Announcement

Collapse
No announcement yet.

five

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • five

    Courtesy: Sri.Tamilselvan
    ஐந்தாய் அமைந்தவை
    .
    * பஞ்ச புராணம்:- தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
    * பஞ்ச கங்கை:- ரத்ன கங்கை, தேவ கங்கை, கயிலாய கங்கை, உத்ர கங்கை, பிரம்ம கங்கை.
    * பஞ்ச ரிஷிகள்:- அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.
    * பஞ்ச குமாரர்கள்:- விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.
    * பஞ்ச நந்திகள்:- போக நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி.
    * பஞ்ச மூர்த்திகள்:- விநாயகர், முருகர், சிவன், அம்பாள், சண்டிகேசுவரர்.
    * பஞ்சாபிஷேகம்:- வில்வ இலை கலந்த நீர், ரத் தினங்கள் இடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கிராம்பு, விளாமிச்சை வேர் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம், தர்ப்பைப்புல் இடப்பட்ட நீர், பழச்சாறு கலந்த நீர்.
    * பஞ்ச பல்லவம்:- அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.
    * பஞ்ச இலைகள்:- வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கு, கிளுகை.
    * பஞ்ச உற்சவம்:- நித்திய உற்சவம், வார உற்சவம், பட்ச உற்சவம் (மாதம் இரு முறை), மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
    * பஞ்ச பருவ உற்சவம்:- அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி, மாதப் பிறப்பு.
    * பஞ்ச பூதங்கள்:- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
    * பஞ்ச சபைகள்:- ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை. * பஞ்ச ஆரண்யம்:- உஷக் காலம், கால சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.
    * சிவபெருமானின் சிரசு:- தத்புருஷம், அகோரம், ஸத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்.
    * பஞ்ச மாலைகள்:- இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.
    * பஞ்சாங்கம்:- திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
    * பஞ்சாமயக்ஞம்:- பிரம்மயக்ஞம், பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம், மானுஷயக்ஞம்.
    * பஞ்ச ரத்தினங்கள்:- வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
    * பஞ்ச தந்திரங்கள்:- மித்திர பேதம், சுகிர் லாபம், சந்திவிக்கிரகம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.
    * பஞ்ச வர்ணங்கள்:- வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
    * பஞ்ச ஈஸ்வரர்கள்:- பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன். * பஞ்ச கன்னியர்கள்:- அகலிகை, திரவுபதி, சீதை, மண்டோதரி, தாரை.
    * பஞ்ச பாண்டவர்கள்:- தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
    * பஞ்ச ஹோமங்கள்:- கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.
    * பஞ்ச சுத்திகள்:- ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தி
    * பஞ்ச கோசம்:- அன்மைய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
    * பஞ்ச கவ்யம் (கோமாதா):- பால், தயிர், கோமியம், சானம், நெய்.
    * பஞ்சலோகம்:- தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.
    * பஞ்சாப்-ஜீவ நதிகள்:- ஜீலம், ரவி, சட்லெஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.
    * மஹாவிஷ்ணுவின் ஆயுதங்கள்:- சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.
    * ஐவகை நிலங்கள்:- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
    * ஐம்பெரும் காப்பியங்கள்:- மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.
    * பஞ்ச மகா பாதகங்கள்:- காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.
    * பஞ்ச சயனம்:- அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.
    * பஞ்ச புராண ஆசிரியர்கள்:- (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்), மாணிக்கவாசகர், கரு ஆர்த்தேவர், சேத்தனார், சேக்கிழார்.
    * காயத்திரியின் ஐந்து முகங்கள்:- பிரம்மன், விஷ்ணு, சதாசிவன், ருத்ரன், ஈஸ்வரன்.

  • #2
    Re: five

    Sri:
    Good collection of treasures in five.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X