Announcement

Collapse
No announcement yet.

தசமும், விஜயதசமியும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தசமும், விஜயதசமியும்

    சக்தியே ஜீவன்களின் ஆதாரம். 'சக்தி இல்லாவிட்டால், மும்மூர்த்திகளாலும் கூட எதுவும் செய்ய இயலாது...' என, ஆதிசங்கரரே சவுந்தர்ய லஹரியில் கூறியுள்ளார்.அப்படிப்பட்ட சக்தியின் பெருமையை விளக்குவதே நவராத்திரி.
    இந்நாட்களில், மகா துர்கை, மகாலட்சுமி, மகா சரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரையும் வழிபடுகிறோம். நிறைவு நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அதற்கு காரணம், அன்று தான், அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தாள் அம்பிகை. அதை முன்னிட்டே ஆலயங்களில் விஜயதசமியன்று அம்பு போடுதல் எனும் வைபவம் நடைபெறுகிறது.
    நல்லதையும், கெட்டதையும் பகுத்தறிய வேண்டுமானால், அதற்கு, தெளிந்த அறிவு வேண்டும். அத்தகைய அறிவை அருள்பவள் சரஸ்வதி தேவி. அதை, அறிவுறுத்தும் விதமாகவே, சரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, அட்சராப்பியாசம் நடைபெறுகிறது. விஜயதசமியன்று பள்ளிக் கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கு இதுவே காரணம்.
    பண்டைய மன்னர்கள், விஜயதசமியன்று தங்கள் படைக்கலன்களையும், குதிரை, யானை, வெண் சாமரம், செங்கோல், வெண் கொற்றக் குடை மற்றும் சிம்மாசனம் ஆகியவற்றை பூஜித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தியாக நின்ற அம்பிகை, விஜயதசமியன்று அசுரர்களை அழித்து, சிவத்துடன் ஐக்கியமாகிறாள் என்பது ஐதிகம்.
    ஐம்பொறிகளும், அவைகளால் அனுபவிக்கப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை மற்றும் நாற்றம் எனும் ஐந்தும் என, அந்தப் பத்தும், நம்மை ஆட்டிப் படைக்கின்றன. அவைகளின் வசப்பட்டு நாம் தீய செயல்களில் இறங்கி ஆட்டம் போடும் போது, சக்தி தேவி நம்மைத் தடுத்து, ஆட்கொள்கிறாள். அந்த அம்பிகை, நம் உள்ளங்களிலும் எழுந்தருளி, தீய குணங்களை நீக்கி, நல்லருள் புரிய வேண்டுவோம்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: கீழ்த்தரமானவன், பெரியவர்கள் கூறும் ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால், நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாகவும், தன் நண்பர்களை கூடக் காட்டிக் கொடுப்பவனாகவும் இருப்பான்.
    — என்.ஸ்ரீதரன்.
Working...
X