நலம் தரும் பதிகங்கள்!


மூவர் முதலிகள் அருளிய தேவாரப்பதிகங்கள், அற்புதங்கள் பல புரிந்தவை. இறந்தோரை உயிர்ப்பித்தன. ஆண்பாலைப் பெண்பால் ஆக்கின! தீ, நீர் என்பவற்றின் இயற்கையை எதிர்த்து வெற்றி கண்டன. இப்படிப் பல!


இத்தகைய பதிகங்கள் நமக்கு எத்தனையோ அல்லல்களை நீக்க வழிகாட்டுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம். கூடவே தரப்பட்டுள்ள இழைகளில், மொத்தப் பதிகத்தையும் பெற்றுப் படியுங்கள், அல்லது கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள்.நாளாந்த வாழ்வில் அவற்றைப் பாடி இறையருள் பெற்றுய்யுங்கள். திருச்சிற்றம்பலம்.


1. தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஓதவேண்டிய பதிகம்:
திருமருகல் 'சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்' - (ஞானசம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=2018


2. திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:
ஞானசம்பந்தப் பெருமான் பெற்றோரை வணங்கிப் பாடிய திருக்கழுமலப் பதிகம்.
'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3024


3. கோள்களின் பாதிப்பகல:
சம்பந்தர் பாடிய கோளறு பதிகம்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=2085


4. வறுமை நீங்க, செல்வம் கொழிக்க:
சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் பதிகம்
"இடரினும் தளரினும்"
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3004


5. இனந்தெரியாத நோய்கள் நீங்க:
கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர் பாடியருளிய திருப்பாச்சிலாசிரமப்
பதிகம்.
'துணிவளர் திங்கள்'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1044


6. விடம் தீர்க்கும் பதிகம்:
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம்.
"ஒன்றுகொலாம்"
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4018


7. பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கச்சியேகம்ப பதிகம்
'ஆலந்தான் உகந்து அமுது செய்தானை'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7061


8. குரல்வளம்பெற, பேச்சுக்குறைபாடுகள் நீங்க:
மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய திருச்சாழல்
'பூசுவதும் வெண்ணீறு'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8112


9. குழந்தைகளின் பாதுகாப்புக்கு:
சுந்தரமூர்த்தியார் முதலை விழுங்கிய மதலையினை மீண்டும் உயிர்ப்பித்து மீட்ட திருப்புக்கொளியூர்ப் பதிகம்.
"எற்றான் மறக்கேன்"
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7092


10. தீராத வலிகளையும் போக்க:
அப்பர்பெருமானின் திருவதிகைப் பதிகம்
'கூற்றாயினவாறு விலக்ககலீர்'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4001


11. நோய்களும் துன்பங்களும் நீங்க:
கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய குளிர்காய்ச்சலைப் போக்கியருள பாடிய திருநீலகண்டப்பதிகம்.
'அவ்வினைக்கு இவ்வினையாம்'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1116
12. தன்னம்பிக்கை வளர:
அப்பர் பெருமானின் 'நாமார்க்கும் குடியல்லோம்'
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6098
மற்றும் ஆனை மிதிக்க வருகையில் பாடிய 'சுண்ணவெண் சந்தன' என்ற பதிகமும்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4002

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
13. இறையருளைப் பூரணமாகப் பெற:
அப்பரடிகளின் வடமொழி திருவுருத்திரத்தின் (ஸ்ரீருத்ரம்) தமிழ்ப்பெயர்ப்பான திருத்தாண்டகம்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6055
.
14. மரணபயம் நீங்க:
"தமிழ் மகா மிருத்துஞ்செய மந்திரம்" எனப்போற்றப்படும் அப்பர் பெருமானின் காலபாசத் திருக்குறுந்தொகை.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5092


15. பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:
மூவர்முதலிகளின் இறுதிப்பதிகங்களான
"காதலாகிக் கனிந்து",(சம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3049 "எண்ணுகேன் என்சொல்லி" (அப்பர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6099
"தானெனை முன்படைத்தான்" (சுந்தரர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7100


YAA MAA MAA -Thevaram
"யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"


இந்தப் பாடலின் முதல் வரியைப் படித்துவிட்டு, அப்படியே இரண்டாம் வரியை இறுதியிலிருந்து படித்துப்பாருங்கள். அப்படியே மாறி வருகிறது. இதில் ஏதாவது புரிகிறதா??


இது ஒரு தேவாரம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?


ஆம், அதுதான் உண்மை. திருஞானசம்பந்தப்பெருமானின் தமிழ் வன்மைக்கு ஒரு அற்புதமான சான்று தான் இது! மூன்றாம் திருமுறையில் "திருமாலைமாற்று" என்ற பெயரில் இத்தகைய பதினொரு பாடல்கள் அடங்கியுள்ளன. இலக்கண இலக்கியம் தெளிவாகக் கற்றோருக்கு மட்டும் புரியக்கூடிய வகையில் இயற்றப்படும் இவ்வகைப்பாடல்கள்,"மடக்கு" அல்லது "யமகம்" எனப்படும். காளமேகப்புலவர், அருணகிரிநாதர் போன்றோரும், இத்தகைய மடக்குகளை இயற்றுவதில் வல்லவர்கள்.


சரி, பாடலின் பொருள் என்ன, பார்ப்போமா?
முதலில் சந்திபிரித்துப் பார்ப்போம்,


யாம் ஆமா? நீ ஆம் ஆம், ஆயாழீ, காமா, காண் நாகா!
காணாகாமா, காழீயா, மா மாயா, நீ மா மாயா


யாம் ஆமா? = ஆன்மாக்களாகிய நாங்கள் எங்களைக் கடவுள் என்பதா?
நீ ஆம் ஆம் = ஆம், நீதான் கடவுள்!
ஆயாழீ = பெரிய யாழை மீட்டுபவனே (இதைப் பேரியாழ் என்பர்.)
காமா = பேரழகனே,
காண் நாகா! = அனைவருங் காண நாகங்களைப் பூண்டவனே!


காணா காமா = காமனைக் கண்ணால் காணமுடியாதவாறு (எரியச்) செய்தவனே, காழீயா = சீர்காழியில் உறைபவனே,
மா மாயா = மா எனப்படுகின்ற திருமகளின் கணவனான மாயோனே,
நீ மா மாயா! = மிகப்பெரிதான, மாயை முதலான மும்மலங்களிலிருந்து நீ எம்மைக் காப்பாயாக!


ஞானசம்பந்தப்பெருமான் எத்தனை அற்புதமான கருத்தை, நமக்கெல்லாம் பொருளே புரியாத இருவரிகளில் அடக்கிவிட்டார் பாருங்கள்! இப்படி இன்னும் பத்துப் பாடல்கள் உண்டு. அவை படிக்கப் படிக்கத் திகட்டாதவை.


மதம் சாராத மொழியை மதத்தோடு ஒட்டுவானேன்?எல்லா நெறிகளை வளர்த்தபோதும், தமிழ்மொழி, சைவத்துடன் மட்டும் விசேடமாகக் குறிப்பிடப்படுவது ஏனென்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இப்பாடலைப் படித்தபின் அது உங்களுக்கு நிச்சயம் நீங்கியிருக்கும்.


அப்படியும் நீங்காவிட்டால்,
இப்பதிகத்தின் இறுதியில் , "தமிழாகரன்" (தமிழே உடலெடுத்துவந்தவன்) என்றே சம்பந்தர் தன் முத்திரையை பதிப்பதன்மூலம், சைவத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ளுங்கள்!


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!


இங்கே முழுப்பதிகமும்...
http://www.tamilvu.org/slet/l4130/l4130son.jsp?subid=1902


இது கருநாடக் சங்கீத பிரியர்களுக்கு
http://www.youtube.com/watch?v=JxLWNmZ2b_4


முடிந்தால் இதையும் படியுங்கள்...
http://www.visvacomplex.com/MaalaiMaaRRu2.html