Announcement

Collapse
No announcement yet.

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எ&

    ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் நிலத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அரசின் வருடாந்திர விவசாய கண்காட்சியில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு முறையும் சிறந்த முறையில் மகசூல் செய்தமைக்கும், தரமான கதிர்களை மகசூல் செய்தமைக்கும் அரசாங்கத்தின் விருதும் பதக்கமும் தவறாமல் அவர் பெற்று வந்தார்.


    அவரின் சாதனை பற்றி கேள்விப்பட்ட ஒரு நாளிதழ் அவரை பேட்டியெடுக்க தன் நிருபரை அனுப்பியது. நிருபர் விவசாயியிடம் பேச்சு கொடுத்தபோது அவர் செய்து வரும் ஒரு வினோத விஷயத்தை புரிந்துகொண்டார். அதாவது அவருடைய உயர்ரக விதைளை அந்த விவசாயி தன் பக்கத்திலும் தன்னைச் சுற்றிலும் நிலம் வைத்திருப்பவர்களிடம் கூட பகிர்ந்து வந்திருக்கிறார். பொதுவாக ஒருவர் இப்படி செய்வது அரிது.




    “விவசாய கண்காட்சியில் உங்களுடனே போட்டியாக வரும் உங்கள் பக்கத்து நிலத்துகாரர்களுடன் எப்படி உங்களால் உங்கள் உயர்ரக விதைகளை பகிர்ந்துகொள்ள முடிகிறது? ஆச்சரியமாக இருக்கிறதே …”


    “இதிலென்ன சார் ஆச்சரியம்…? காற்று பலமாக வீசும்போது நன்கு விளையும் கதிர்களில் இருந்து மகரந்தங்களை எடுத்து சென்று பக்கத்து நிலங்களில் வீசுவது வழக்கம். என்னுடைய அண்டை நிலைத்தவர்கள் மட்டமான தரமற்ற கதிர்களை விளைவித்தால் மகரந்தச் சேர்க்கையானது என் பயிர்களையும் பாதிக்கும். எனவே என்னுடைய கதிர்களின் தரம் பாதிக்கப்படும்.”


    “எனவே நான் நல்ல தரமான கதிர்களை விளைவிக்க வேண்டும் என்றால், நான் என் அண்டை நிலத்தவர்களும் நல்ல கதிர்கள் விளைவிக்க உதவ வேண்டும். எனவே தான் தரமான நல்ல விதிகளை அவர்களுக்கும் கொடுத்து பகிர்ந்துவருகிறேன்!” என்று விளக்கமளித்தார்.


    என்ன ஒரு அற்புதமான விளக்கம். “நான் நல்ல பயிர்களை விளைவிக்கவேண்டும் என்றால் என் பக்கத்தில் உள்ளவர்களும் நல்ல பயிர்களை விளைவிக்கவேண்டும்.”


    வாழ்க்கையின் தொடர்புத்திறனை இதைவிட அற்புதமாக எவரும் விளக்கமுடியாது.


    மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ விரும்புகிறவர்கள், தங்களை சுற்றியிருப்பவர்களும் அவ்வாறு வாழ உதவிடவேண்டும். விரும்பவேண்டும். அங்கு தான் உங்கள் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது. நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று சுயநல வாழ்க்கை வாழ்பவர்கள் எந்த காலத்திலும் நிம்மதியாக வாழமுடியாது.


    இறைவன் மிகவும் வெறுப்பது சுயநலக்காரர்களைத் தான். பாவிகளை கூட அல்ல. ஏனெனில், நொடிப் பொழுதில் உணர்ச்சிவசப்பட்டு பாவம் செய்கிறவர்கள் அநேகம். சுயநலம் அப்படிப்பட்டதல்ல. அது பிறவிக் குணம். திட்டமிட்டு வளர்க்கப்படுவது.


    இறைவன் மிகவும் வெறுப்பது சுயநலக்காரர்களைத் தான். பாவிகளை கூட அல்ல. ஏனெனில், நொடிப் பொழுதில் உணர்ச்சிவசப்பட்டு பாவம் செய்கிறவர்கள் அநேகம். சுயநலம் அப்படிப்பட்டதல்ல. அது பிறவிக் குணம். திட்டமிட்டு வளர்க்கப்படுவது.


    ஒருவர் வாழும் வாழ்க்கையின் மதிப்பு அது மற்றவர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ அதைக்கொண்டே இறைவனால் மதிப்பிடப்படுகிறது.


    நீங்கள் கார், பங்களா, பேன்க் பாலன்ஸ், எஸ்டேட்டுகள் வைத்திருக்கலாம். ஆனால் உங்களை சுற்றியிருப்பவர்களின் (உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிகிறவர்கள், வேலைக்காரர்கள்) இவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்களா? அப்படி ஏற்படுத்தியிருந்தால், உங்கள் செல்வம் என்றும் அழிவை சந்திக்காது. மேன்மேலும் விருத்தியடையும்.


    கொடுத்து கெட்டவனும் வைத்திருந்து வாழ்ந்தவனும் சரித்திரத்தில் என்றுமே இல்லை.


    - See more at: http://rightmantra.com/?p=14293#sthash.Sc7t2mha.dpuf
Working...
X