Announcement

Collapse
No announcement yet.

கட்டடத்துக்குள் கடல்...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கட்டடத்துக்குள் கடல்...

    உலகின் பரப்பளவில் மிக விசாலமான கட்டடத்தை சீனா கட்டி முடித்துள்ளது.
    மனிதனால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டடம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது சீனா. இந்த நியூ செஞ்சுரி குளோபல் சென்டர். 1.7 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு. அதாவது, ஒரு மொனாகோ நகரத்தின் பரப்பளவு. 20 சிட்னி ஒபேரா இல்லங்களுக்கு சமமான பரப்பளவு, 500 மீ, நீளம் 400 மீ, அகலம்; 100 மீ உயரம் என்று பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது இக்கட்டடம். ஷாப்பிங்மால், 14 ஸ்கிரீன் கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்கள், ஆயிரம் அறைகள் கொண்ட இரண்டு 5 ஸ்டார் ஓட்டல்கள், சொர்க்கத்தீவு எனும் ஒரு மிகப்பெரிய நீர்ப்பூங்கா, 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய செயற்கையான கடற்கரை. சிசுவன் மாகாணத்தில் இருந்து கடலுக்கு குளிக்கப் போவதென்றால் ஆயிரம் கி.மீட்டர்கள் கடக்க வேண்டுமாம்.
    அதற்காக ஒரு குட்டிக்கடலையே இந்த கட்டடத்துக்குள் உருவாக்கி விட்டார்கள் இதன் கட்டடகலைஞர்கள். 24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் படரும் அளவுக்கு செயர்கையாக உருவாக்கப்பட்ட சூரியன், ராட்சத எல்.இ.டி ஸ்கிரீன் கொண்ட அரங்குகள் என்ற அசத்தும் இக்கட்டடம் கடந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது.
    --- தினமலர். 4. 8. 2013.
Working...
X