திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் பெருமாள்


by தமராக்கியான், 2012


கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்ற எண்ணத்தில் இருந்த என்னை, கடவுளிடம் ஒரு முழுநம்பிக்கை உடையவனாக மாற்றியது இந்த நிகழ்ச்சிதான். இதை ​மெய்யன்பர்கள் அனைவரிடமும் அன்புடன் பகிர்ந்து ​கொள்கிறேன்.
மூடநம்பிக்​கை
அறிவியல் மட்டுமே உண்மை. ஆன்மிகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. பக்தி என்பதெல்லாம் அவரவர் மனப்பக்குவமே. கடவுள் என்பவன் இல்லை, இது ஒரு மூட நம்பிக்கையே என்று நான் நினைத்துக் ​கொண்டிருந்தேன்.
அப்போது ஒருநாள் (15-08-2000) வீட்டில் சும்மா உட்காந்திருந்த ​போது, ​மேற்கண்ட எனது ​சித்தாந்தத்திற்கு அறிவியல் நிரூபணம் ​வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நாம் வணங்கும் இறைவடிவங்கள் அறிவியல் அடிப்படையில் ஆனவையா? என அறிய ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​தோன்றியது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அறிவியல் ஆன்மிகம்
எனது ஆய்வில் நடராசரின் வடிவமானது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது என அறிந்தேன். எனது ஆய்வுகளை
1) சிவனும் ​பெருமாளும் ACயும் DCயும்
2) ஆடல் வல்லானே அறிவியல் இறைவன்
3) விஞ்ஞானத் தொலைக்காட்சியும் ​மெஞ்ஞானத் திருக்கோயிலும்
என்ற தலைப்புகளில் எழுதி ​வெளியிட்டேன்.
இந்த நிலையில், ஆருத்திரா தரிசனம் ​செய்ய ​வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது.
பிறரிடம் ​கேட்டதில், அது இப்போதுதான் முடிந்தது என்று கூறிவிட்டனர். அடுத்த ஆண்டு வரை காத்திருந்தேன்.
ஆலயம் ​சென்ற​போது இன்று காலை முடிந்து விட்டது, நீங்கள் மாலையில் வந்துள்ளீர்களே! என்றார் குருக்கள்.
அடுத்த ஆண்டு ​சென்று போது, நேற்றே முடிந்து விட்டது, நாங்கள் சிதம்பரத்தில் என்று நடைபெறுமோ அன்று நடத்திவிடுவோம், காலண்டரில் உள்ளது ​போல் ​செய்வது இல்லை என்றார் குருக்கள்.
ஆருத்ரா தரிசனம் காண ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தேன்.


நமச்சிவாயமா? நாராணயனனா?


இந்த ஆண்டு எல்லாம் சரியாகக் குறித்து ​வைத்துக் ​கொண்டேன். இன்று காலை எழுந்து ஆருத்திரா தரிசனம் ​செய்யச் ​செல்ல ​வேண்டும். சிவ​பெருமான் என்னை நான்கைந்து ஆண்டுகளாக அலைக்கழித்தனாலோ என்னவோ அல்லது ஏதுகாரணத்தினாலோ அன்று ​நான் சிவாலயம் ​​செல்லவில்லை. வேலங்குடியில் நின்றருளும் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத தேசிகநாராணயப் ​பெருமாள் ​கோயிலுக்குச் ​சென்றேன்.
நாராயணனை வழிபட்டு வலம் வந்து ​கொடிமரத்தின் கீழே வீழ்ந்து வணங்கினேன்.​பெருமாளே! இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது. நானோ உன்னை வழிபடுகிறேன். அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம், எனக்கு அது கிடைக்குமா? ​பெருமாளே அருளுங்கள் ​ என ​வேண்டிக் ​கொண்டேன். ​​தேசிக நாராயணன் நின்ற ​கோலத்தில் அருளுவதால் நான் ​கோயிலில் உட்கார வில்லை. கொடிமரத்தருகில் கும்பிட்டு விழுந்து எழுந்து ​கோயிலுக்கு ​வெளியே ​செல்லச் சில அடிகள் எடுத்து ​வைத்தேன். படிக்கட்டைத் தாண்ட முயன்றேன்.
யார் இந்தக் கிழவி
எதிரே ஒரு பழுத்த பழமாக (K.B.S.​போல) ஒரு மூதாட்டி உள்ளே வந்தார். வருபவர் மூதாட்டி என்பதால் அவரைத் தாண்டிச் ​செல்ல விருப்பமில்லாமல் சற்றே தயங்கி நின்றேன்.
கோயில் உள்ளே வந்த அந்த மூதாட்டி ​நேராக என்னைப் பார்த்து நின்றார். தனது ​சேலை முடிச்சை அவிழ்த்தார். அதிலிருந்து ஒரு ​​பெரிய ​தேங்காய் அளவிற்கு களியை எடுத்து என்னிடம் ​கொடுத்தார்.
என்ன பாட்டி! என்று ​கேட்டேன்.
திருவாதிரைக் களியப்பா! ​​பெரிய ​கோயிலில் ​கொடுத்தார்கள். கிழவிக்கு எதுக்கு இவ்வளவு! நீ சாப்பிடப்பா என்றார்.

என்னை என்னால் நம்ப முடியவில்லை. நான் ​கோரிக்கை ​வைத்து 10வினாடிகள் கூட ஆகியிருக்காது. ​நாராயணன் ​கோயில் வாசல்படியைக் கூட தாண்ட வில்லை. சிவாலயம் ​சென்றாலும் கூட்டத்தில் இது எனக்குத் திருவாதிரைக் களி கிடைத்திருக்குமா? அதுவும் இவ்வளவு?
என் அறிவியல் மூலை ​கேள்வி ​​கேட்டது!
ஏன் பாட்டி, கூட்டமா இருந்திருக்குமே?
ஆமாம்பா, கூட்டம் சரியான கூட்டம், கூட்டத்திற்குப் பயந்து நான் கடைசியில் நின்று ​கொண்டிருந்தேன். அதனால் களி ​கொடுத்தவர்கள் எனக்கு முதலில் ​கொடுத்தார்கள் என்று கூறினார்.
பாட்டி அவ்வளவையும் என்னிடம் ​கொடுத்து விட்டாயே, உனக்கு? என்று ​கேட்டேன்.
நான்தான் வருடாவருடம் வாங்கிச் சாப்பிடுகிறேனே!
இந்த வருடம் முழுவதையும் நீயே சாப்பிடு, அப்போது தான் முழுப்பலனும் உண்டு என்றார்.
திருவாதிரைக் களி வழங்கிய ​தேசிகநாராயணன்
திருவாதிரைக்களியைத் ​தேசிகநாராயணன் ​அவனது கோயிலில் கொடிமரத்து அருகே எனக்கு வழங்கி விட்டான்.
இது என்ன அமிர்தமா?
இல்லை.
அதனினும் ​மேலானது.
நாராயணனின் அருள் கலந்தது.
முழுவதும் உண்டு முடித்து கிணற்றில் ​கைகளைக் கழுவிக் ​கொண்டு திரும்பிப் பார்ததேன். முதாட்டி​யைக் காண வில்லை. ​கோயில் பிரகாரம் சுற்றிப் பார்த்தேன். ​வெளியில் ஓடிச் ​சென்று எங்கு ​தேடியும் கிடைக்க வில்லை. இன்று வரை ​​தேடிக் ​கொண்டே இருக்கிறேன்.
இன்று இந்நிகழ்வுக்குப் ​பொருள் விளங்க வில்லை.
ஆனால் நாத்திகனாக இருந்த நான் ஆத்திகன் ஆகிவிட்டேன். எனது ஆன்மிக ஆய்வுகள் ​தொடர்ந்தன. இன்றும் ​தொடர்கின்றன.
அயன்முதற் தேவர் பன்னெடுங்காலம் நிற்காண்பன் ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்,
கூத்தரும் பாணரும் ​பொருநரும் விறலியும்
ஆற்றி​டைக் காட்சி உறழத் ​தோன்றிப்
​பெற்ற ​பெருவளம் ​பெறாஅர்க் கறிவுறீஇச்
​சென்று பய​னெதிரச் ​சொன்ன பக்கமும்
என்று தொல்காப்பியர் (நூ.பா. 1034) இலக்கணம் கூறுகிறார்.
​​பெற்ற ​பெருவளத்​தைப் ​பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களும் பயனுறச் ​செய்ய ​வேண்டும் என்பது இதன் பொருள்.
இத் தொல்காப்பிய இலக்கலணத்திற்கு ஏற்ப நான் ​பெற்ற ​பேற்​றை மற்​றோரும் ​பெற​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடு இத​னைக் கூறுகி​றேன். மெய்யன்பர்கள் வேலங்குடி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய தேசிகநாராயணனைப் பணிந்து அவளது திருவருளைப் பெற்று உய்யுமாறு ​வேண்டுகிறேன்.
நற்றாள் பணிந்து
அன்பன்
தமராக்கியான்
கோட்டையூர்
http://temples-kalairajan.blogspot.in
- See more at: http://rightmantra.com/?p=13572#sthash.LZUKfIMu.dpuf