Announcement

Collapse
No announcement yet.

கீதை – பத்தாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பத்தாவது அத்தியாயம்

    கீதை – பத்தாவது அத்தியாயம்
    விபூதி யோகம்
    பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன்.
    [img]http://www.sangatham.com/wp-content/uploads/gita-10.jpg[/img]
    அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன், ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை, சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன்.
    பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் ‘அ’ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது.
    श्रीभगवानुवाच
    भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
    यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥१०- १॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஸ்²ருணு மே பரமம் வச: |
    யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா || 10- 1||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = பகவான் சொல்லுகிறான்
    மஹாபா³ஹோ = பெருந்தோளுடையாய்
    ப்ரீயமாணாய = மிகவும் அன்பு கொண்டவனான
    தே அஹம் = உனக்கு நான்
    ஹிதகாம்யயா = உன் நலம் கருதி
    யத் பூ⁴ய ஏவ வக்ஷ்யாமி = எதை மீண்டும் கூறுவேனோ
    மே = என்னுடைய
    பரமம் வச: = மிகவும் உயரிய அந்த வாசகத்தை
    ஸ்²ருணு = கேள்
    பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.


    न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
    अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥१०- २॥
    ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
    அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||
    ஸுரக³ணா: மே ப்ரப⁴வம் ந விது³: = வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்
    மஹர்ஷய: ந = பெருந்தகை முனிவருமுணரார்
    ஹி அஹம் ஸர்வஸ²: = ஏனெனில் நான் எல்லாவிதங்களிலும்
    தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஆதி³ = வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே
    வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.


    यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
    असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥१०- ३॥
    யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
    அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||
    அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
    ய: வேத்தி = எவர் அறிகிறாரோ
    மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடைய அவர்
    ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்
    பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.


    बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
    सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥१०- ४॥
    பு³த்³தி⁴ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: |
    ஸுக²ம் து³:க²ம் ப⁴வோऽபா⁴வோ ப⁴யம் சாப⁴யமேவ ச || 10- 4||
    பு³த்³தி⁴: ஜ்ஞாநம் அஸம்மோஹ: = மதியும், ஞானமும், மயக்கமின்மையும்
    க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: = பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும்
    ஸுக²ம் து³:க²ம் ப⁴வ: அபா⁴வ: = இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும்
    ப⁴யம் ச அப⁴யம் ஏவ ச = அச்சமும், அஞ்சாமையும்
    மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,


    अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
    भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥१०- ५॥
    அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா³நம் யஸோ²ऽயஸ²: |
    ப⁴வந்தி பா⁴வா பூ⁴தாநாம் மத்த ஏவ ப்ருத²க்³விதா⁴: || 10- 5||
    அஹிம்ஸா ஸமதா துஷ்டி = துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும்
    தபோ தா³நம் யஸ²: அயஸ²: = தவமும், ஈகையும், புகழும், இகழும்
    பூ⁴தாநாம் ப்ருத²க்³விதா⁴: பா⁴வா = உயிரினங்களுடைய வெவ்வேறான மனப்பாங்குகள் இயல்புகள்
    மத்த: ஏவ ப⁴வந்தி = என்னிடமிருந்தே உண்டாகின்றன
    துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.


    महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
    मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥
    மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
    மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||
    லோகே இமா: ப்ரஜா: = உலகில் இந்த பிரஜைகள் அனைவரும்
    யேஷாம் ஜாதா = எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த
    ஸப்த மஹர்ஷய: பூர்வே = சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான
    சத்வார: ததா² = சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே
    மநவ: மாநஸா: மத்³பா⁴வா ஜாதா: = மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்
    முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.


    एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
    सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥१०- ७॥
    ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |
    ஸோऽவிகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 10- 7||
    ய: மம = எவன் என்னுடைய
    ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச = இத்தகைய எனது பெருமையும் யோகந்தனையும்
    தத்த்வத: வேத்தி = உள்ளவாறு உணர்வோன்
    ஸ: அவிகம்பேந யோகே³ந யுஜ்யதே = அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான்
    அத்ர ஸம்ஸ²ய: ந = இவ்விஷயத்தில் ஐயமில்லை
    இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.


    अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
    इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥
    அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
    இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||
    அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வ: = நான் அனைத்திற்கும் தொடக்கம்
    மத்த: ஸர்வம் ப்ரவர்ததே = என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது
    இதி மத்வா = என்று புரிந்து கொண்டு
    பா⁴வஸமந்விதா: பு³தா⁴:= நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்
    மாம் ப⁴ஜந்தே = என்னை தொழுவார்
    நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.


    मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
    कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥१०- ९॥
    மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் |
    கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச || 10- 9||
    மத்சித்தா = அகத்தினை என்பால் வைத்து
    மத்³க³தப்ராணா = உயிரை என்னுள்ளே புகுத்தி
    பரஸ்பரம் = தங்களுக்குள்ளே
    போ³த⁴யந்த: ச = விளக்கிக் கொண்டும்
    கத²யந்த: ச = (என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும்
    நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி = எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள்
    அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.


    तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
    ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥१०- १०॥
    தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
    த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி தே || 10- 10||
    ஸததயுக்தாநாம் = எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்
    ப்ரீதிபூர்வகம் ப⁴ஜதாம் = அன்புடன் என்னை வழிபடும்
    தேஷாம் = அவர்களுக்கு
    யேந = எந்த உபாயத்தின் மூலம்
    மாம் உபயாந்தி = என்னை அடைவார்களோ
    தம் பு³த்³தி⁴யோக³ம் த³தா³மி = அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்
    எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.


    तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
    नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥१०- ११॥
    தேஷாமேவாநுகம்பார்த²மஹமஜ்ஞாநஜம் தம: |
    நாஸ²யாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேந பா⁴ஸ்வதா || 10- 11||
    தேஷாம் அநுகம்பார்த²ம் = அவர்களுக்கு இரங்கி நான்
    ஆத்மபா⁴வஸ்த²: = அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று
    அஹம் ஏவ = நானே
    அஜ்ஞாநஜம் தம: = அறியாமையால் உண்டான இருளை
    பா⁴ஸ்வதா = ஒளிமயமான
    ஜ்ஞாநதீ³பேந = ஞான வடிவான விளக்கினால்
    நாஸ²யாமி = அழிக்கிறேன்
    அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.


    अर्जुन उवाच
    परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
    पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥
    அர்ஜுந உவாச
    பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |
    புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ப⁴வாந் = நீங்கள்
    பரம் ப்³ரஹ்ம பரம்தா⁴ம = பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு)
    பரமம் பவித்ரம் = தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை
    ஸா²ஸ்²வதம் தி³வ்யம் புருஷம் = என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும்
    ஆதி³தே³வம் அஜம் விபு⁴ம் = ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்
    அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,
Working...
X