Announcement

Collapse
No announcement yet.

ஆட்டோகிராஃப் .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆட்டோகிராஃப் .

    ஆட்டோகிராஃப் .


    "ஆட்டோகிராஃப் . என்பது அடையாளம். திருவள்ளுவரின் கையொப்பத்தை நான் அறியேன். திருக்குறள்தான் அவர் எனக்குத் தந்த ஆட்டோகிராஃப்.
    ஆட்டோகிராஃப் எழுத்தில் எடுக்கப்படுகிற ஒருவரின் புகைப்படம். அதற்கு வேறு வடிவங்களும் உண்டு.


    பிறை என்பது


    நிலாவின் சுருக்கொப்பம்


    விதை என்பது


    மரத்தின் ஆட்டோகிராஃப்.


    மலர் என்பது
    அழகின் ஆட்டோகிராஃப்.


    தாஜ்மகால் என்பது
    ஷாஜகானின் நிமிர்ந்து நிற்கிற
    ஆட்டோகிராஃப்.


    காதலியின் கற்றைக் குழலில் ஒரு முடி எடுத்து பாதுகாப்பான் காதலன். ஒரு காதலியின் மிக நீண்ட ஆட்டோகிராஃப் அதுதான்.
    இந்த உலகம் மறதியில் மட்டுமே அதிகமாக ஆர்வம் காட்டுகிறது. இந்த பூமிக்கு யாருமே முக்கியம் இல்லை என்பதே முக்கியமான உண்மை. சமூகத்துக்கு எவை நன்மையோ, அவை மட்டுமே நிற்கும். நான் நினைவுகூறத்தக்க நன்மைகளை நோக்கி நாம் நடக்க வேண்டுமென விரும்புகிறேன்!"
    -- ஆனந்த விகடன். 31.7.2012.
Working...
X