Announcement

Collapse
No announcement yet.

விஷ்ணு சஹஸ்ரநாமம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    மகா பாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது ஸ்ரீகிருஷ்ண பகவான், அர்ஜுனன் மற்றும் தர்மர் ஆகியோர் பீஷ்மரைக் காண வந்தார்கள். புனிதரான பீஷ்மருக்கு அப்போது தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அவரை அருள்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். எவருக்கும் கிடைக்காத இந்த ஆனந்த தரிசனத்தைக் கண்டு திக்குமுக்காடிய பீஷ்மர், ஆயிரம் விஷ்ணு நாமாக்களைச் சொல்லி அந்த வேளையில் கிருஷ்ண பகவானை பிரார்த்தித்தார். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம்.ஆயிற்று.
    விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ' ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ' என்று ஒரு வரி வரும்.
    விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள ஆயிரம் நாமாக்களை நம்மால் சொல்ல முடியாமல் போனாலும், அதில் இடம் பெற்றிருக்கும் இந்த ராம நாமத்தை மட்டும் ஜபித்தாலே ஆயிரம் நாமாக்களை உச்சரித்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
    --- தினமலர் .பக்திமலர். ஜூன் 6, 2013.
Working...
X