Announcement

Collapse
No announcement yet.

கீதை – பத்தாவது அத்தியாயம் 10[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பத்தாவது அத்தியாயம் 10[3]

    கீதை – பத்தாவது அத்தியாயம்
    10[3] Continued
    महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
    यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥१०- २५॥
    மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
    யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: || 10- 25||
    மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகு
    கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாக இருக்கிறேன்
    யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்
    ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயம்.
    மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.


    अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
    गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥१०- २६॥
    அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
    க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||
    ஸர்வவ்ருக்ஷாணாம் அஸ்²வத்த²: = மரங்களனைத்திலும் நான் அரசமரம்
    ச தே³வர்ஷீணாம் நாரத³: = தேவரிஷிகளில் நான் நாரதன்
    க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்
    ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: =சித்தர்களில் கபில முனி.
    மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.


    उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
    ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥१०- २७॥
    உச்சை:ஸ்²ரவஸமஸ்²வாநாம் வித்³தி⁴ மாமம்ருதோத்³ப⁴வம் |
    ஐராவதம் க³ஜேந்த்³ராணாம் நராணாம் ச நராதி⁴பம் || 10- 27||
    அஸ்²வாநாம் அம்ருத உத்³ப⁴வம் = குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த
    உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம் என்றுணர்
    க³ஜேந்த்³ராணாம் ஐராவதம் ச = யானைகளில் என்னை ஐராவதமென்றும்
    நராணாம் நராதி⁴பம் மாம் வித்³தி⁴ = மனிதரில் அரசனென்றும் என்னை தெரிந்து கொள்
    குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி. 27


    आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
    प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥१०- २८॥
    ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
    ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||
    ஆயுதா⁴நாம் அஹம் வஜ்ரம் = ஆயுதங்களில் நான் வஜ்ரம்
    தே⁴நூநாம் காமது⁴க் அஸ்மி = பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன்
    ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிப்போரில் நான் மன்மதன்
    ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும் பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன்
    ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.


    अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
    पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥
    அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
    பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||
    அஹம் நாகா³நாம் அநந்த: = நான் நாகர்களினிடையே அநந்தன்
    யாத³ஸாம் வருண: ச அஸ்மி = நீர் வாழ்வோரில் வருணனாக இருக்கிறேன்
    பித்ரூணாம் அர்யமா ச அஸ்மி = பிதிர்க்களில் நான் அரியமான்
    ஸம்யமதா: அஹம் யம: = அடக்கி ஆள்பவர்களில் நான் யமன்.
    நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.


    प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
    मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥
    ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
    ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||
    தை³த்யாநாம் ச ப்ரஹ்லாத³: அஸ்மி = அசுரரில் பிரகலாதனாக இருக்கிறேன்
    கலயதாம் அஹம் கால: = இயங்குனவற்றில் நான் காலம்
    அஹம் ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர: = நான் விலங்குகளில் சிங்கம்
    பக்ஷிணாம் வைநதேய: ச = பறவைகளில் கருடன்
    அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.


    पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
    झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥
    பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
    ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||
    பவதாம் பவந: அஸ்மி = தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்
    ஸ²ஸ்த்ரப்⁴ருதாம் அஹம் ராம: = ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன்
    ஜ²ஷாணாம் மகர: ச அஸ்மி = மீன்களில் நான் சுறா
    ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி = ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன்
    தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.


    सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
    अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥१०- ३२॥
    ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
    அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||
    ஸர்கா³ணாம் ஆதி³ அந்த: மத்⁴யம் ச அஹம் ஏவ = படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானேதான்
    அர்ஜுந = அர்ஜுனா!
    வித்³யாநாம் அத்⁴யாத்மவித்³யா = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை
    ப்ரவத³தாம் அஹம் வாத³: = பேசுவோரிடையே நான் பேச்சு
    படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.


    अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
    अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥१०- ३३॥
    அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
    அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||
    அக்ஷராணாம் அகார: அஸ்மி = எழுத்துகளில் நான் அகரம்
    ஸாமாஸிகஸ்ய த்³வந்த்³வ: ச = புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு
    அக்ஷய: கால: அஹம் ஏவ = அழிவற்ற காலம் நானே
    விஸ்²வதோமுக²: தா⁴தா அஹம் = எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட் ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நான்
    எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.


    मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
    कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥१०- ३४॥
    ம்ருத்யு: ஸர்வஹரஸ்²சாஹமுத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |
    கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா || 10- 34||
    அஹம் ஸர்வஹர: ம்ருத்யு: ச = எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான்
    ப⁴விஷ்யதாம் உத்³ப⁴வ: ச = எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான்
    நாரீணாம் = பெண்களிடத்து நான்
    கீர்தி: ஸ்ரீ: வாக் ஸ்ம்ருதி: = கீர்த்தி, வாக்கு, நினைவு
    மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா = மேதை, ஸ்திதி, பொறுமை
    எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை


    बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
    मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥
    ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
    மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
    ததா² ஸாம்நாம் ப்³ருஹத்ஸாம: = சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்
    ச²ந்த³ஸாம் கா³யத்ரீ அஹம் = சந்தஸ்களில் நான் காயத்ரி
    மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
    ருதூநாம் அஹம் குஸுமாகர: = பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்
    அங்ஙனமே, சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.


    द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
    जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥
    த்³யூதம் ச²லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |
    ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 10- 36||
    ச²லயதாம் த்³யூதம் அஸ்மி = வஞ்சகரின் சூது நான்
    தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம = ஒளியுடையோரின் ஒளி நான்
    ஜய: அஸ்மி = நான் வெற்றி
    வ்யவஸாய: = நான் நிச்சயம்
    ஸத்த்வவதாம் ஸத்த்வம் அஹம் அஸ்மி = உண்மையுடையோரின் உண்மை நான் இருக்கிறேன்
    வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.


    वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजयः ।
    मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥१०- ३७॥
    வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
    முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||
    வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வ: அஸ்மி = விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்
    பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: = பாண்டவர்களில் தனஞ்ஜயன்
    அபி முநீநாம் அஹம் வ்யாஸ: = முனிகளில் வியாசன்
    கவீநாம் உஸ²நா கவி: = கவிகளில் சுக்கிர கவி.
    விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.


    दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
    मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥१०- ३८॥
    த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
    மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||
    த³மயதாம் த³ண்ட³: அஸ்மி = ஆள்வோரிடத்தே கோல் (அடக்கும் சக்தி) நான்
    ஜிகீ³ஷதாம் நீதி: அஸ்மி = வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி (நியாய உணர்வு) நான்
    கு³ஹ்யாநாம் மௌநம் ச = ரகசியங்களில் நான் மௌனம்!
    ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநம் அஹம் ஏவ அஸ்மி = ஞானமுடையோரிடத்தே ஞானம் நானே
    ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.


    यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
    न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥१०- ३९॥
    யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
    ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||
    ச அர்ஜுந = மேலும் அர்ஜுனா!
    ஸர்வபூ⁴தாநாம் = எல்லா உயிர்களிலும்
    யத் பீ³ஜம் தத் அபி அஹம் = விதை எதுவோ அது நானே
    மயா விநா = நான் இன்றி
    யத் ஸ்யாத் = எது இருக்கக் கூடுமோ
    தத் சராசரம் பூ⁴தம் ந அஸ்தி = அத்தகைய அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை
    எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.


    नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
    एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥१०- ४०॥
    நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
    ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||
    பரந்தப = எதிரிகளை சுடுபவனே!
    மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் = என் திவ்ய மகிமைகளுக்கு
    ந அந்த: அஸ்தி = முடிவில்லை
    விபூ⁴தே: = பெருமைகளில்
    ஏஷ: விஸ்தர: து = இந்த விரிவும் கூட
    உத்³தே³ஸ²த: மயா ப்ரோக்த: = ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது
    பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.


    यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
    तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ॥१०- ४१॥
    யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
    தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||
    யத் யத் விபூ⁴திமத் = எதெது பெருமையுடையது
    ஸத்த்வம் = உண்மையுடையது
    ஸ்ரீமத் = அழகுடையது
    ஊர்ஜிதம் வா = வலிமையுடையது
    தத் தத் = அது எல்லாம்
    மம தேஜோம்ऽஸ² ஸம்ப⁴வம் ஏவ = எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது
    த்வம் அவக³ச்ச² = நீ புரிந்து கொள்
    எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.


    अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन ।
    विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥१०- ४२॥
    அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
    விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||
    அத²வா = அன்றி
    அர்ஜுன = அர்ஜுனா
    ஏதேந ப³ஹுநா ஜ்ஞாதேந தவ கிம் = இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது?
    அஹம் இத³ம் க்ருத்ஸ்நம் ஜகத் = நான் இந்த உலகனைத்தும்
    ஏகாம்ஸே²ந = எனது சக்தியின் ஓர் அம்சத்தால்
    விஷ்டப்⁴ய ஸ்தி²த: = தாங்கிக் கொண்டு இருக்கிறேன்
    அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे विभूतियोगो नाम दशमोऽध्याय: || 10 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘விபூதி யோகம்’ எனப் பெயர் படைத்த
    பத்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X