Announcement

Collapse
No announcement yet.

திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &

    திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் பெருமாள்


    by – தமராக்கியான், 2012


    கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்ற எண்ணத்தில் இருந்த என்னை, கடவுளிடம் ஒரு முழுநம்பிக்கை உடையவனாக மாற்றியது இந்த நிகழ்ச்சிதான். இதை ​மெய்யன்பர்கள் அனைவரிடமும் அன்புடன் பகிர்ந்து ​கொள்கிறேன்.
    மூடநம்பிக்​கை
    “அறிவியல் மட்டுமே உண்மை. ஆன்மிகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. பக்தி என்பதெல்லாம் அவரவர் மனப்பக்குவமே. கடவுள் என்பவன் இல்லை, இது ஒரு மூட நம்பிக்கையே” என்று நான் நினைத்துக் ​கொண்டிருந்தேன்.
    அப்போது ஒருநாள் (15-08-2000) வீட்டில் சும்மா உட்காந்திருந்த ​போது, ​மேற்கண்ட எனது ​சித்தாந்தத்திற்கு அறிவியல் நிரூபணம் ​வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நாம் வணங்கும் இறைவடிவங்கள் அறிவியல் அடிப்படையில் ஆனவையா? என அறிய ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​தோன்றியது.


    அறிவியல் ஆன்மிகம்
    எனது ஆய்வில் நடராசரின் வடிவமானது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது என அறிந்தேன். எனது ஆய்வுகளை
    1) சிவனும் ​பெருமாளும் ACயும் DCயும்
    2) ஆடல் வல்லானே அறிவியல் இறைவன்
    3) விஞ்ஞானத் தொலைக்காட்சியும் ​மெஞ்ஞானத் திருக்கோயிலும்
    என்ற தலைப்புகளில் எழுதி ​வெளியிட்டேன்.
    இந்த நிலையில், ஆருத்திரா தரிசனம் ​செய்ய ​வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது.
    பிறரிடம் ​கேட்டதில், அது இப்போதுதான் முடிந்தது என்று கூறிவிட்டனர். அடுத்த ஆண்டு வரை காத்திருந்தேன்.
    ஆலயம் ​சென்ற​போது “இன்று காலை முடிந்து விட்டது, நீங்கள் மாலையில் வந்துள்ளீர்களே!” என்றார் குருக்கள்.
    அடுத்த ஆண்டு ​சென்று போது, “நேற்றே முடிந்து விட்டது, நாங்கள் சிதம்பரத்தில் என்று நடைபெறுமோ அன்று நடத்திவிடுவோம், காலண்டரில் உள்ளது ​போல் ​செய்வது இல்லை” என்றார் குருக்கள்.
    ஆருத்ரா தரிசனம் காண ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தேன்.


    நமச்சிவாயமா? நாராணயனனா?


    இந்த ஆண்டு எல்லாம் சரியாகக் குறித்து ​வைத்துக் ​கொண்டேன். இன்று காலை எழுந்து ஆருத்திரா தரிசனம் ​செய்யச் ​செல்ல ​வேண்டும். சிவ​பெருமான் என்னை நான்கைந்து ஆண்டுகளாக அலைக்கழித்தனாலோ என்னவோ அல்லது ஏதுகாரணத்தினாலோ அன்று ​நான் சிவாலயம் ​​செல்லவில்லை. வேலங்குடியில் நின்றருளும் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத தேசிகநாராணயப் ​பெருமாள் ​கோயிலுக்குச் ​சென்றேன்.
    நாராயணனை வழிபட்டு வலம் வந்து ​கொடிமரத்தின் கீழே வீழ்ந்து வணங்கினேன்.​”பெருமாளே! இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது. நானோ உன்னை வழிபடுகிறேன். அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம், எனக்கு அது கிடைக்குமா? ​பெருமாளே அருளுங்கள்” ​ என ​வேண்டிக் ​கொண்டேன். ​​தேசிக நாராயணன் நின்ற ​கோலத்தில் அருளுவதால் நான் ​கோயிலில் உட்கார வில்லை. கொடிமரத்தருகில் கும்பிட்டு விழுந்து எழுந்து ​கோயிலுக்கு ​வெளியே ​செல்லச் சில அடிகள் எடுத்து ​வைத்தேன். படிக்கட்டைத் தாண்ட முயன்றேன்.
    யார் இந்தக் கிழவி
    எதிரே ஒரு பழுத்த பழமாக (K.B.S.​போல) ஒரு மூதாட்டி உள்ளே வந்தார். வருபவர் மூதாட்டி என்பதால் அவரைத் தாண்டிச் ​செல்ல விருப்பமில்லாமல் சற்றே தயங்கி நின்றேன்.
    கோயில் உள்ளே வந்த அந்த மூதாட்டி ​நேராக என்னைப் பார்த்து நின்றார். தனது ​சேலை முடிச்சை அவிழ்த்தார். அதிலிருந்து ஒரு ​​பெரிய ​தேங்காய் அளவிற்கு களியை எடுத்து என்னிடம் ​கொடுத்தார்.
    “என்ன பாட்டி!” என்று ​கேட்டேன்.
    “திருவாதிரைக் களியப்பா! ​​பெரிய ​கோயிலில் ​கொடுத்தார்கள். கிழவிக்கு எதுக்கு இவ்வளவு! நீ சாப்பிடப்பா” என்றார்.

    என்னை என்னால் நம்ப முடியவில்லை. நான் ​கோரிக்கை ​வைத்து 10வினாடிகள் கூட ஆகியிருக்காது. ​நாராயணன் ​கோயில் வாசல்படியைக் கூட தாண்ட வில்லை. சிவாலயம் ​சென்றாலும் கூட்டத்தில் இது எனக்குத் திருவாதிரைக் களி கிடைத்திருக்குமா? அதுவும் இவ்வளவு?
    என் அறிவியல் மூலை ​கேள்வி ​​கேட்டது!
    “ஏன் பாட்டி, கூட்டமா இருந்திருக்குமே?”
    “ஆமாம்பா, கூட்டம் சரியான கூட்டம், கூட்டத்திற்குப் பயந்து நான் கடைசியில் நின்று ​கொண்டிருந்தேன். அதனால் களி ​கொடுத்தவர்கள் எனக்கு முதலில் ​கொடுத்தார்கள்” என்று கூறினார்.
    “பாட்டி அவ்வளவையும் என்னிடம் ​கொடுத்து விட்டாயே, உனக்கு?” என்று ​கேட்டேன்.
    “நான்தான் வருடாவருடம் வாங்கிச் சாப்பிடுகிறேனே!”
    இந்த வருடம் முழுவதையும் நீயே சாப்பிடு, அப்போது தான் முழுப்பலனும் உண்டு என்றார்.
    திருவாதிரைக் களி வழங்கிய ​தேசிகநாராயணன்
    திருவாதிரைக்களியைத் ​தேசிகநாராயணன் ​அவனது கோயிலில் கொடிமரத்து அருகே எனக்கு வழங்கி விட்டான்.
    இது என்ன அமிர்தமா?
    இல்லை.
    அதனினும் ​மேலானது.
    நாராயணனின் அருள் கலந்தது.
    முழுவதும் உண்டு முடித்து கிணற்றில் ​கைகளைக் கழுவிக் ​கொண்டு திரும்பிப் பார்ததேன். முதாட்டி​யைக் காண வில்லை. ​கோயில் பிரகாரம் சுற்றிப் பார்த்தேன். ​வெளியில் ஓடிச் ​சென்று எங்கு ​தேடியும் கிடைக்க வில்லை. இன்று வரை ​​தேடிக் ​கொண்டே இருக்கிறேன்.
    இன்று இந்நிகழ்வுக்குப் ​பொருள் விளங்க வில்லை.
    ஆனால் நாத்திகனாக இருந்த நான் ஆத்திகன் ஆகிவிட்டேன். எனது ஆன்மிக ஆய்வுகள் ​தொடர்ந்தன. இன்றும் ​தொடர்கின்றன.
    அயன்முதற் தேவர் பன்னெடுங்காலம் நிற்காண்பன் ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்,
    கூத்தரும் பாணரும் ​பொருநரும் விறலியும்
    ஆற்றி​டைக் காட்சி உறழத் ​தோன்றிப்
    ​பெற்ற ​பெருவளம் ​பெறாஅர்க் கறிவுறீஇச்
    ​சென்று பய​னெதிரச் ​சொன்ன பக்கமும்
    என்று தொல்காப்பியர் (நூ.பா. 1034) இலக்கணம் கூறுகிறார்.
    ​​பெற்ற ​பெருவளத்​தைப் ​பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களும் பயனுறச் ​செய்ய ​வேண்டும் என்பது இதன் பொருள்.
    இத் தொல்காப்பிய இலக்கலணத்திற்கு ஏற்ப நான் ​பெற்ற ​பேற்​றை மற்​றோரும் ​பெற​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடு இத​னைக் கூறுகி​றேன். மெய்யன்பர்கள் வேலங்குடி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய தேசிகநாராயணனைப் பணிந்து அவளது திருவருளைப் பெற்று உய்யுமாறு ​வேண்டுகிறேன்.
    நற்றாள் பணிந்து
    அன்பன்
    தமராக்கியான்
    கோட்டையூர்
    http://temples-kalairajan.blogspot.in
    - See more at: http://rightmantra.com/?p=13572#sthash.LZUKfIMu.dpuf
Working...
X