Announcement

Collapse
No announcement yet.

Azwargal amudham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Azwargal amudham

    Yogitha Jaisankar
    ஆழ்வார் அமுது

    குலசேகர ஆழ்வார்

    முழுதும் வெண்ணெய் அளைந்துதொட்டு
    உண்ணும்
    முகிழ்இ ளம்சிறுத் தாமரைக் கையும்,
    எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு
    எள்கும்
    நிலையும், வெண்தயிர் தோய்ந்தசெவ்
    வாயும்,
    அழுகை யும், அஞ்சி நோக்கும்அந் நோக்கும்,
    அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப்
    பதுவும்,
    தொழுகை யும்இவை கண்ட அசோதை
    தொல்லை இன்பத்து இறுதிகண்டாளே

    முற்றும் வெண்ணெயைக் குழப்பி எடுத்துச் சாப்பிடும் மூடிய சின்ன இளந் தாமரை போன்ற கையும், அழகிய கயிறு கொண்டு தாய் அடிக்கும்பொழுது அஞ்சுகின்ற தன்மையும், வெண்மையான தயிர் படிந்திருக்கின்ற சிவந்த வாயும், அழுகையும், அஞ்சிப் பார்க்கின்ற அந்தப் பார்வையும், அழகான சிவந்த சின்ன வாயை நெளிக்கும் முறையும், தொழுவதும் ஆகிய இவற்றைக் கண்ட அசோதையானவள் தான் கண்ணனைப் பெற்ற பழைய இன்பத்தின் எல்லையை அடைந்தாள்.

    SOURCE; YOGITHA JAISANKAR
Working...
X