Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-2

    க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் Continued
    अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
    एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥
    அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |
    ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||
    அத்⁴யாத்ம ஜ்ஞாந நித்யத்வம் = ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை
    தத்த்வஜ்ஞாந அர்த² த³ர்ஸ²நம் = தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு
    ஏதத் ஜ்ஞாநம் = இவை ஞான மெனப்படும்
    யத் அத: அந்யதா² அஜ்ஞாநம் = இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்
    இதி ப்ரோக்தம் = என்று சொல்லப் பட்டது
    ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.


    ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
    अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥
    ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே |
    அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||
    யத் ஜ்ஞேயம் = எது அறியப் படவேண்டியதோ
    யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்தால்
    அம்ருதம் அஸ்²நுதே = சாகாமல் இருப்பானோ
    தத் ப்ரவக்ஷ்யாமி = அதை விளக்கிக் கூறுவேன்
    அநாதி³ மத் = அநாதியாகிய
    பரம் ப்³ரஹ்ம = பரப்பிரம்மம்
    ஸத் ந உச்யதே = “சத்” என்பதுமில்லை
    அஸத் ந = “அசத்” என்பதுமில்லை
    ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத்” என்பதுமில்லை, “அசத்” என்பதுமில்லை.


    सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
    सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥
    ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
    ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||
    தத் ஸர்வத: பாணிபாத³ம் = அது எங்கும் கைகால்களுடையது
    ஸர்வதோ அக்ஷி ஸி²ர; முக²ம் = எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது
    ஸர்வத: ஸ்²ருதிமத் = எங்கும் செவியுடையது
    லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்ட²தி = உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.
    அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.


    सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
    असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥१३- १४॥
    ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் |
    அஸக்தம் ஸர்வப்⁴ருச்சைவ நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு ச || 13- 14||
    ஸர்வ இந்த்³ரிய கு³ண ஆபா⁴ஸம் = எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது
    ஸர்வ இந்த்³ரிய விவர்ஜிதம் = எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது
    ச அஸக்தம் ஏவ = பற்றில்லாதது
    ஸர்வப்⁴ருத் ச = அனைத்தையும் பொறுப்பது
    நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு = குணமற்றது; குணங்களைத் துய்ப்பது
    எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.


    बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
    सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥
    ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
    ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||
    பூ⁴தாநாம் அந்த: ப³ஹி: ச = பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது
    சரம் அசரம் ஏவ ச = அசரமும் சரமுமாவது
    தத் ஸூக்ஷ்மத்வாத் = நுண்மையால்
    அவிஜ்ஞேயம் = அறிய முடியாதது
    அந்திகே ச = அருகில் இருப்பது
    தூ³ரஸ்த²ம் ச தத் = தூரமானது
    பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.


    अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
    भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥
    அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
    பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||
    ஜ்ஞேயம் தத் = அறியத் தக்க அது (பிரம்மம்)
    பூ⁴தேஷு அவிப⁴க்தம் ச = உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல்
    விப⁴க்தம் இவ ச ஸ்தி²தம் = பிரிவுபட்டதுபோல் நிற்பது.
    பூ⁴தப⁴ர்த்ரு = பூதங்களைத் தாங்குவது
    ச க்³ரஸிஷ்ணு = அவற்றை உண்பது
    ச ப்ரப⁴விஷ்ணு = பிறப்பிப்பது
    உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.


    ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
    ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥
    ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
    ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||
    தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி: = ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி
    தமஸ: = இருளிலும்
    பரம் ஜ்ஞாநம் = உயர்ந்த ஞானம்
    ஜ்ஞேயம் = அறியத் தக்கது
    ஜ்ஞாநக³ம்யம் = ஞானத்தால் எய்தப்படுபொருள்
    ஸர்வஸ்ய ஹ்ருதி³ விஷ்டி²தம் = எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது
    உச்யதே = என்று கூறப் படுகிறது
    ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.


    इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
    मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥
    இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
    மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||
    இதி க்ஷேத்ரம் = இங்ஙனம் க்ஷேத்திரம்
    ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச = அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்)
    ஸமாஸத: உக்தம் = சுருக்கமாகச் சொல்லப் பட்டது
    மத்³ப⁴க்த: ஏதத் விஜ்ஞாய = என் பக்தன் இதையறிந்து
    மத்³பா⁴வாய உபபத்³யதே = எனது தன்மையை அடைகிறான்
    இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.


    प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
    विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥
    ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |
    விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||
    ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ⁴ ஏவ = பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும்
    அநாதீ³ வித்³தி⁴ ச = அநாதி (ஆரம்பம் இல்லாதது) என்றுணர்
    விகாராந் ச = வேறுபாடுகளும்
    கு³ணாந் அபி = குணங்களும்
    ப்ரக்ருதிஸம்ப⁴வாந் ஏவ = பிரகிருதியிலேயே பிறப்பன என்று
    வித்³தி⁴= அறிந்து கொள்
    பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.


    कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
    पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥
    கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே |
    புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||
    கார்ய கரண கர்த்ருத்வே = கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில்
    ப்ரக்ருதி ஹேது: உச்யதே = பிரகிருதியே காரணம் என்பர்
    ஸுக² து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே = சுக துக்கங்களை அனுபவிப்பதில்
    புருஷ: ஹேது உச்யதே = புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்
    கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.


    पुरुषः प्रकृतिस्थो हि भुङ्*क्ते प्रकृतिजान्गुणान् ।
    कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥
    புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்*க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் |
    காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||
    ப்ரக்ருதிஸ்த²: ஹி = பிரகிருதியில் நின்றுகொண்டு
    புருஷ: = புருஷன் (ஜீவாத்மா)
    ப்ரக்ருதிஜாந் கு³ணாந் பு⁴ங்*க்தே = பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான்
    கு³ணஸங்க³: = குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே
    அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு = இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக்
    காரணம் = காரணமாகிறது
    புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.


    उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
    परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥
    உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: |
    பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||
    உபத்³ரஷ்டா அநுமந்தா ச = மேற்பார்ப்போன், அனுமதி தருவோன்
    ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: = சுமப்பான், உண்பான், மகேசுவரன்
    இதி அஸ்மிந் தே³ஹே பர புருஷ: = இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன்
    பரமாத்மா அபி ச உக்த: = பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்
    மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
    Continued
Working...
X