Announcement

Collapse
No announcement yet.

ஐகியூ டெஸ்ட்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஐகியூ டெஸ்ட்!

    ஐகியூ டெஸ்ட்டில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய இங்கிலாந்து சிறுமி.
    லண்டன் : இங்கிலாந்தைச் சேர்ந்த மென்சா என்ற நிறுவனம், உலகின் மிகச்சிறந்த அறிவுக்கூர்மை கொண்ட நபர்களை உறுப்பினர்களாக கொண்டது. இந்த அமைப்பு சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த அறிவுக்கூர்மை தேர்வில், நார்த் ஹாம்டன் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பர்னெல்லுக்கு அறிவுக்கூர்மையின் அளவு 162 புள்ளிகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    6ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு ஐகியூ அளவு 162 புள்ளி என்பது விஞ்ஞானிகள் ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரது ஐகியூ அளவை காட்டிலும் அதிகமாகும். இதே மென்சா அமைப்பில் பர்னெலின் தந்தையும் உறுப்பினராக இருக்கிறார். அவரது ஐகியூ அளவு 142 புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறுமி பர்னெலிடம் கேட்டபோது, " அறிவுக்கூர்மையில் எனது தந்தையை முந்த வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். ஆனால், பரிசோதனையில் எனக்கு இந்த அளவுக்கு அறிவுக்கூர்மை இருப்பதாக கூறும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இது நல்லதா கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை" என்றார்.
    --- தினமலர் . 6. 8. 2013.
Working...
X