Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதிமூன்றாவது அத்தியாயம் 13-3

    க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் Continued
    य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
    सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥१३- २३॥
    ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை: ஸஹ |
    ஸர்வதா² வர்தமாநோऽபி ந ஸ பூ⁴யோऽபி⁴ஜாயதே || 13- 23||
    ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச = இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும்,
    கு³ணை: ஸஹ = அதன் குணங்களையும்
    ய: வேத்தி = எவன் அறிகிறானோ
    ஸ: ஸர்வதா² வர்தமாந: அபி = அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும்
    பூ⁴ய: ந அபி⁴ஜாயதே = மறு பிறப்பில்லை
    இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.


    ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
    अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे ॥१३- २४॥
    த்⁴யாநேநாத்மநி பஸ்²யந்தி கேசிதா³த்மாநமாத்மநா |
    அந்யே ஸாங்க்²யேந யோகே³ந கர்மயோகே³ந சாபரே || 13- 24||
    கேசித் ஆத்மாநம் ஆத்மநா = சிலர் ஆத்மாவில், ஆத்மாவால்
    த்⁴யாநேந ஆத்மநி பஸ்²யந்தி = தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள்
    அந்யே ஸாங்க்²யேந யோகே³ந = பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்
    அபரே கர்மயோகே³ந ச = பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்
    சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.


    अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
    तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥१३- २५॥
    அந்யே த்வேவமஜாநந்த: ஸ்²ருத்வாந்யேப்⁴ய உபாஸதே |
    தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்²ருதிபராயணா: || 13- 25||
    து அந்யே ஏவம் அஜாநந்த: = வேறு சிலர் இவ்வாறு அறியாமல்
    அந்யேப்⁴ய ஸ்²ருத்வா = அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை
    உபாஸதே ச = வழிபடுகிறார்கள்
    தே ஸ்²ருதிபராயணா: அபி = அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின்
    ம்ருத்யும் அதிதரந்தி ஏவ = மரணத்தை வெல்வார்
    இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.


    यावत्संजायते किंचित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
    क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥१३- २६॥
    யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் |
    க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா³த்தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ || 13- 26||
    ப⁴ரதர்ஷப⁴: = பரதக்காளையே
    யாவத் கிஞ்சித் ஸ்தா²வர ஜங்க³மம் = எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும்
    ஸத்த்வம் ஸஞ்ஜாயதே = பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ
    தத் க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம்யோகா³ந் = அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது
    வித்³தி⁴ = என்று அறி
    பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.


    समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
    विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥
    ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் |
    விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||
    ய: விநஸ்²யத்ஸு ஸர்வேஷு பூ⁴தேஷு = எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும்
    அவிநஸ்²யந்தம் ஸமம் திஷ்ட²ந்தம் = அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும்
    பரமேஸ்²வரம் = பரமேச்வரனை
    பஸ்²யதி = பார்க்கிறானோ
    ஸ: பஸ்²யதி = அவனே காட்சி உடையவன்
    எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.


    समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
    न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥
    ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் |
    ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||
    ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தம் ஈஸ்²வரம் = எங்கும் சமமாக ஈசன் நிற்பதை
    ஸமம் பஸ்²யந் = சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன்
    ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி = தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான்
    தத: பராம் க³திம் யாதி = அதனால் பரகதி அடைகிறான்
    எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.


    प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
    यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥
    ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: |
    ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||
    ச ய: = மேலும் எவன்
    ஸர்வஸ²: கர்மாணி = எங்கும் தொழில்கள்
    ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணாநி = இயற்கையாலேயே செய்யப்படுகின்றன
    ததா² ஆத்மாநம் அகர்தாரம் பஸ்²யதி = ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே
    ஸ: பஸ்²யதி =காட்சியுடையான்
    எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்


    यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
    तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥
    யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி |
    தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||
    யதா³ பூ⁴த ப்ருத²க் பா⁴வம் = எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை
    ஏகஸ்த²ம் = ஒரே ஆதாரமுடையன
    தத: ஏவ விஸ்தாரம் ச = அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும்
    அநுபஸ்²யதி = காண்கிறானோ
    ததா³ ப்³ரஹ்ம ஸம்பத்³யதே = அப்போது பிரம்மத்தை அடைகிறான்
    பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.


    अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
    शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥
    அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: |
    ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    அநாதி³த்வாத் = ஆதியின்மையால்
    நிர்கு³ணத்வாத் = குணமின்மையால்
    அயம் பரமாத்மா அவ்யய: = இந்தப் பரமாத்மா கேடற்றான்
    ஸ²ரீரஸ்த²: அபி = இவன் உடம்பிலிருந்தாலும்
    ந கரோதி = செயலற்றான்;
    ந லிப்யதே = பற்றற்றான்
    ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.


    यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
    सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥१३- ३२॥
    யதா² ஸர்வக³தம் ஸௌக்ஷ்ம்யாதா³காஸ²ம் நோபலிப்யதே |
    ஸர்வத்ராவஸ்தி²தோ தே³ஹே ததா²த்மா நோபலிப்யதே || 13- 32||
    யதா² ஸர்வக³தம் ஆகாஸ²ம் = எங்குமிருந்தாலும் ஆகாசம்
    ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே = தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல்
    ததா² தே³ஹே = அவ்வாறே உடம்பில்
    ஆத்மா ஸர்வத்ர அவஸ்தி²த: = ஆத்மா எங்கணுமிருந்தாலும்
    ந உபலிப்யதே = பற்றுறுவதிலன்
    எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.


    यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
    क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥१३- ३३॥
    யதா² ப்ரகாஸ²யத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: |
    க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா² க்ருத்ஸ்நம் ப்ரகாஸ²யதி பா⁴ரத || 13- 33||
    பா⁴ரத = பாரதா
    யதா² ஏக: ரவி = எப்படி சூரியன் ஒருவனாய்
    இமம் க்ருத்ஸ்நம் லோகம் = இவ்வுலக முழுவதையும்
    ப்ரகாஸ²யதி = ஒளியுறச்செய்கிறானோ
    ததா² க்ஷேத்ரீ = அதுபோல் க்ஷேத்திரத்தை யுடையோன்
    க்ருத்ஸ்நம் க்ஷேத்ரம் ப்ரகாஸ²யதி = க்ஷேத்திரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்
    சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் க்ஷேத்திரத்தை யுடையோன், க்ஷேத்திரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.


    क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
    भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥१३- ३४॥
    க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா |
    பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம் || 13- 34||
    ஏவம் க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ: = இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள
    அந்தரம் = வேற்றுமையையும்
    பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச = ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும்
    யே ஜ்ஞாநசக்ஷுஷா விது³ = எவர்கள் ஞானக் கண்ணால்
    தே பரம் யாந்தி = அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்
    ஞானக் கண்ணால் இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोगो नाम त्रयोदशोऽध्याय: || 13 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதிமூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X