வர்ணாச்ரம தர்மகாண்டம் வைத்யநாத தீக்ஷிதீய - ஸ்ம்ருதிமுக்தாபலத்தில் ச்ராத்த காண்டம் - முதல் பாகம்.
குறிப்பு: மிக மிக அரிதான இந்த க்ரந்தம் அடியேனுக்குக் கிடைத்துள்ளது! பெற்றோரின்பால் அதிக பற்றுதல் உள்ள ஆன்மீகவாதிகளுக்கான பொக்கிஷம். விஷயத்தை அறிந்து வைத்திருந்தால் முடிந்ததைக் கடைப்பிடிக்கலாம். குறைந்தபக்ஷம் செய்யக் கூடாதவற்றையாவது தவிர்க்கலாம். என்னைப் பெற்ற தெய்வங்களான, தெய்வமாகிவிட்ட ஸ்ரீ.உப.வே. தீவளூர் வெங்கட்ராகவ ஐயங்கார், திருமதி. சீதாலக்ஷ்மி அம்மங்காருக்கு இந்த என் சிறிய தர்மகாரிய புண்ணியங்களைச் சமர்ப்பிக்கிறேன். அதிகம் முன்னுரை எதுவும் வழங்காது நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இந்த க்ரந்தம் தமிழ் மற்றும் க்ரந்தத்தில் மொத்தம் 140 தலைப்புகளின் கீழ் 978 பக்கங்களைக் கொண்டது. யுனிகோட் தமிழ் பான்டில் உருவாக்கப்பட்டுவருகிறது.
மற்றும் தர்ம சாஸ்த்ர சுருக்கம் மிக மிக முக்கியமான பகுதிகளைக் கொண்டது எளிமையானது, இங்கு வெளியிடப்பட்டுள்ளது இங்கேயே பார்வையிடலாம். தேவையானால் சேமித்துக்கொள்ளலாம்.