Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 4 of 4

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
 1. #1
  Super Moderator Crown soundararajan50's Avatar
  Join Date
  Jun 2012
  Location
  Tiruvannamalai
  Age
  68
  Posts
  8,622
  Downloads
  18
  Uploads
  0
  Rep Power
  975
  Font Size

  Default வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! &a

  கந்தசஷ்டி துவங்கி நடைபெற்றுவருகிறது. வரும் செவ்வாயன்று சூர சம்ஹாரம். கந்த சஷ்டி நிறைவு நாள். கந்தசஷ்டியை முன்னிட்டு முருகனின் அருள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி செய்யும் தொடரை அவன் திருவுளப்படி ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். புத்தம் புது தகவல்கள், வித்தியாசமான செய்திகள், அரிய பாடல்கள், எளிய உபாயங்கள், வியக்க வைக்கும் நிஜ அனுபவங்கள் என இந்த தொடர் துன்பத்தில் உழல்பவர்கள் அனைவருக்கும் அருமருந்தாய் இருக்கும்.
  கேட்பது மட்டுமல்ல கேட்க நினைப்பதை கூட அள்ளித் தரும் கற்பகத்தருவாம் கந்தன் கழலை பற்றுவோம் வாருங்கள்…!!
  கந்தனிடம் செல்லுங்கள் – என்ன வேண்டும் சொல்லுங்கள்
  வந்த வினை தீர்ந்து விடும் – மற்றவற்றைத் தள்ளுங்கள்!
  (கந்தசஷ்டியை முன்னிட்டு சென்னை போரூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலுக்கு தினமும் சென்று வருகிறோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.)
  ‘உடைப்பு அடைய அடைத்து உதிரம் நிறைத்து…’ சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம்!
  சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்ப பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு.சேதுராமன் (58). எளிமையான கட்டுக்கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
  ஒரு காலை சமையலறையில் பிஸியாக இருந்த பாக்யலக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலைசுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
  அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்யலக்ஷ்மி.
  மருத்துவமனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன.

  “அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐ.சி.யு. அறைக்கு வெளியே அழுது அரற்றிக்கொண்டிருக்க, கணவர் செய்வதறியாது திகைத்து நின்றார். “டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப்போகிறார்களோ? ஆண்டவா…. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போதும்… என்று தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்.
  ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. மாலை அனைத்து ரிப்போர்ட்டுகளும் வந்து சேர்ந்தன.
  இதய நோய் பிரிவின் சீஃப் டாக்டரை சென்று பார்த்தபோது, அவர் மனைவிக்கு ஏற்பட்டது ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று தெரிவித்தார்.
  இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே.

  (அன்னை பார்வதி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் அலங்காரம்)
  இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
  “சார்… நாங்க ஆர்டினரி மிடில் கிளாஸ் ஃபாமிலி. எங்களால எவ்ளோ செலவு பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம். எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்….”
  “சார்… இங்கே அந்த FACILITIES இல்லை. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. நாளைக்கு எடுத்துடுறோம். அதை பார்த்தப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம். நீங்க பணத்தை ரெடி பண்ணனுமேன்னு தான் இதை இப்போ சொன்னேன். எதுக்கும் நீங்க வேற ஏதாச்சும் பெரிய ஆஸ்பிடல் ட்ரை பண்ணுங்க…. டிலே பண்ற ஒவ்வொரு மணிநேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து” என்று கூறிவிட்டு போய்விட்டார்.
  இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
  விஷயம் கேள்விப்பட்டு பாக்யலக்ஷ்மியின் தோழி கீதா நங்கநல்லூரிலிருந்து பாக்யலக்ஷ்மியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்.
  “என்னென்னமோ சொல்றாங்களே… பயமாயிருக்கு எனக்கு… என் பிள்ளைகளையும் ஹஸ்பெண்டையும் அனாதையா விட்டுட்டுட்டு போய்டுவேன் போலிருக்கே கீதா….”
  “நீ ஒன்னும் கவலைப்படாதே பாக்கி…. இதோ நான் ஒரு ஸ்லோகம் புஸ்தகம் தர்றேன் அதை சொல்லிண்டே இரு போறும்…. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறியபடி ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரத்தை தர, அதை ஆச்சரியத்தோடு வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.
  கடலில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளிப்பவனுக்கு பிடித்துக்கொள்ள ஒரு கயிறு கிடைத்தால் அதை எப்படி கெட்டியாக பற்றிகொள்வானோ அதே போல பாக்யலக்ஷ்மி அதை கெட்டியாக பற்றிக்கொண்டார்.
  ‘வேல்மாறல்’ ஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவர், 14 வது ஸ்லோகமாக வரும்,

  திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
  உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும் (14)


  வரிகளை படித்தவர், என்ன நினைத்தோரோ ஏதோ ஒரு INTUITION ல் திரும்ப திரும்ப அதே வரிகளை படிக்க ஆரம்பித்தார். மேற்படி வரிகளை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டவர் அன்று முழுதும் திரும்ப திரும்ப எண்ணற்ற முறைகள் சொல்லியபடி இருந்தார்.
  மறுநாள் காலை பாக்கியிருந்த ஒரே டெஸ்ட்டையும் முடித்துவிட்டு, மாலை அதன் ரிசல்ட்டுக்காக காத்திருந்தபோது, சீப் டாக்டர் உடனடியாக அழைக்க திரு.சேதுராமன் உடனே அவர் அறைக்கு விரைந்தார்.
  “மிஸ்டர்.சேதுராமன், WHAT A MIRACLE IS THIS…! உங்க மனைவியோட இதயம் இப்போ ரொம்ப நார்மலா ஹெல்தியா இருக்கு. அடைப்பு இருந்ததுக்கான சுவடே தெரியலே. ஒரே நாள்ல என்ன நடந்தது எப்படி இது நடந்ததுன்னு புரியலே. லேப்ல கூட ஒரு தரம் போய் ரெபர் பண்ணினேன். இ.சி.ஜி. கூட இன்னொரு முறை எடுத்துப் பார்த்தோம். SHE NO NEEDS ANY SURGERY. REALLY IT IS A MEDICAL MIRACLE. WHAT HAPPENED?” என்று சொல்ல, இவர்… “முருகா” என்று அலறியே விட்டார்.
  முந்தைய தினம், அவர் தோழி ஒருவர் வந்து ‘வேல்மாறல்’ என்னும் ஸ்லோகத்தை படிக்கும்படி சொல்லிச் சென்றதும், அதில் ஒரு குறிப்பிட்ட அடியை இவர் திரும்ப திரும்ப சொல்லிவந்ததையும் கூறினார்.
  அந்த மருத்துவர் மிகவும் நல்லவர்… பக்திமான் போல. அனைவருக்கும் இந்த பயன் போய் சேரட்டும் என்று இதய நோய் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் ‘வேல்மாறல்’ புத்தகத்தை மறுநாள் வரவழைத்து கொடுத்தார். பலர் வியக்கத்தக்க அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.
  அதெப்படி ‘வேல்மாறல்’ ஸ்லோகமும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட வரிகளும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது ?
  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
  உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்
  மேற்படி வரிகளை திரும்ப திரும்ப படியுங்கள்.
  திரைக்கடலை … அலைகள் வீசும் கடலை
  உடைத்து … பிளந்து, உடையும் … உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
  உடைப்பை அடைய அடைத்து … உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
  நிறை புனர் கடிது குடித்து … சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
  உதிரம் நிறைத்து விளையாடும் … வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் குகன் வேலே.
  இப்போது புரிகிறதா?
  (இது சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உண்மையில் நடந்தது.
  வேல்மாறல்’ என்றால் என்ன?
  அதை அருளியது யார்?
  அதை எப்படி பாராயணம் செய்யவேண்டும்?
  அதை பாராயணம் செய்தால் என்னென்ன கிடைக்கும்?
  வேறு யாராவது பாக்யலக்ஷ்மி அவர்களைப் போல, பாராயணம் செய்து பலன் பெற்றிருக்கிறார்களா?
  அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 2
  - See more at: http://rightmantra.com/?p=14355#sthash.sGgrCx3i.dpuf

  Dear you, Thanks for Visiting Brahmins Net!
  JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

  Last edited by soundararajan50; 28-10-2014 at 09:34 PM.

 2. Dear Unregistered,Welcome!

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •