நேபாளத்தில் 1500 வருட பழமையான சிவாலயம்
கோயில் பெயர் : அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில்
மூலவர் : பசுபதிநாதர்
மாநிலம் : நேபாளம்
மாவட்டம் : காட்மாண்டு
ஊர் : சீனோலி
தல வரலாறு : தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. பசுபதிநாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைத்துள்ளனர். பசுபதிநாதர் கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியை தரிசனம் செய்யலாம். இறங்கி நீராடுவதற்காக படிக்கட்டுகள் வசதியாக அமைந்துள்ளன. மற்றொரு புறம் படிக்கட்டின் மேலேயே, இறந்தவர்களின் உடலை தகனம் செய்து ஓடும் ஆற்று நீரில் அஸ்தியை தள்ளிவிடுகின்றனர். காசியில் கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் நடைபெறும் இறுதி யாத்திரை காரியங்கள் போன்று இங்கும் நடக்கிறது.
முக்கிய திருவிழா : மகா சிவராத்திரி
தல சிறப்பு : நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில்,
சீனோலி, காட்மாண்டு, நேபாளம்
பொது தகவல் : கயிலைமலை செல்ல இயலாதவர் பசுபதிநாதரை தரிசனம் செய்தால், கயிலைநாதனை தரிசனம் செய்த பலன் உண்டாகும். பசுபதிநாதர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது புத்தநீலகண்ட ஆலயம். இங்கு திருமால் பாம்பு படுக்கையில் சங்கு சக்ரதாரியாக, சயன நிலையில் புத்தநீலகண்ட்' என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். படுக்கையின் கீழே ஒரு தடாகம் நீர்வற்றாத நிலையில் உள்ளது. பூஜை செய்து தர பண்டாக்கள் உள்ளனர். ஒரு விவசாயியின் கனவில் இந்த தெய்வம் தோன்றி, தான் இன்ன இடத்தில், பூமியின் அடியில் உள்ளதாகவும், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொன்னதின் பேரில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, பூமியை தோண்டி சிலையை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கருங்கல்லால் ஆன புத்தநீலகண்ட் சுவாமி ஆறடிக்கு மேல் நீளமுடையதாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.
தல பெருமை : பாசுமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். ஒரே சமயத்தில் நால்வரும் பக்தர்களுக்கான பூஜைகளை தனித்தனியாக செய்து தருகின்றனர். ஆலயத்தை வலம் வரும் வழியில் பக்தர்கள் ருத்ர ஜப பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது.கயிலை மலையில் உறையும் சிவபெருமான் ஐப்பசி மாதத்தில், பனிமலையில் இருந்து வந்து மகாசிவராத்திரி காலம் வரை பசுபதிநாதர் கருவறையில் தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம். திபெத் நாட்டின் வழியாக சீனாவின் எல்லையில் அமைந்துள்ள கயிலைமலைக்கு செல்வதற்கு, காட்மாண்டு நுழைவாயிலாக உள்ளது.
இருப்பிடம் : காட்மாண்டு செல்ல, பெங்களூர் மற்றும் டில்லியிலிருந்து விமான சேவை உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோரக்பூர் வரை ரயிலில் செல்லலாம். அங்கிருந்து சீனோலி என்னும் நேபாள எல்லையில் அமைந்துள்ள ஊரை அடைய வேண்டும். சீனோலியிலிருந்து காட்மாண்டுக்கு பஸ்சில் செல்லலாம். மழைக்காலங்களில் சாலை உடைப்பு ஏற்பட்டு, பயணம் தாமதமாகும்.
அருகிலுள்ள ரயில் நிலையம்: கோரக்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் : காட்மாண்டு
தங்கும் வசதி : கோரக்பூர் விடுதிகளில் தங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
பில்ட் கிஸ்டரி : 1900 ஆண்டுகள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends