதி வராக பெருமாள், நித்ய கல்யாண பெருமாள் ஆகிய 9 பெருமாள் கோயில்களையும் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு செய்வதே சிறப்பம்சமாகும். நபருக்கு கட்டணமாக ரூ.520 வசூலிக்கப்படும். பேருந்து பிரதி வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8 மணிக்கு வந்தடையும்.

ஒரு நாள் காஞ்சிபுரம் திவ்யதேசம் சுற்றுலா: இந்தத் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை தரிசிக்க அழைத்து செல்லப்படுவர். ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆதிவராக பெருமாள், உலகளந்த பெருமாள், நிலா துண்ட பெருமாள், பவளவண்ணர் பெருமாள், வைகுண்ட பெருமாள், திருவேக்கை யதோத்தகாரி, அஸ்தபுஜம் பெருமாள், திருத்தங்க விளக்கு பெருமாள், திருவேலுக்கை அழகிய சிங்கர், திருபாடகம் பாண்டவ தூதர், திருப்புக்குழி விஜயராகவ பெருமாள் ஆகிய திருக்கோயில்களை தரிசிக்கலாம்.
ஞாயிறு காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அன்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். பேருந்துக் கட்டணமாக குளிர்சாதன வசதியுடன் நபருக்கு ரூ.890-ம், குளிர்சாதன வசதியில்லாமல் நபருக்கு ரூ.715 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலாளர்(சுற்றுலா) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2 வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியிலோ அல்லது 044-25384444,25383333,25389857 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


THE END

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends