Announcement

Collapse
No announcement yet.

துலா மாதத் தர்ப்பணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துலா மாதத் தர்ப்பணம்

    notice

    Notice

    துலா மாதத் தர்ப்பணம். நமது பரந்தாமன் பஞ்சாங்கம் பக்கம் 17 தர்ப்பண தினங்கள் லிஸ்டில் இன்று 17/10/2014 துலாமாதத் தர்ப்பணம் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுளது அதைத்திருத்தி18/10/2014[தி]18/10/201அன்று துலா மாதத் தர்ப்பணம் என்று வாசிக்குமாறு அன்பர்கள்/மெம்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நேர்ந்த தவறுக்கு வருந்துகிறோம்




  • #2
    Re: துலா மாதத் தர்ப்பணம்

    ஶ்ரீ:

    ஶ்ரீஜய வருட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தில் இதுபோன்ற மேலும் சில தவறுகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்.
    இந்த முறை புரட்டாசி மாதத்திலேயே பஞ்சாங்கம் தயாரிக்கும் பணியை கிட்டத்தட்ட 50 சதவீதம் நிறைவுசெய்துவிட்டேன்
    எனவே தவறுகளை சரிசெய்யும் பணிக்கு நிறைய கால அவகாசம் கிடைக்கும் என்பதால், எம்பெருமான் க்ருபையால் தவறின்றி பஞ்சாங்கம் வெளியிட வாய்பாக அமையும் என்று கருதுகிறேன்.
    பஞ்சாங்கம் வெளிவந்தவுடன் அவற்றை விநியோகிக்கவேண்டிய பெரிய பணி இருப்பதால் உடனடியாக தவறுகளை ஆய்ந்து வெளியிட இயலவில்லை
    எனவே நமது பஞ்சாங்கம் உபயோகிக்கும் அன்பர்கள், பஞ்சாங்கம் வெளிவந்தவுடன் மற்ற பஞ்சாங்கங்களுடன் ஒப்பிட்டு தவறுகளை சுட்டிக்காட்டினால்
    மிகவும் முன்னதாகவே, அனைத்துத் தவறுகளையும் திருத்தி ஒரு இணையதள பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் அறிவிக்கலாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: துலா மாதத் தர்ப்பணம்

      எனது மதிப்புக்குரிய ஸ்ரீ NVS அவர்களுக்கு நமஸ்காரம் ,
      தாங்கள் ஒருவராகவே செய்துவரும் மாபெரும் பணியில் எதிபாராது தவறுகள் ஏற்படுவது சஹஜமே.
      தவறுகளை திருத்த சொன்னால் போதும் மேலும் தாங்கள் மன்னிப்புக் கோருவது இது தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது ,ஆனால் அவசியமில்லை என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
      தங்கள் நலங்கோரும்
      அன்பன்
      ப்ரஹ்மண்யன்,
      பெங்களூரு.
      Last edited by Brahmanyan; 17-10-14, 09:52.

      Comment


      • #4
        Re: துலா மாதத் தர்ப்பணம்

        ஶ்ரீ:
        கீழ்க்கண்ட விஷயங்களில் அன்பர்கள் மற்றும் மெம்பர்களின் கருத்தை அறியவும், பெரும்பான்மை கருத்தின்படி
        செயல்படுத்தவும் மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே தயவுசெய்து அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்யவும்.

        ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் கடந்த பத்து வருடங்களாகவே - மொத்தமாக வாங்குவோரிடம் நன்கொடை பெற்று
        குடும்பத்திற்கு ஒவ்வொன்று என இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் இதன் மூலம்
        பொருள் ஈட்டுவதல்ல. இதை சந்தைப்படுத்தி விலைக்கு விற்று லாபம் ஈட்டித் தருவதாக பலர் அடியேனைத்
        தொடர்புகொண்டனர் - அவர்களுக்கு அடியேன் இதுவரை இசைவு தெரிவிக்கவில்லை. வருமானத்திற்கு என
        முடிவுசெய்துவிட்டால், மேலும் சிலரைப் பணிக்கு அமர்த்தி, மேலும் பலமுறை சோதனைகளைச் செய்து
        சிறிதும் தவறின்றி வெளியிடலாம்.
        நம்முடைய பஞ்சாங்கத்தில் கணிணி மூலம் கணிக்கப்படும் தகவல்களான, திதி, வாரம், நக்ஷததிரம், யோகம், கரணம்
        இவற்றின் மணி அளவுகள் போன்றவற்றில் சிறிதும் பிழை ஏற்பட வாய்ப்பில்லை.
        ஆனால், மனித முயற்சிகொண்டு ஆராய்ந்து குறிக்கப்படவேண்டிய முஹூர்தங்கள், அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு
        போன்ற வ்ரத தினங்களில் முரண்பட்ட தகவல்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. காரணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு
        அளவுகோல் கொண்டு இவற்றை நிர்ணயம் செய்கின்றனர்.
        நமக்கென்று நாம் எந்த அளவுகோலையும் வைத்துக்கொள்ளவில்லை, பாரம்பர்யமான புத்கங்களில் உள்ள நிர்ணயத் தகவல்களின்
        அடிப்படையில் கணித்து எழுதி வருகிறோம்.

        எனவே கீழ்க்கண்ட தகவல்களில் உபயோகிப்பாளர்களிடமிருந்து ஏற்புடைய கருத்துக்கள் கிடைத்தால் அவற்றை பரிசீலிக்கலாம்.

        01. ஏற்கனவே பல பஞ்சாங்கங்கள் இருக்கிறபடியால் ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் வெளியிடத் தேவையில்லை நிறுத்திவிடலாம்
        02. தவறுகள் சகஜம், சில குறைபாடுகளுக்காக இந்த ஸேவையை நிறுத்தத்தேவையில்லை, தொடர்ந்து வரும் ஆண்டுகளில்
        தவறுகள் இன்றி வெளியிடவும், நிறுத்தவேண்டாம்.
        03. அச்சாவதற்கு முன் ஈமெயில் மூலம் பஞ்சாங்க நகல் ஒன்று அனுப்பினால் பிழைகள் திருத்திக்கொடுத்து உதவிசெய்கிறோம்.
        04. அச்சுவடிவில் இன்றி, மென்-நூல் (soft copy) ஆக மட்டும் வெளியிடலாம்.
        05. சந்தைப்படுத்தி, லாபநோக்ககின்றி குறைந்த விலையில் தரமாக அச்சிட்டு அனைத்துக் கடைகளிலும் கிடைக்கச்செய்யலாம்.
        06. மேற்கண்டவை தவிர தங்கள் சொந்த அபிப்ரயாம் எதுவாயினும் தெரிவிக்கலாம்.

        இதில் 5வது ஐயிட்டத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,
        புத்தகம் கமர்ஷியலாக தயாரிப்பதற்கே சற்று கூடுதலாகச் செலவாகும், விலை என்று போட்டால், அச்சகக்காரர்களும் அதிகக் கட்டணம்
        வசூலிப்பர், அரசாங்கத்திற்கு வரி செலுத்தவேண்டும், தயாரிக்க உதவியாளர், கடைகளில் கொண்டுபோய் விநியோகிக்க ஆகும் செலவு,
        தவிர கடைக்காரர்கள், புத்தகத்தை எந்த விலைக்கு எடுத்துக்கொள்கிறார்களோ அதைப்போல் இருமடங்கு விலை நிர்ணயம் செய்து
        அதில் ப்ரசுரிக்கவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். அதாவது நம் தயாரிப்பை நூல் ஒன்று 20 ரூபாய் கடைக்காரரிடமிருந்து
        எதிர்பார்த்தால், புத்தகத்தின் விலை ரூ 40 என்று அச்சிட்டுத் தரவேண்டும்.
        இலவசமாக பஞ்சாங்கங்கள் விநியோகிக்க இயலாது.
        எனவே, அன்பர்கள் அனைத்து விதமாகவும் ஆராய்ந்து தங்கள் ஆதரவினைத் தெரிவிக்கவேண்டுமாகப் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.
        தாஸன்
        என்.வி.எஸஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: துலா மாதத் தர்ப்பணம்

          ஸ்ரீ திரு ப்ரம்மண்யன் சாருடைய கருத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் தவறுக்கு வருந்துவது இயல்பாயினும் மன்னிப்பு கோறுவது ம்ஹூம் ஏற்றுக்கொள்ள முடியாததும் எங்களை வருத்தத்திலாழ்த்தும் செயலுமாகும்

          Comment


          • #6
            Re: துலா மாதத் தர்ப்பணம்

            தவறுகள் சகஜம், சில குறைபாடுகளுக்காக இந்த ஸேவையை நிறுத்தத்தேவையில்லை, தொடர்ந்து வரும் ஆண்டுகளில்
            தவறுகள் இன்றி வெளியிடவும், நிறுத்தவேண்டாம்.

            Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/9475-துலா-மாதத்-தர்ப்பணம்#ixzz3GNbHkNoX
            ஸ்ரீ தற்போது உள்ள முறை சிறப்பாக உள்ளதாகத்தான் எனக்குப்படுகிறது

            Comment


            • #7
              Re: துலா மாதத் தர்ப்பணம்

              ஶ்ரீ:
              மதிப்பிற்குரிய திரு.ப்ரஹ்மண்யன் அவர்களுக்கும்,
              அன்பிற்கினிய, பேருதவியாளப் பெருந்தகை ஶ்ரீமான் சௌந்தரராஜன் அவர்களுக்கும்
              தங்கள் தொடர்ந்த ஆதரவினைத் தெரிவித்துள்ளமைக்கும்,
              தவறைப் பெருந்தன்மையாக பாவிக்கும் பாங்கிற்கும்
              அனந்தமான தெண்டன் ஸமர்ப்பித்த விஜ்ஞாபனங்களை உரித்தாக்குகிறேன்.
              ஆயினும், இதுபோன்று தவறிழைத்துவிடுவோமோ என்று அஞ்சியே
              பெரும் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகளை தவிர்த்து - தனித்து நிற்கிறேன்.


              தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே!
              தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே!
              நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - ஒன்று மனசாட்சி
              ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா!!

              தாஸன்,
              என்.வி.எஸ்
              Last edited by bmbcAdmin; 17-10-14, 12:23.


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                கார்த்திகை மாதப்பிறப்பும் தவறாக உள்ளளத&#

                ஶ்ரீ:
                ஐப்பசி மாதப்பிறப்பு - ஐப்பசி 1ம் தேதி (18-10-2014) என பஞ்சாங்க பகுதியிலும்
                தர்பண லிஸ்டில் 17-10-2014 என்றும் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளதுபோலவே
                கார்த்திகை மாதப்பிறப்பும் - ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் உட்பகுதியில் (கார்த்திகை மாதத்தில்) 17-11-2014 கார்த்திகை மாதம் 1ம் தேதியன்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
                ஆனால் தர்ப்பண லிஸ்ட் தயாரிக்கும்போது நவம்பர் 16ம் தேதி தர்பணம் என தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.
                இவற்றை சரியாகத் திருத்திக்கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

                மேலும் கீழுள்ளவை சரியான தேதிகளாகும்:
                கார்த்திகை அமாவாசை - 22-11-2014
                மார்கழி மாதப்பிறப்பு - 16-12-2014
                மார்கழி அமாவாஸை - 21-12-2014
                தை மாதப்பிறப்பு - உத்தராயண புண்யகாலம் - 15-01-2015
                தை அமாவாஸை - 20-01-2015
                மாசி மாதப்பிறப்பு - 13-02-2015
                மாசி அமாவாஸை - 18-02-2015
                பங்குனி மாதப்பிறப்பு - 15-03-2015
                பங்குனி அமாவாஸை - 20-03-2015
                சித்திரை மாதம் - வருடப்பிறப்பு விஷு புண்யகாலம் - 14-04-2015

                தாஸன்,
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment

                Working...
                X