Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினான்காவது அத்தியாயம் 14 [2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினான்காவது அத்தியாயம் 14 [2]

    குணத்ரய விபாக யோகம்


    Continued
    रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
    तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥१४- १५॥
    ரஜஸி ப்ரலயம் க³த்வா கர்மஸங்கி³ஷு ஜாயதே |
    ததா² ப்ரலீநஸ்தமஸி மூட⁴யோநிஷு ஜாயதே || 14- 15||
    ரஜஸி ப்ரலயம் க³த்வா = ரஜோ குணத்தில் இறப்போன்
    கர்மஸங்கி³ஷு ஜாயதே = கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான்
    ததா² தமஸி ப்ரலீந: = அவ்வாறே, தமஸில் இறப்போன்
    மூட⁴யோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்
    ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.


    कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
    रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥१४- १६॥
    கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் |
    ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||
    ஸுக்ருதஸ்ய கர்மண: = நற்செய்கையின்
    ப²லம் து ஸாத்த்விகம் = பயனே சத்வ இயல்புடைய
    நிர்மலம் ஆஹு: = நிர்மலத் தன்மை என்று கூறுவர்
    ரஜஸ: ப²லம் து³:க²ம் = ரஜோ குணத்தின் பயன் துன்பம்
    தமஸ: ப²லம் அஜ்ஞாநம் = தமோ குணத்தின் பயன் அறிவின்மை
    சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.


    सत्त्वात्संजायते ज्ञानं रजसो लोभ एव च ।
    प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥१४- १७॥
    ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப⁴ ஏவ ச |
    ப்ரமாத³மோஹௌ தமஸோ ப⁴வதோऽஜ்ஞாநமேவ ச || 14- 17||
    ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே = சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது
    ரஜஸ: லோப⁴ ஏவ ச = ரஜோ குணத்தினின்றும் அவாவும்
    தமஸ: ப்ரமாத³ மோஹௌ ச = தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
    அஜ்ஞாநம் ஏவ ப⁴வத: = அஞ்ஞானமும் தோன்றுகின்றன
    சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.


    ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
    जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥१४- १८॥
    ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்⁴யே திஷ்ட²ந்தி ராஜஸா: |
    ஜக⁴ந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ⁴ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||
    ஸத்த்வஸ்தா² : ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி = சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள்
    ராஜஸா: மத்⁴யே திஷ்ட²ந்தி = ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள்
    ஜக⁴ந்ய கு³ண வ்ருத்திஸ்தா²: = மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க்
    தாமஸா: அத⁴: க³ச்ச²ந்தி = தாமஸர் கீழே செல்வர்
    சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.


    नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
    गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥१४- १९॥
    நாந்யம் கு³ணேப்⁴ய: கர்தாரம் யதா³ த்³ரஷ்டாநுபஸ்²யதி |
    கு³ணேப்⁴யஸ்²ச பரம் வேத்தி மத்³பா⁴வம் ஸோऽதி⁴க³ச்ச²தி || 14- 19||
    யதா³ த்³ரஷ்டா கு³ணேப்⁴ய: = எப்போது பார்ப்பவன் குணங்களை
    அந்யம் கர்தாரம் ந அநுபஸ்²யதி = தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ
    கு³ணேப்⁴ய: ச பரம் வேத்தி = குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ
    ஸ: மத்³பா⁴வம் அதி⁴க³ச்ச²தி = அவன் என் இயல்பை அறிவான்
    குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.


    गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
    जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥१४- २०॥
    கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் |
    ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்²நுதே || 14- 20||
    தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் = உடம்பிலே பிறக்கும்
    ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத்ய = இந்த மூன்று குணங்களையும் கடந்து
    ஜந்ம ம்ருத்யு ஜரா து³:கை²: = பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும்
    விமுக்த: அம்ருதம் அஸ்²நுதே = விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்
    உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.


    अर्जुन उवाच
    कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
    किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥१४- २१॥
    அர்ஜுந உவாச
    கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ |
    கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே || 14- 21||
    அர்ஜுந உவாச ப்ரபோ⁴! = அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே
    ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத: = மூன்று குணங்களையும் கடந்தோன்
    கை: லிங்கை³: ப⁴வதி = என்ன அடையாளங்களுடையவன்?
    ச கிமாசார: = எங்ஙனம் ஒழுகுவான்?
    கத²ம் ஏதாந் த்ரீந் கு³ணாந் அதிவர்ததே = இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?


    श्रीभगवानुवाच
    प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
    न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥१४- २२॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட³வ |
    ந த்³வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||
    ஸ்ரீப⁴க³வாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    பாண்ட³வ = பாண்டவா
    ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ = ஒளி, தொழில், மயக்கம் – இவை
    ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும்போது
    ந த்³வேஷ்டி = இவற்றைப் பகைத்திடான்
    நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி = நீங்கியபோது இவற்றை விரும்பான்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.


    उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
    गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥१४- २३॥
    உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே |
    கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||
    ய: உதா³ஸீநவத் ஆஸீந: = புறக்கணித்தான் போலே இருப்பான்
    கு³ணை: ந விசால்யதே = குணங்களால் சலிப்படையான்
    கு³ணா: ஏவ வர்தந்தே இதி = குணங்கள் சுழல்கின்றன என்று
    ய: அவதிஷ்ட²தி = எவன் எண்ணி இருக்கிறானோ
    ந இங்க³தே = அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை
    புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.


    समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
    तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥१४- २४॥
    ஸமது³:க²ஸுக²: ஸ்வஸ்த²: ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: |
    துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: || 14- 24||
    ஸ்வஸ்த²: ஸமது³:க²ஸுக²: = தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன்
    ஸம லோஷ்ட அஸ்²ம காஞ்சந: = ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன்
    ப்ரிய அப்ரிய: துல்ய தீ⁴ர: = இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்
    துல்ய நிந்தா³ ஆத்ம ஸம்ஸ்துதி: = இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்
    துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.


    मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
    सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥१४- २५॥
    மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: |
    ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே || 14- 25||
    மாநாபமாநயோ: துல்ய: = மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான்
    மித்ரா அரிபக்ஷயோ: துல்ய: = நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்
    ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ = எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான்
    ஸ: கு³ணாதீத: உச்யதே =அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்
    மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.


    मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
    स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥१४- २६॥
    மாம் ச யோऽவ்யபி⁴சாரேண ப⁴க்தியோகே³ந ஸேவதே |
    ஸ கு³ணாந்ஸமதீத்யைதாந்ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 14- 26||
    ச ய: அவ்யபி⁴சாரேண = மேலும் எவன் வேறுபாடில்லாத
    ப⁴க்தியோகே³ந மாம் ஸேவதே = பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ
    ஸ: ஏதாந் கு³ணாந் ஸமதீத்ய = அவன் இந்த குணங்களைக் கடந்து
    ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்
    வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.


    ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
    शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥१४- २७॥
    ப்³ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச |
    ஸா²ஸ்²வதஸ்ய ச த⁴ர்மஸ்ய ஸுக²ஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||
    ஹி அவ்யயஸ்ய ப்³ரஹ்மண: ச = ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும்
    அம்ருதஸ்ய ச = சாவற நிலைக்கும்
    ஸா²ஸ்²வதஸ்ய த⁴ர்மஸ்ய ச = என்றும் இயலும் அறத்துக்கும்
    ஐகாந்திகஸ்ய ஸுக²ஸ்ய = தனிமையின்பத்துக்கும்
    அஹம் ப்ரதிஷ்டா² = நானே உறைவிடம்
    சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे गुणत्रयभागयोगो नाम चतुर्दशोऽध्याय: || 14 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘குணத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X