Announcement

Collapse
No announcement yet.

நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரி

    information

    Information

    மனுஷனுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னா அதை சில அறிகுறிகள் வெச்சி தெரிஞ்சிக்கலாம். ‘கேடு வரும் பின்னே மதி கெட்டுவிடும் முன்னே’ அப்படின்னு பொதுவா சொல்வாங்க.
    சனிபெயர்ச்சி அல்லது ஜோதிட ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட ஆரம்பிக்கும். நவக்கிரகங்கள் நம்மை ஆட்டிபடைத்து தீய பலன்களையோ நல்ல பலன்களையோ தருவது எப்படித் தெரியுமா? நம் மனதில் தோன்றும் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி தான். எண்ணம் மாறினாலே எல்லாமே மாறிவிடுமே






    notice

    Notice

    “கிரகங்களின் பெயர்ச்சிப்படி தான் எண்ணங்கள் மாறுகிறது அதன்படி தான் எல்லாம் நடக்கிறது என்றால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?”னு சொல்லி தப்பிக்க முடியாது. அதை எதிர்த்து போராடவேண்டும். நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நல்லவர்களின் நட்பை வலிய சென்று பிடித்துக்கொள்ளவேண்டும். (இது பற்றி விரிவா அப்புறம் சொல்றேன்.) அப்போ கிரகங்களின் தாக்கம் நல்லதே ஏற்படுத்தும்






    சரி…. முதல்ல கெட்ட நேரம் வரப்போவதற்கான அறிகுறிகள் எவை எவை என்பதை பார்ப்போம்







    4) தகுதியற்றவர்களிடம் கிடைக்கும் ஏச்சும் பேச்சும்
    ஒரு சிலர் தங்களுக்கு கெட்ட நேரம் வந்து தாங்கள் அழிந்துகொண்டிருப்பதை கூட தெரிந்துகொள்ளாத நிலையில் இருப்பார்கள். தங்கள் அறிவுக்கும் தகுதிக்கும் திறமைக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களிடமெல்லாம் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். அவர்களால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வாழ்ந்து வருவார்கள். (இதைத் தான் விதி வலியதுன்னு சொல்றாங்களோ?)
    5) எதற்கெடுத்தாலும் கோபம்
    எதற்கு எடுத்தாலும் கோபமும் எரிச்சலும் வரும். ஒரே ஒரு விஷயத்தை மனசுல வெச்சிகோங்க. இயலாமை எங்கே இருக்கோ அங்கே தான் கோபம் இருக்கும். இயலாமை எங்கே இருக்கும்? சந்தர்ப்பங்களை கோட்டை விட்டவர்களிடம்!
    6) பெற்றோரை கடிந்துகொள்வது
    அப்பா அம்மா, கூடப் பொறந்தவங்க, நல்லது சொன்னா.. கோபப்பட்டு அவங்க கூட வாக்குவாதத்துல இறங்குறது, சண்டை போடுறது அவங்களை திட்டுறது…. இதெல்லாம் ‘கெட்ட நேரம் வரப்போது’ என்பதற்கான பெரிய அறிகுறி தான். நாம் செய்றது தான் கரெக்ட் அப்படின்னு இந்த நேரங்கள்ல தோணும்..
    7) குறுக்கு வழியில் முன்னேறும் ஆர்வம்
    கெட்ட நேரம் வந்தாச்சு என்பதற்கு முக்கிய அறிகுறி இது. உழைப்பின் மீது நம்பிக்கை அகன்று குறுக்கு வழிகளின் மீது நம்பிக்கை பிறக்கும். இந்த உலகில் பலரின் அழிவுகளுக்கும் இதுவே காரணம். குறுக்கு வழியில் வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பது.
    தன்னுடைய உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பியோ அல்லது தவறானவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பியோ செயலாற்ற முனைவது, பேரழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். சிலர் அடுத்தவர்களை அழித்து அந்த இடத்தில் தான் கோட்டை கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கட்டினால் அது உங்கள் நிச்சயம் கோட்டையாக இருக்கமுடியாது. உங்கள் சமாதியாகவே இருக்கும்.
    8) தீய விஷயங்களில் நாட்டம்
    மனம் தீய விஷயங்களில் நாட்டம் செலுத்த துவங்கும். அதாவது சான்றோர்கள் தீயவை என்று ஒதுக்கிவைத்த விஷயங்களின் மீது மனம் நாட்டம் செலுத்த துவக்கிவிடும். உதாரணத்துக்கு குடி, விலைமகளிர் தொடர்பு, சூது, களியாட்டம், பெருந்தீனி இவைகளை மனம் லயித்து செய்யும். “ஆஹா.. இதுவன்றோ வாழ்க்கை. இத்தனை நாள் அனுபவிக்காம விட்டுட்டோமே…!” என்று கூட மனம் குதூகலிக்கும்.
    உன்னை பலவீனப்படுத்தும் எதையும் உன் கால் விரலால் கூட தீண்டாதே என்று கூறுகிறார் விவகானந்தர். வள்ளுவரோ, ஒரு படி மேல போய் இதெல்லாம் நெருப்புன்னு நினைச்சி ஒதுக்கிடு அப்படிங்கறார்.
    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும். (குறள் 202)



    9) கடவுள் பக்தி, ஆன்மிகம் போன்ற நல்ல விஷயங்களில் நாட்டம் குறைவது
    இதுல ரெண்டு மூணு பிரிவு இருக்கு.
    முதல் பிரிவு
    (அ) சாத்தான் வரப்போகிற மனசுல கடவுளுக்கு எங்கே இடம் இருக்கப்போகுது? அதர்மவாதிகளின் வாதங்களை கேட்டு கேட்டு ஆன்மிகம், ஆலய தரிசனம், விரதங்கள், போன்ற விஷயங்களில் நாட்டம் குறைந்துவிடும். இது போன்ற விஷயங்களின் அருமையை எடுத்து கூறுபவர்களிடம் கூட எடக்கு மடக்காக பேசுவார்கள். அவர்களை புறக்கணிப்பார்கள்.


    இரண்டாம் பிரிவு
    (ஆ) சில பேருக்கு ஒரேயடியா கடவுள் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் குறையவில்லை என்றாலும் மனம் இங்கும் அங்கும் தடுமாறும்.
    பாதி மனதை தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
    மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா….
    என்று கண்ணதாசன் பாடிய பாடலின் நிலை தான் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சற்று மனவுறுதியுடன் செயல்பட்டால் ஜெயித்துவிடலாம்.
    மூன்றாம் பிரிவு
    (இ) இன்னும் சில பேருக்கு கடவுள், பக்தி, ஆன்மிகம் போன்ற விஷயங்களில் ஆர்வம் என்பது சிறிதும் குறையாது. கோவில், குளம், அது இதுன்னு போய்கிட்டு தான் இருப்பாங்க. சாமி கும்பிட்டுக்கிட்டும் இருப்பாங்க. ஆனா இந்த பக்கம் பார்த்தீங்கன்னா அதுக்கு நேர்மாறானவர்களுடனும் தொடர்பு வெச்சிருப்பாங்க.
    அதாவது படிக்கிறது இராமாயணம்… பழகுறது பெருமாள் கோவில் இடிக்கிறவங்களோட என்பது தான் இவர்கள் பாலிசி. நூறு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வர்ற புண்ணியத்தை இந்த பக்கம் ஒரு பாவியை பார்த்துட்டு தொலைச்சிடுவாங்க.
    “நல்லோர் தரிசனம் பாப விமோசனம்” என்பது பெரியோர் வாக்கு.
    நல்லவங்களை பார்த்தாகூட புண்ணியம் தான் என்று சொன்ன பெரியோர்கள் தீயோர்கள் நிழல் நம்ம மேல பட்டா கூட கொடியது அப்படின்னு சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா?




    10) தீயோர்கள் என்பவர்கள் யார் யார்?
    கீழ்கண்ட குணங்களை கொண்டிருப்பவர்களே தீயோர். இந்த குணங்கள்ல ஒன்னு இருந்தா கூட போதும் ஒருத்தன் தான் அழியுறதுக்கும் கெட்டுபோறதுக்கும் கூட இருக்குறவங்களையும் சேர்த்து அழிக்கிறதுக்கும்.
    1. தற்பெருமை கொள்ளுதல்.
    2. பிறரை கொடுமை செய்தல்.
    3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.
    4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
    5. பொய் பேசுதல்
    6. கெட்ட சொற்களைப் பேசுதல்
    7. நல்லவர்களைப் போல் நடித்தல்
    8. புறம் பேசுதல்
    9. பாரபட்சமாக நடத்துதல்
    10. வாக்குறுதியை மீறல்
    11. பொய் சாட்சி கூறுதல்
    12. அற்ப ஆதாயத்துக்காக பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்
    13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
    14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
    15. குறை கூறுதல்
    16. வதந்தி பரப்புதல்
    17. கோள் சொல்லுதல்
    18. பொறாமைப்படுதல்
    19. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல்



    இந்த குணங்கள் இருக்குறவங்க கிட்டே பழகிக்கிட்டு இருக்கீங்களா? முதல்ல அதை கட் பண்ணுங்க. உங்க நல்ல நேரம் அந்த நொடியே ஆரம்பமாயிடும்.
    அல்லது இந்த குணங்களெல்லாம் (ஒரு சில இருந்தாக்கூட) உங்க கிட்டே இருக்கா? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலே… இருந்தா மாத்திக்கோங்க.
    திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது!
    நல்ல நேரம் வரப்போறதுக்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்!



    - See more at: http://rightmantra.com/?p=2412#sthash.678STLn7.dpuf
Working...
X