-- சம்சாரம் அது மின்சாரம். இருக்கும்போது மறந்துடுவோம்; இல்லாதபோது புலம்புவோம்!
-- முன்னாடியெல்லாம் மின் தடைனு மரியாதையா சொன்னாங்க. இப்ப மின் 'வெட்டு' அதிகாரமா சொல்றாங்க. # கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க!
-- கச்சத் தீவு மீட்டால் பலன் இல்லை: ஞானதேசிகன்! # காங்கிரஸால கூடத்தான் பலன் இல்லை!
-- மணிரத்னம் ஒரு தீர்க்கதரிசி. இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் அப்பவே இருட்டுலேயே படம் எடுத்துப் பழகிட்டாரு!
-- எத்தனை முறை ஆட்சியை இழந்து திரும்பப் பதவிக்கு வந்தாலும், அரசியல்வாதிகள் பாடம் கற்பதில்லை. பாடம் புகட்டுவது தமிழக மக்களுக்கே!
-- தன் ஆசிரியரின் மேல் என் அப்பாவுக்கு இருக்கும் மரியாதை... என் ஆசிரியரின் மேல் எனக்கு இல்லை # உண்மை.
-- ஆறு வயதுக் குழந்தை மடிக்கணினியில் விளையாடுவதைப் பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கும் பெற்றோர்களே.. அது சாபம் எனப் பின்னாளில்
தெரியும்!
-- வலை பாயுதே ! facebook.
--ஆனந்த விகடன்.22.2.2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends